STORYMIRROR

Uma Subramanian

Abstract

4  

Uma Subramanian

Abstract

என்னவளே!

என்னவளே!

1 min
23.3K

உன் கற்றைக் குழலில்

ஒற்றை முடி நானால்....

என் ஆயுளுக்கும் உன் கன்னத்தை

வருடிக் கொடுப்பேனடி .....


உன் கூந்தலில் சூட்டும் பூ

நானால்....வாடிப் போய்விடாமல்

என் ஆயுசுக்கும் புன்னகைப் பூப்பேனடி.....


நீ கட்டும் சேலையில்

ஒற்றை இழை யானால்.....

தென்றல் கூட தீண்டி விடாது

உன்னைக் காத்துக் கொள்வேனடி!


உன் இதயம் நானால்.....

யமனையும் எதிர்த்து நின்று

மரணத்தை உன்னிடம் மண்டியிட வைப்பேனடி!


என் வாழ்க்கைத் துணை நீயானால்....

என் ஆயுளையும் உனக்கு தந்து

உன்னை வாழ வைப்பேனடி!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract