STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Drama Classics

4  

Shakthi Shri K B

Abstract Drama Classics

இதுவும் ஒரு காதல் தான்

இதுவும் ஒரு காதல் தான்

1 min
227

கவலைகளை மறைந்து விட நீ என் வாழ்வில் வந்தாய்,

உன்னை எண்ணுகையில் மனம் மட்டற்ற மகிழ்ச்சி பெறுகிறது.

நீ என்னை மாற்றிய ஒரு அற்புதத் சக்தி,

உன் செயல்களால் நீ என்னை ஈர்த்தாய் காந்தமாக.

கால்களின் அசைவுகள் ஒவ்ஒன்றிலும் நான் இசை ஒளியை உணர்ந்தேன்,

நடக்கும் பொழுது கூட உன் பாதுகாப்பையே முதன்மையாக எண்ணினேன்.

உறங்கும் தருணத்திலும் உன்னக்கு சிறிதளவும் சிரமம் இருக்க கூடாது என நினைத்தேன்,

ஒவ்வொரு நாளாலும் உனது வருகையை எண்ணி காத்து இருந்தேன்.

சில தருணங்களில் உன் செயலால் மகிழ்ச்சியும் கொஞ்சம் வலியும் கலந்து இருக்கும்,

ஆனால் உன் வருகையின் அந்த விநாடியாய் எதிர்பார்த்து காத்திருப்பது ஒரு இன்பம்தான்.

மாதம் ஒரு முறைமட்டும் மீயொலி நோட்டத்தில் உன்னை காணும் பொது மட்டற்ற மனநிறைவுபெரும்,

உன்னை என்னுள் பத்து மாதம் சுமப்பது மிக அற்புதமான நிகழ்வு.

உன்மேல் அளவில்லா அன்பை வைத்துவிட்டு நீயும் பிறந்த நொடிமுதல் அப்படியே செய்வாயா,

ஆயிரம் கனவுகளுடன் உன் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பதும் ஒரு மகிழ்ச்சியே.

அன்னையாகும் தினத்தை எதிர்நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் 

தன் கருவில் இருக்கும் குழந்தை செல்வதை எண்ணி காலம் கடத்தி,

தன் பிள்ளை பூமிக்கு வந்த நாள்முதல் பிள்ளையின் வளர்ச்சியை மட்டும் எண்ணும் அன்னையின் அன்பும் ஒரு காதல் தான்!!

#lovelanguage இதுவும் ஒரு காதல் தான் !!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract