சுற்றுச்சூழல் காப்போம்
சுற்றுச்சூழல் காப்போம்
1 min
22.4K
நீர் நிலமென பாகுபாடில்லாமல்
நெகிழியும் ரப்பரும் நிறைந்தே
சுற்றுச்சூழல் தனையே
மாசுபடுத்தி விடுகின்றனவே !
நிலத்தடி நீரின் ஓட்டம் தனையும்
தடை செய்தே
நமக்கும் கேடு விளைவிக்கிறதே !
தாவரம் மண்ணுயிர் நீர்வாழ் உயிர்
அனைத்திற்கும் கெடுதியையே
பரிசாக கொடுக்கிறதே !
மண்வளம் நீர்வளம் தனையே
காக்கும் பொருட்களையே
நாளும் பயன்படுத்துவோம் !
சுற்றுச்சூழல் காப்போம் !
நலமுடன் வாழ்வோம் !