STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Abstract

3  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

அணையவில்லையே!

அணையவில்லையே!

1 min
126

இருபது வயதில் அவனது ஆண்மையும் கம்பீரமும் எரித்த பொறாமைத் தீ 

ப்யூட்டி பார்லரிலும் சலூனிலும் அணைந்தது

கல்லூரியில் இவன் குவித்த பதக்கங்கள்

என் பதக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டியது


முப்பதில் அவன் மனைவியின் அழகில் விளைந்த பொறாமைத்தீ

அழகியைத் தேடி அலைய வைத்தது


நாற்பதில் அவன் சேர்த்த செல்வம்

என் செல்வத்தைப் பெருக்கியது


ஐம்பதில் இவன் பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டேன்

என் பிள்ளைகளும் வளர்ந்தார்கள்

பொறாமை நல்லதுதானே?

இல்லையென்று இன்றுதான் புரிந்து கொண்டேன்


அறுபதில்

அவன் நிம்மதியாய் இருக்கிறான்

இவன் நிம்மதியாய் இருக்கிறான்

என்னிடம் பொறாமைமட்டுமே மிஞ்சியிருக்கிறது



Rate this content
Log in

Similar tamil poem from Abstract