சல் சல் என்று
சல் சல் என்று
வரும் காலம் எல்லாம்
நல்லதே நடக்கும் என்று
சல் சல் என
சலங்கை ஒலி ஒலிக்க
சாலையில் வரும் காளைகள்
புத்துணர்வு பொங்கிடும்
காலை சூரியனின் கதிர்களில்
வண்ணங்கள் தீட்டிய
கொம்புகள் ஆடிட
நடந்திடும் தோரணையில்
வந்தது நமக்கு
மறுபடியும் ஒரு திருநாளே.