இவளுக்காகவே
இவளுக்காகவே


உயிர் கசக்கி எழுதுவாள்,
அழகான சொல்லெடுத்து,
மொழிக்கு உயிரூட்டி,
கண்களில் மழைக்கட்டும் போதெல்லாம்,
தாட்களும் பேனாவும் மட்டுமே
ஆறுதல்-இன்பமே அவளின் துன்பத்தை மிஞ்சியது!
தாய் பாசம் சுவைத்ததில்லை; தந்தையின் அள்ளித்தரும் அறிவுரைகளை உள்வாங்கியதில்லை;
உடன் பிறந்தோர் யாருமில்லை;
தனக்கு அனாதை என்று பெயர் சூட்டிக்கொண்டாள்!
வலிக்கு கவி மட்டுமே மருந்து என்பாள்!
ஏமாற்றத்துக்கு எழுத்து மட்டுமே உண்மைத் துணையென்பாள்!
தனித்தே வாழ்பவள்
எழுதும் கதைகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதால்!
மெய்யாக இருந்ததால்
காதலும் அவளை ஏமாற்றியது!
தமிழுக்காகவும் எழுத்துக்காகவும்
தன் வாழ்க்கையை அர்பணித்தாள்!
சமூகம் அவளைவிட்டுப்
பத்தடி தள்ளியே நின்றது!
சமூக வளைதளமே அவளின் எழுத்துக்களுக்கு
அடித்தளமாக விளங்கியது!
ஒருநாள்,
தான் எழுதிய வாழ்க்கைக் கதையொன்று
படமாக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தது!
களிப்படையாமல் தன் வாழ்க்கை வரலாற்றை
ஊர் பார்க்கும் என்று அமைதிக்காத்தாள்!
மொத்த ஊரும் படம் பார்த்து
மலைத்து போயினர்
கவிபுலவி யென்றது!