இயற்கயன்னை
இயற்கயன்னை
மரம்
எனக்குள்ளே புகை மண்டலம்
நான் விடும் மரண மூச்சு
எனக்கே கேட்கிறது!
ஆக்சிஜன் உருவாக்கியான
எனக்கு சிகரெட் புகையால்
யாதொரு பயனும் இல்லை
என்பதை எப்போது உணர்வார்!
உலகெங்கும் காற்று மாசு
அதிகரிக்க பழையன
கழிதலும் போய் புகுதலின்
முறைதான் காரணமோ!
நன்னூலின் இலக்கணங்கள்
வாழ்க்கைப் பாடத்திற்கு
சில சமயங்கள் ஒத்துவராதது ஏனோ!!1
பழையன கழிதல் முறையின்படி
வள்ளுவத்தின்படி கடைபிடிக்காமல்
சாதிமத உடை உடுத்தி
அழகு பார்க்கும் சமுதாயம்
திருந்துமோ!
மானத்தை மறைக்க உடை
உயிருக்கு தேவை அன்பு
இதுவே உலக இயல்பாக
இருந்தால் வானமும்
எட்டிப்பிடிக்கும் தூரம்தான்
என்பதை மறந்தால்
நிலமும் நீராகும்!
மலையும் மடுவாகும்
என்பதை உணர்வாரோ!!