அம்மா
அம்மா
உன் தந்தைக்கு நீ ராணி தான்
நீ அங்கு கேட்டதெல்லாம் பொன் தான்
உன் மருதாணி நிறம் மாறவில்லை
உன் காலின் கடினத்தை நீ பார்த்ததில்லை
உண்ணவனை நீ மணந்தாய்
என்னை நீ அறிமுகம் செய்தாய்
உனக்கு நான் இளவரசி ஆனேன்
நீ உலகிற்கு அடிமையானாய்
நீ அலங்கரித்து நான் பார்த்தது இல்லை
நீ சிரிப்பைக் கூட உன் சிந்தையில் வைக்க வில்லை
பொறுப்பு உன்னை அனைத்தது
நீ என்னை அனைத்தாய்
வீட்டை அலங்கரித்தாய்
நீ நோயில் வாடினாய்
இருந்தும், எம் வயிற்றை ஆற்றினாய்
உனக்கு தோள் சாய யாருமில்லை
என்னை நீ தோளோடு அனைத்து மாரில் பூட்டினாய்
உன் நாடி துடிக்கும் வரை
என் இருதயம் தழுவி தாங்குவாய்
நீ இத்தனை செய்தாய்
ஆனால் எத்தனை என எண்ணவில்லை
அத்தனையும் உனக்கு நான் செய்திட
என் குழந்தையாக நீ மாறிடு அம்மா