அதுவும் கடந்து போம்!
அதுவும் கடந்து போம்!


பத்து வயதில் என்
அப்பாவை இழந்த போது
‘இதுவும் கடந்து போம்’ என்றார்கள்
அண்ணன்மார் அரவணைத்தார்கள்!
பதினைந்து வயதில் என்
நண்பனை இழந்த போது
‘இதுவும் கடந்து போம்’ என்றார்கள்
மற்ற நண்பர்கள் மனம் கலந்தார்கள்
முப்பத்தைந்தில் என்
அம்மாவை இழந்த போது
‘இதுவும் கடந்த
ு போம்’ என்றார்கள்
மனைவியார் மனம் தேற்றினார்கள்
ஐம்பது வயதில் ஓர்
அண்ணன் மறைந்த போது
‘இதுவும் கடந்து போம்’ என்றார்கள்
என்னையே நான் தேற்றிக் கொண்டேன்.
என் நேரம் வரும் போது
என்னை நான் இழப்பேனே..
‘அதுவும் கடந்து போகும்’
ஆத்மா என்றொன்றிருந்தால்
அது பார்த்துக் கொள்ளட்டும்!