ஏனடா....
ஏனடா....


ஏனடா நீ எனக்குள்
முகம் பார்க்கும்
கண்ணாடியாய் நித்தம்
பிரதிபலிக்கின்றாய்?
தெளிந்த நீரோடையில்
பிரதிபலிக்கும் கரையோர
மலர்களின் அழுத்தமான
நறுமணமாய், வண்ணங்களாய்
உன் முகம் என்னிதயத்தின்
கண்ணாடியில்!
குவிந்த இதழ்களின் தொடுதலால்
கனவுகள் மெல்ல கலைந்திட
மறுபடியும் நான்
உன் அணைப்பினில்!