என் வயது எழுபது
என் வயது எழுபது


கனவுகள் பொய்யில்லை
கனவுகள் வயதைச் சொல்வதில்லை
கனவுகளின் உணர்வுகள் பொய்யில்லை
உனக்குள்ளே உணர்விருந்தால் மனிதம்
இல்லையெனில் மிருகம்
ஒரு பொய்கை
கதவில்லை மறைவில்லை
தனிமையில்லை
குளிக்கும்போது துணியில்லை
வெளியேவரத் துணிவில்லை
காமத்தைக் கக்கும் கண்கள்
கலக்கத்தை சுமக்கும் பெண்கள்
யார் மிருகம்?
உணர்வில்லையெனில் அவள் மிருகம்
உணர்விருந்தால் அவன் மிருகம்
விழித்தேன் உணர்ந்தேன்
என் வயது எழுபது