மேகமானவள்
மேகமானவள்


மேகம் போன்றவள் அவள்
மனதை வருடி
காதல் மழை தருவாள் என்று எண்ணினேன்
மனதை திருடி
கண்ணில் மழை தந்து சென்றுவிட்டாள்
ஊமை மேகமாய்
வெண்மேகம்
கருவாகி கருப்பாகி
தன் மழலை மழையை
மண்ணின் மடியில் தவழ விடுவாள்
அது போலவே அவளும்
மேகத்திடம் ஏது முகவரி
இவளிடமும் இல்லை முக வரி
கருப்பு மையினால் தீட்டப்பட்ட
இவளின் ஓவியம் கூட வெண்மேகமாய் பளிச்சிடும்
சுயம்வரத்தில் மேகத்திற்காக
மின்னலும் இடியும் போட்டியாளர்களாக
ஆனால் என்னவோ காற்று வென்று விட்டது
நானும் இங்கே போட்டியாளனாக மட்டுமே
மேகம் போன்றவள் அவள்