கார்த்திகைத் தீபங்களாய்
கார்த்திகைத் தீபங்களாய்

1 min

2.8K
வெண்மை மாக் கோலமிட்டு
வீதியெங்கும் ஓளி வீசிடும்
கார்த்திகைத் தீபங்களாய்
என் வாழ்வில் இன்று நீ!
மனமெங்கும் சூழ்ந்த இருளை
நீக்கும் அகல் விளக்கின்
தீயின் நுனியினில்
சீராக சுடர் எழுந்திட
நம்பிக்கை ஊட்டிடும்
நறுமண எண்ணெயாக
காதலுடன் என்னிதயத்தில்
தழும்பி நிற்கின்றாய்!
உன் பார்வைப் பொறியினில்
சட்டென பற்றிக் கொண்ட
காதல் தீபத்தினை
ஏனடா குளிர்வித்தாய்?
மறுபடியும் தீபச் சுடர்
என்று நீ ஏற்றிடுவாய்?