இயற்கை காதல்
இயற்கை காதல்

1 min

23K
ஏகாந்தம் எங்கும் சூழ
கீழ்வானத்தினை தொட்டுவிட
எத்தனித்தே ஓடும்
சாலையின் வளைவுதனில்
எழிலாய் ஆங்கோர் காதல் காட்சி !
மலை முகம் தனை
மெல்லிய நீர்த்துளிகள் கொண்டே
முத்தமுட்டு விட்டு
நாணமதுவும் ஆட்கொள்ள
ஓடோடிச் செல்ல எத்தனித்து
தவறி விழுந்ததோ மேகங்கள்?
நெடிதுயர்ந்த மலையின் முகமதில்
தன் முகம் மறைத்தே
அரங்கேற்றும் காதல் காவியமதில்
பித்தாகிப் போய் இலயித்தே நிற்கின்றேன் !
காதலதை என்னுள் நிறைக்கின்றேன் !