சுய அன்பு
சுய அன்பு
உள்ளத்து எண்ணங்களுக்கு
செவி சாய்ப்போம் - அங்கிருந்தே
ஆரம்பமாகிறது சுய அன்பு !
உள்ளமும் உடலும் நம் சொத்து !
அவற்றை பாதுகாத்து மேம்படுத்தலும்
சுய அன்பே !
உலகையே அழகாக்கும் அன்பு -
அன்பின் ஆதாரம் நம் மனமே !
மனமும் அழகாக தேவை - சுய அன்பு !
அன்புலகம் படைத்திட
கொள்வோம் சுய அன்பு !
உலகமே உயிர்ப்போடு விளங்கும்
காற்றில் நிறைந்திருக்கும் அன்பினாலே !
