ஆண் அவதாரம்
ஆண் அவதாரம்


மகனாக பிறக்க மட்டற்ற மகிழ்ச்சி
மனையை காக்க வந்தாயென புகழ்ச்சி
மகன்களின் வளரும் கால வளர்ச்சி
மகன்களின் இன்ப கால முதிர்ச்சி
பள்ளிக் கால படிப்பில் தியாகம்
பள்ளி பருவ விளையாட்டு கோலம்
பக்கத்து வீட்டு பெண்மீது மோகம்
பல நூற்றாண்டாய் ஆண்களின் சாபம்
கல்லூரி வாழ்க்கை கருத்துடன் வளரும்
கருத்துடன் இன்பம் பரபரப்பாய் முடியும்
கடைசி கட்ட தேர்வெழுதி உதிரும்
கற்பனை செய்த வாழ்க்கை தொடரும்
கல்யாண தாகம் காதலை வளர்த்திடுதே
கட்டாய வேலை காதலும் தந்திடுதே
கடமை தவறா காதலும் புறப்படுதே
கல்யாண பத்திரிகை தந்து முடிந்திடுதே
கட்டிய மனைவியுடன் வாழ்க்கை தொடங்குது
கண்மூடி திறக்க குடும்பமும் பெருகுது
கட்டாய காலத்தால் சுமையும் ஏறுது
கடமையே என கவலையும் மறத்தது
அம்மாவின் சுமை பத்தென பதிந்தவன்
அப்பாவின் சுமை பதிய மறந்தவன்
ஆணின் சுமையோ அவனிலும் பெரியதாம்
ஆக அவனும் கடவுளின் வம்சமாம்
ஆணின் பிறப்போ ஆண்டவன் படைப்பு
ஆகும் காரியம் அவனிடத்தில் சிறப்பு
ஆதரிக்கும் அவனிடம் குடும்ப பொறுப்பு
ஆசைகள் தனக்கென இல்லாத பிறப்பு