கனவுலகின் மர்மங்கள்
கனவுலகின் மர்மங்கள்


கனவுகள் மர்மமானவை
மந்திரம்போல் மயங்க வைக்கும்
தந்திரமாய் ஒழிந்துக்கொள்ளும்...
என்ன நடந்தாலும் கேட்பாரில்லை
கண்முன் நடப்பதை தடுக்க முடியாது
எப்படி ஓடியும் கடக்க முடியாது...
பாம்பு தீண்டும்
பரிட்சைக்கு தாமதமாகும்
இறந்தோர் பேசுவர்
இருப்போர் மறிப்பர்...
விந்தையான கனவுலகிலிருந்து
விழித்தாலும் மறையாது பல
தோண்டினாலும் கிடைக்காது சில...
கனவுலகின் அத்தனை திசையும்
காரணமின்றி மனதை பிசையும்...
தப்பித்து கண்விழித்து காரணம் தேடி
கிடைத்த அர்த்தங்கள் நூறுகோடி...
உறங்கும்போது காணும்
நல்ல கனவை ஆசீராய் ஏற்று
கெட்ட கனவை எச்சரிக்கையாய் எடுத்து...
உறங்கவிடாமல் செய்யும்
வருங்கால கனவை
நிறைவேற்றுவோம் நிஜ உலகில்...