காலை பொழுது
காலை பொழுது
விடியற்காலை வேலையிலே
சேவற்கூவும் நேரத்திலே
மார்கழி மாதப்பணியிலே
வானத்திலே பறவைகள் சிறகடித்து பறக்க
பட படவென்று தட்டு தடுமாறி விழிக்கும் விழிகளே....
கண் இமைகளிலே தென்படும் முதல் முகம் நீதானே..
காலை கதிரின் ஒளியிலே...
காற்றிலே இசை அமைக்க
செடி கொடிகள் பூக்களும் நடனமாட சில்லென்று காற்றடித்து
மூச்சிலே என் சுவாசமாய்
என்னுளே புகுந்து வாசமாய் வீசும்
என் பூங்கதிரே..
நீ இன்றி பொழுது விடியுமோ...