காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
சில பயணங்கள் அயர்ச்சியைத் தரும்...
சில பயணங்கள்..வீணாகி போன நாளின் உணர்வை விட்டுச்செல்லும்....
சில பயணங்கள் மட்டுமே..நிறைவாய்....ஆச்சரியங்களையும்...தேடல்களையும். தூவிவிட்டுச்செல்லும்....
முழுதாய் அறிய வேண்டும்.....தொண்டைமானில் தொடங்கி அண்ணாதுரையிலான பயணம் படிக்க வேண்டும்...
பதஞ்சலியின் உறவு அறியவேண்டும்.. யோகக்கலை தாண்டிய உறவு இருப்பின்..அதுவும் தெரிய வேண்டும்...
சங்கயிலக்கியம் என்ன சொல்லிட்டு என படித்துப்பார்க்க வேண்டும்...
கோவில்களின் வரலாறு அறிய வேண்டும்... ஆயிரத்தில் பல்லவரின் கணக்குத் த
ெரிய வேண்டும்......சோழரதும் கூட.... கட்டத்தூண்டிய உந்துதல் அறிய வேண்டும்......ஸ்தலப்புராணங்களையும் சேர்த்து...நம்புவதும் நம்பாததும் வேற கணக்கு...
சமணத்தின் தாக்கம் அறிய வேண்டும்... துளுவ குலத்தின் பங்களிப்பு படிக்க வேண்டும்...
ஆங்கிலேயருடையதையும் சேர்த்து....
வரலாறு படிக்க வேண்டும்.... கடந்த காலத்தில்..அவ்வப்போது வாழவேண்டும்...இனிவரும் நாட்களில்....யார் யாரோ நடந்த பாதைகளில்...உலா வரவேண்டும்....
ஆசைப்படவேண்டும்....மேலும் மேலும் வரலாறு தெரிய ஆசைபடவேண்டும்.........பிரம்மிப்புகொடுக்கும் அந்த போதைக்காக.......நாளைய அசைப்போடுதலுக்காக....