STORYMIRROR

Deepa Sridharan

Abstract

4  

Deepa Sridharan

Abstract

என் மகளுக்காக

என் மகளுக்காக

1 min
202


தொப்புள் கொடியை

அறுத்த போதே

தொடங்கிய பயணம் இது

ஊழியின் இழுவையில்

கைகோர்க்க முடியாத

ஊமைச் சொற்கள் நாம்

நெடுஞ்சாலை விளக்கின்

இருவேறு திசையில்

நெருங்கிச் செல்லும் நினைவுகள்

உச்சிதனை முகர்ந்திடாத

தாய்தான் நான்

உன் பாதங்களின் சக்தியாய்

பிரிவின் இழப்புகள்

இமய மலையாய்

பிணக்கில்லா புரிதல் சிகரமாய்

உறவுகளின் நிகழ்வுகள்

நமக்குள் குறைவு

உடையாத நம்பிக்கை பாத்திரத்தில்

தூரங்கள் என்செய்யும்

நம் அன்பின்

தூரலில் வெள்ளப் பெருக்கு

தோழியாய் கரைகிறாய்

உன்னைச் சுமக்கையில்

தோள்களில் பழுவே இல்லை

எங்கனம் சாத்தியமானது

உனக்கு மட்டும்

என்னைப் புதைக்காமல் விதைக்க

தாயுமானவள் நீ

என் கருவறை

தாங்கிய சேயுமானவள் நீ !!!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract