கடல் - காதல் !
கடல் - காதல் !


கரை தேடி ஓடி வந்தே
கரம் பற்றி அழைத்துச் செல்லும்
அலைக் கன்னியவளின்
அன்பிலே நனைந்திட்ட
காற்றும் ஆங்கே
களி நடம் புரியவே
அலையுடன் காற்றோ
அல்லது
காற்றுடன் அலையா
பிரித்தறியா நெஞ்சங்கள்
அன்பில் நனைந்து
அன்பினை நினைந்து
மணலில் போடும்
எழில் கோலங்களுக்கு
சங்குகளும் சிப்பிகளும்
சோழிகளும்
வண்ணம் கூட்ட
இயற்கையின்
தெவிட்டாக் காதல்
இனிதே அரங்கேற்றம் !