கலாம் வழி பாதை
கலாம் வழி பாதை
கால் கடுக்காத தூரம்
நான் நடந்து போகையிலே
சிறுமி அவள் கந்தலுடை
கட்டியே அரசு பள்ளி
சென்றாளே!
செல்லும் வழியொன்றை
புத்தகப் பரிந்துரைநேரம்
கடந்து போகாமல் இருக்கவே
சிறுமியிடம் வழி கேட்கவே
ஓடையொன்றை அவள்
கடந்து தினமும் பள்ளி
செல்வது போலவே
கை பிடித்து அழைத்து
சென்றாளே!
கல்வி விளக்கு வேண்டி
ஓடை தாண்டி செல்ல
வேண்டிய தேவையில்
ஆயிரக்கணக்கான கிராமங்கள்
"ql-align-justify">இருக்கையில் அந்நிய நாட்டு
மோகத்தில் சுயநல படிப்பறிவுவாதிகள்
எங்கோ ஒரு மூலையில்
இணையதளத்தில் கிராமங்கள்
முன்னேற மின்புத்தகம்
எழுதுவதேனோ! பேசுவதேனோ!
களத்தில் இறங்காமல் காயங்கள்
படாமல் வெற்றிக்கனிகள்
பறிக்க இயலுமா!
நல்ல புத்தகங்கள் பரிந்துரைக்கும்
நேரமிது!
தாய்நாட்டு மண்ணில்
தாய்மொழிக்கென
நல்புத்தகங்கள் படைப்பவர்
யாருளர் என்றே விடியல் உலகம்
கலாம் வழி தேடி காத்திருக்கிறது!