STORYMIRROR

DEENADAYALAN N

Abstract Drama

4  

DEENADAYALAN N

Abstract Drama

காதல் 1,2,3 !

காதல் 1,2,3 !

1 min
361



காதல்1: என்...ன? இன்னும் சொல்...லவே இல்லையா! (வடிவேல் ஸ்டைலில்)


காதலர் தினம் வந்தது

காதலனும் வந்து விட்டேன்.

காதலி மட்டும் வரவில்லை!

ஓ…காதலை இன்னும்

சொல்லவே இல்லயே!




காதல்-2:      ஆளுக்குப் பாதி!


ஆயிரம்…

காதலர் தின

வாழ்த்து அட்டைகள்!

அவள் கையில்

அவன் திணித்தான்.!


அவ்வளவு காதலா என்மேல்!

ஆசையாய்க் கேட்டாள் அவள்


‘இல்லை இல்லை இல்லை

அனைத்தையும் விற்போம்.

லாபத்தில் ஆளுக்குப் பாதி!




காதல்-3:     குரு பார்வை!


‘எந்தவரன் வந்தாலும்

தட்டுகிறது உமாவிற்கு

குருபார்வை சரியில்லை’

கவலைப் பட்டாள் அம்மா!


அன்று மாலை பூங்காவில்

காதல் கடிதம் எடுத்துவந்து

உமாவிடம் கொடுத்து விட்டு

பல்லிளித்து நின்றான்

பக்கத்து வீட்டு குரு!








Rate this content
Log in

Similar tamil poem from Abstract