இளவரசியானவள்
இளவரசியானவள்
பெண்ணே பிறந்த வீட்டில்
ஓர் இளவரசியாய் கொண்டாடி மகிழ்வர்!
உன்னைத் தோளில் தூக்கிச் சுமப்பர்!
உன்னை கரங்களில் ஏந்திக் கொள்வர்!
மடியினில் வாங்கிக் கொள்வர்!
முதுகினில் தாங்கிக் கொள்வர்!
உன் கண்ணில் சந்தோஷ மின்னல் மட்டுமே தெறித்து ஓடும்!
துள்ளி ஓடும் மான்குட்டியாய்...
வீட்டின் செல்லக்குட்டியாய்...
வலம் வந்திடுவாய்!
எல்லோருக்கும் நலம் தந்திடுவாய்!
மணம் முடித்தால் உன் மனதையும் முடித்துக் கட்டிவிடுவர்!
உன் சுயங்கள் தொலைந்து விடும்!
துயரங்கள் நிறைந்து விடும்!
உன் தேவைகள் மறுக்கப்படும்!
உன் சுவைகள் மறக்கப்படும்!
உன் உணர்
வுகள் நசுக்கப்படும்!
நீ யார் உனக்கே மறந்து விடும்!
போலியாக சிரிக்க வேண்டும் !
பொய்யாக வாழ வேண்டும்!
வலியோடு வாழ வேண்டும் !
வலியோடு உழைக்க வேண்டும்!
பிறந்த வீடு மறக்க வேண்டும்!
உபாதைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்!
உள்ளம் பிளக்கும் ஏச்சுக்களை வாங்கிக் கொள்ள வேண்டும்!
நின்று அழ நேரம் இருக்காது!
உட்கார்ந்து உண்ண நேரம் இருக்காது!
ஓய்வுக்கு அல்ல....
முதுகு சாய்வுக்கு கூட வழியிருக்காது!
மௌனமொழி பெருகிவிடும்!
வாய்மொழி குறுகிவிடும்!
உன் பாதைகள் மாறிவிடும்!
மொத்தத்தில் ஓர் இளவரசி....
வேலைக்காரி ஆகிறாள்!