STORYMIRROR

Chandra Kala K

Inspirational

3  

Chandra Kala K

Inspirational

எழுந்து நில் தோழா!

எழுந்து நில் தோழா!

1 min
178

எழுந்து நில் தோழா!

மண்டிக்கிடக்கும்

மடமைகளை முண்டிக்களைந்து விரட்டியடிக்க

எழுந்து நில் தோழா!

எதிரே தெரியும் ஏதேச்சிகாரத்தை

எரிக்கும் கனல் நீயென

எதிரிகள் அறியட்டும்

எழுந்து நில் தோழா!

அநீதியென்று தெரிந்தபின்பும்

அதனை அழிக்க அறிவால் வெல்ல

எழுந்து நில் தோழா!

கவலைகள் மறக்க கடமைகள் இருக்கு

கண்ணீரைத் துடைக்க கல்வியும் இருக்கு

எழுந்து வா தோழா!

முடங்கிக் கிடக்க முடவனல்ல நீ

மூடித்தாங்க கிழவனல்ல நீ

முயன்று கற்று முன்னேறிக் காட்டும்

முத்தமிழ் தந்த புதல்வனடா நீ

எழுந்து வா தோழா!

எண்திசை நமக்கிருக்கு

எத்திசையும் செல்ல வழியுமிருக்கு

நமக்கென நாளென அமைந்திருக்கு

இன்றே அந்நாளென

எழுந்து நீயும் புறப்படு தோழா!!!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational