எல்லாம் நீ
எல்லாம் நீ
கேள்விகளுக்கு பதில் நீ! குழப்பமும் நீ!
கண் தேடும் கடவுள் நீ
காற்றை தேடும் கடல் நீ!
காகிதம் முழுதும் நீ!
கற்பனை கவிதை நீ!
கேட்காத வரம் நீ!
கிடைத்த சாபம் நீ!
கனவும் நீ!
கவலையும் நீ!
காதல் நீ!
கலவரம் நீ!
கலை நீ!
களைப்பும் நீ!
குழந்தை நீ!
கண் அவனும் நீ!
எல்லாம் நீ!

