கண்பேசி
கண்பேசி


இத்தனை கூர்மை!
எந்த ஷார்ப்னரில்...
சீவினாய்!
உன் பார்வையை!
இப்படிக்கு...
காயம்பட்ட இதயம்!
கண்களால்...
களையெடுக்கும்!
கலை...
எங்கு கற்றாய்!
எனக்கே...
இப்போதுதான் தெரிகிறது!
வானவில் வண்ணத்தில்....
அந்த அழகிய!
காதல் ரோஜா!
பூத்து...
எத்தனை நாளாகிறதோ!
புலம்பியபடி புறளும்..
உள்ளம்!
இரவு பகல்..
பாறாது!
பார்வையின்...
பாஷைகளை!
பாரரியும்!
உன் மௌனத்தின்....
என் மொழிபெயர்ப்பு!
எந்தளவிற்கு சரியென்று...
நீயே
கூறு!
விழி போட்ட!
விடுகதையின்..
விடை!
நான்...
தேர்ச்சி பெற்ற விவரம்!
தெரிந்துகொள்ள
அதிகரிக்கும் ஆர்வம்!
உயிரை தொட்ட..
உறவே!
இனியும் ஏனோ..
பிரிவே!
என் இதய வாசல்..
காத்திருக்கு!
இனிதே வரவேற்க!
வலது காலெடுத்து
வைத்து வா...
இனியவளே!
இனி அவளே!