Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Fantasy Children

4.3  

Harini Ganga Ashok

Fantasy Children

டோராவுடன் பீமின் பயணங்கள்

டோராவுடன் பீமின் பயணங்கள்

2 mins
234


சோட்டாபீம் சிறுவர்கள் மட்டும் அல்ல

பெரியவர்களும் விரும்பும் கதாபாத்திரம். மஹாபாரதத்தில் வரும் பீமன் என்னும் கதாபாத்திரத்தை கொண்டு அமைந்ததே இந்த சோட்டாபீம்.

சோட்டாபீம் உடன் எப்பொழுதும் அவனுடைய நண்பர்கள் இருப்பர்.


டோரா என்னும் கதாபாத்திரமும் அனைவராலும் அதிக பேசப்படும் கதாபாத்திரம் டோராவுக்கும் புஜ்ஜிக்கும் அனைத்து குழந்தைகளின் மனதிலும் நிச்சயம் இடம் இருக்கும்.


இவர்கள் இருவரையும் இணைத்தால் என்ன?


டோலக்பூரின் மகாராஜா இந்த்ரவர்மா பீம் மற்றும் அவனது நண்பர்களை அரண்மனைக்கு அழைத்திருந்தார். அவர்களும் வந்து சேர்ந்தனர். ஹினாபூரில் நடக்கும் மாவீரர்களுக்கான போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாகவும் பீமை அவன் நண்பர்களுடன் சென்று பங்கெடுக்குமாறு கூறினார்.


பீம் மற்றும் நண்பர்கள் புறப்பட தயாராகினர். கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்று செல்லலாம் என்று எண்ணினர். நண்பனின் அழைப்பிற்கு மறுநொடி தோன்றிவிடுவான் அல்லவா கிருஷ்ணா. பீமிற்கு வாழ்த்துக்களை கூறினான். போட்டி நடைபெறும் நாள் அந்த இடத்திற்கு தானும் வருவதாய் கூறினான். இம்முறை லட்டுவுடன் பால்கோவாவும் கொண்டு செல் என்றும் கூறிச்சென்றான்.


பீம் மற்றும் நண்பர்கள் லட்டு மற்றும் பால்கோவாவை எடுத்து கொண்டு பழைய வரைபடத்தின் உதவியுடன் ஹினாபூர்கு தங்களின் பயணத்தை தொடங்கினர். கிண்டலும் கேலியுடன் சென்றது அவர்களின் பயணம்.


வழியில் ஒரு அருவியை கண்டபின் அதில் குளித்து அனைவரும் ஆட்டம்போட்டனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த வரைபடம் நீரோடு நீராய்ப்போனது. செய்வதறியாது நின்றனர் அனைவரும். பீமனும் காளியாவும் எவ்வளவு முயன்றும் அதை கைகளில் அகப்படவில்லை.


அனைவரும் சோர்ந்து போய்விட்டனர். டோலக்பூர் திரும்பவும் வழி தெரியாமல் திண்டாடினர்.


அவர்களின் கவலையை போக்க வந்தாள் டோரா. டோரா அவ்வழியாக புஜ்ஜியுடன் சென்று கொண்டிருந்தாள் பீமிடன் விவரங்களை கேட்டுக்கொண்டபின் தான் அவர்களுக்கு உதவுவதாக கூறினாள்.


டோரா தன்னிடம் உள்ள மேப்பின் உதவியுடன் அவர்களை ஹினாபூர்க்கு அழைத்து செல்ல தொடங்கினாள். வழியில் பசிக்கிறது என்று டோரா சொல்ல சுட்கி அவளிடம் லட்டுவை கொடுத்தாள். டோரா தனக்கு லட்டு பிடிக்காது பால்கோவா தான் பிடிக்கும் என்றாள். பீமிற்கு கிருஷ்ணாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.


விளையாட்டு ஆட்டம் என்று அவர்கள் ஹினாபூர் வந்து சேர்ந்தனர். சொல்லியபடி கிருஷ்ணனும் அங்கு வந்து சேர்ந்தான். பயணத்தின் போதே லட்டு காலியாகிப்போனதால்

பீம் கவலையுற்றான்.


கிருஷ்ணா அவனிடம் சக்தி என்பது உண்மையில் தன் மேல் தாம் கொண்டிருக்கும் நம்பிக்கையில் உள்ளது என்று கூறினான்.

டோராவும் அதனையே ஆமோதித்தாள்.


பீம் போட்டிகளில் வெற்றிவாகை சூடினான். பீம், கிருஷ்ணா, சுட்கி ராஜு, ஜக்கு, காளியா, டோலு,போலு டோரா, புஜ்ஜி என அனைவரும் பயணத்தை அனுபவித்தபடி டோலக்பூர் வந்து சேர்ந்தனர்.


வாழ்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் எதோ ஒரு காரணத்தின் பேரில் நடைபெறுகிறது. வாழ்வில் என்றும் தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள். நம்முடைய வாழ்வை முழுமையாக வாழவேண்டும்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy