Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Gavudhama Karunanidhi S

Horror Thriller

4  

Gavudhama Karunanidhi S

Horror Thriller

தென்றல்

தென்றல்

29 mins
262



1


ஜான் மணி பார்த்தான். மாலை ஆறு மணி. ஆக்சிலேட்டரை மிதித்தான். அருகில் அமர்ந்திருந்த அவன் எட்டு வயது மகள் ஏஞ்சல் அவனைப் புன்னகையுடன் பார்த்தாள். 

“டாடி.. சூப்பர்..” கிளம்பும்போதே சீட் பெல்ட் போட்டு விட்டிருந்தான். பின் சீட்டில் அமர்ந்திருந்த நிர்மலா மகளின் மீதே கண் வைத்தபடி அமர்ந்திருந்தாள். 

“பாப்பா..அப்பாவை தொந்தரவு செய்யக்கூடாது..” நிர்மலா சொல்ல ஏஞ்சல் சிரித்தாள். 

“இன்னும் எவ்வளவு நேரம்பா போகணும்? தாத்தா வீட்டுக்கு?”

ஏஞ்சல் கேட்க ஜான் புன்னகைத்தான். 

“இன்னும் அரை மணி நேரத்தில் போயிடலாம்” சொன்னவன் காரை விரட்டினான். 

ஜான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் குளச்சல் கிராமத்தில். நாகர்கோவில் மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கும் மார்த்தாண்டத்திற்கும் இடையில்.இருக்கும் கடற்கரை கிராமம்.  

வேலை பெங்களூரில். இருப்பது வொயிட்ஃ பீல்ட்.

மனைவி நிர்மலா பணிக்குச் சென்று கொண்டிருந்தாள். மகள் ஏஞ்சல் பிறந்தபின் அவளைப் பார்த்துக்கொள்ள என்று வேலையை விட்டாள். ஏஞ்சல் வளர்ந்த பிறகும் மீண்டும் வேலைக்குச் செல்ல நிர்மலா விரும்பவில்லை. 

ஜான் குடும்பம் மிகப் பெரியது.

கூந்தக் குழிவிளையில் ஜானின் அப்பா ஜார்ஜைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சாதாரண மீனவனாக வாழ்க்கை யை ஆரம்பித்து தன் கடுமையான உழைப்பால் மீன் ஏற்றுமதியில் தவிர்க்க முடியாத ஆளாக வளர்ந்தவர். 

அவரின் ஆஜானுவாகுவான உடம்பும் அடர்த்தியான மீசையும் எல்லோரையும் பார்த்தவுடன் பயமுறுத்தும்.

அவருக்கு மூன்று மகன்கள். இரு மகள்கள். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி மூத்தவள் விக்டோரியா நாகர்கோவிலிலும் இளையவள் பிரின்சி கோவையிலும் இருக்கின்றனர். விக்டோரியாவின் கணவர் டேவிட் சப் இன்ஸ்பெக்டர். அவர்களின் ஒரே வாரிசு கிறிஸ்டி. ஏழு வயது பெண் குழந்தை.

இளையவள் பிரின்சி க்கு ஆறு மாதங்கள் முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது.

மகன்கள் மூவரில். ஜானுக்கு மட்டும் திருமணம் ஆகியிருக்க அவன் தம்பிகள் பீட்டர், தாமஸ் இருவரும் இன்னும் எவரிடமும் மாட்டாமல் வாழ்க்கையின் இனிய பக்கங்களை மட்டுமே இன்னும் புரட்டிக்கொண்டிருக்கின்றனர். 

ஜான் சற்று முன் அவன் அம்மா ரோசியை அழைத்துப்.பேச எல்லோரும் வந்துவிட்டனர் . அவன் வரவிற்கு காத்திருக்கின்றனர் என்பது தெரிய வரவே காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். 

சேவிளையில் மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பினான். 

வலது புறம் இருந்த பள்ளி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெருநாளுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருந்தன. ஒவ்வொரு பெருநாளுக்கும் குடும்பத்தினர் அனைவரும் ஜார்ஜின் வீட்டில்.ஆஜராகிவிடுவர். கூந்தக்குழிவிளை மொத்தமும் உற்சாகமாய் மாறும். 

ஜார்ஜின் வீட்டில்.பேத்திகள் ஏஞ்சல் கிறிஸ்டி இருவரும் காலில் சக்கரம் கட்டியது போல் சுற்றிக்கொண்டே இருப்பர். 

ஜானுக்கு பெங்களூரில் அபார்ட்மெண்ட்டில் முழு வசதிகளுடன் இருந்தாலும் பணி நிமித்தமாக எந்த வெளிநாடு சென்றாலும் கூந்தகுழிவிளைக்கு வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறெங்கும் கிடைப்பதில்லை.

பள்ளியைத் தாண்டி வந்த முதல் திருப்பத்தில் வலது புறம் திரும்பினான் ஜான். அந்த பெரிய பங்களாவின் முன் கார் போய் நிற்க

“மாமா வந்துட்டார்” கிறிஸ்டி சந்தோஷக் கூச்சலிட்டபடி ஓடி வந்தாள். 

ஏஞ்சல் உற்சாகமானாள். காரின் கதவைத் திறந்து இறங்கினாள். 


“ஹை கிறிஸ்டி..” கிறிஸ்டியை அணைத்துக் கொண்டாள். 

காரை நிறுத்திவிட்டு ஜான் உள்ளே வர

“வாங்கண்ணா..வாங்கண்ணி” பீட்டர் வரவேற்றான்.

“என்னடா அப்பா எங்கே?” ஜான் கேட்க 

“பள்ளிக்குப் போயிருக்கார்..”

“சரி..” உள்ளே சென்றான். விக்டோரியா பிரின்சி இருவரும் புன்னகைத்தனர்.

“வாங்கண்ணி..” நிர்மலாவை சூழ்ந்து கொண்டனர். 

“அம்மா..” ஜான் உள்ளே போனான்.

“வாப்பா..” ரோசி காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.

“குளிச்சுடறியா? சுடு தண்ணி வைக்கவா” ரோசி கேட்க 

“குளிக்கத்தான் போறேன்..ஆனா வீட்டில் இல்லை.” சிரித்தான் ஜான். 

“பின்னே? வேறெங்கே போய் குளிக்கப் போறே?” பீட்டர் கேட்டான்.

“நம்ம குளம் இருக்குல்ல..அங்க தான்..” ஜான் சொல்ல பீட்டரின் முகம் மாறியது. 

“மணி என்ன? இந்நேரத்துக்குப் போய் குளத்துக்குப் போறேன்னு சொல்றே..” பீட்டர் கேட்க..

“எட்டு மணி தானே ஆகுது..நான் அங்கே தான் போய் நீச்சலடிச்சுக் குளிக்கப் போறேன்..” ,ஜான் தீர்மானமாக சொல்ல பீட்டரால் மறுத்துப் பேசவோ ஜானைத் தடுக்கவோ முடியவில்லை.

அவர்களின் வீட்டின் பின்பக்கம் தென்னந்தோப்பு  உள்ளது. அதன் அருகில் ஏதோ ஒரு காலத்தில் வெட்டிய குளம் கொஞ்சம் கூட வற்றாமல் எப்போதும் நீரைத் தன்னகத்தே வைத்திருந்தது. 

எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய் குளிக்கும் குளத்தில் சமீப காலமாக அங்கு போவதை பெரும்பாலோர் தவிர்த்திருந்தனர். 

“அப்பா..” 

ஜான் திரும்பிப் பார்த்தான்.

ஏஞ்சல் நின்றிருந்தாள். 

கூடவே கிறிஸ்டியும் நிற்க..

“என்னம்மா?” ஜான் கேட்டான். 

“நாங்களும் குளத்துக்கு வர்றோம் அப்பா..” 

ஏஞ்சல் சொல்ல நிர்மலா கோபப்பார்வை பார்த்தாள்.

“குழந்தைங்க நீர்நிலைக்கு நைட் நேரம் போகக்கூடாது” நிர்மலா சொல்ல

“அப்பா ப்ளீஸ்பா..” ஏஞ்சல் கெஞ்ச..

அருகில் வந்து ஏஞ்சல் முகத்தைப் பார்த்த ஜான் அவள் கண்களில் தெரிந்த ஆசையைப் புரிந்தான். 

தூக்கி முத்தமிட்டான்.

“வேண்டாம்.செல்லம்..அப்பா உன்னை.நாளைக்கு பகல் பொழுதில் கூப்பிட்டுப் போறேன்” 

“ப்ராமிஸ்?” 

“ப்ராமிஸ்”

ஏஞ்சலை இறக்கிவிட்டான். அவன் அருகில் வந்த நிர்மலா 

“நீங்களும் போகாதீங்க..இங்கேயே குளிங்க” சொன்னாள்.

ஜான் அலட்சியமாக சிரித்தான்.

“நான் எத்தனை வருஷமா அங்கே குளிக்கிறேன்னு தெரியுமா? “ நிர்மலாவின் மறுப்பைப் புறக்கணித்தான்.

“அதுக்கு சொல்லலப்பா..”

“நீ எதுக்கு சொல்றேன்னு புரியுது..” சொன்ன ஜான் உடைமாற்றிக்கொண்டான்.

“போய்ட்டு வந்திடறேன்..” கிளம்பிவிட்டான். 

அவனுக்கு இரவு நேரத்தில் அந்தக் குளத்தில் குளித்தால் களைப்பு போய்விடும்.

சிறுவயதுப் பழக்கம்.

டார்ச் எடுத்துக்கொண்டான். குளத்திற்கு ச் செல்லும் வழியில் கொஞ்சம் காட்டு வழியே நடக்க வேண்டும். அப்போது வழியில் பூச்சி பொட்டு இருந்தால் அது விலகிப் போய்விடவும் தெரியாமல் அது எதையும் மிதித்து விடக்கூடாது என்றும் தனக்குள் சொல்லிக்கொண்டான். 

அவன் வெளியேறிச் செல்லவும் ஜார்ஜ் வரவும் சரியாக இருந்தது. ஜான் அப்பாவைப் பார்க்கவில்லை. 

தூரமாகச் செல்லும் ஜானின் முதுகையே வெறித்த ஜார்ஜ் 

“எங்கே போறான்?” பீட்டரிடம் கேட்டார். 

“குளத்துக்குப் போறான்.. குளிக்க” 

பீட்டர் சொல்ல ஜார்ஜ் பதட்டமானார். 

ஜான் இருட்டு பூதாகரமாய் இருந்த பல பகுதிகளை அனாயாசமாக த் தாண்டினான். சுவர்க்கோழிகளின் சத்தம் மிகத் தெளிவாய் ஜானுக்கு கேட்டது. 

குளத்தை அடைந்தான். இறங்கினான். நீர் ஜானை குளிர்விக்க கண்கள் மூடி அந்தக் குளுமையை ரசித்தான். உடலின் அத்தனை அணுக்களும் புத்துணர்ச்சி அடைந்ததாய் உணர்ந்தான். சிறு வயது சந்தோஷம் அவனுக்கு திரும்பப் பெற்றது போல் மகிழ்ந்தான். 

அப்போது அவன் காதில்.கேட்டது அந்த சத்தம். 

யாரோ அழுகிறார்கள்.. இல்லை..ஏதோ ஒரு குழந்தை அழுகிறது…இது எங்கோ நன்கு பரிச்சயப்பட்ட குழந்தையின் குரல்..

ஜான் பதட்டமானான். 

‘யாரது?’ யோசித்தவனுக்கு கிடைத்த. விடை அவனை அதிர.வைத்தது. 

‘இது ஏஞ்சலின் குரல்..’ 

ஜான் கத்தினான்..

“ஏஞ்சல்..எங்கம்மா இருக்கே?”

மௌனம்.

“ஏஞ்சல்..” மீண்டும் உரக்கக் கத்தினான் ஜான்.

மீண்டும் அழுகுரல் கேட்டது. 

‘எங்கிருந்து வருகிறது?’ யோசித்த ஜான் உச்சமாய் அதிர்ந்தான். அவனை நேர் பார்வை பார்த்தபடி கொஞ்சமும் கண்களை இமைக்காது நின்றிருந்தாள் ஏஞ்சல்.


2


ஜான் குளத்திலிருந்து வெளியே வந்தான். 

“நீ எப்படிம்மா இங்கிருக்கே? “ சொன்னபடி ஏஞ்சலின் அருகில் செல்ல முயன்றான். 

“நான் ரொம்ப நாளா இங்கேதான் இருக்கேன்” எங்கிருந்தோ பேசுவது போல் ஏஞ்சல் பேச ஜான் அதிர்ந்தான்.

‘ஏதோ சரியில்லை..முதலில் ஏஞ்சலை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடிவிடு’ மூளை கட்டளை பிறப்பிக்க முன்னோக்கி நடக்க முயன்றவன் முடியாமல் அப்படியே நின்றான். 

“ஏய்” யாரோ அவனை இறுக்கிப் பிடிப்பது போல் உணர்ந்தான்.

“யாரது விடுங்க? ஏஞ்சல் வீட்டுக்குப் போம்மா..” ஜான் கத்த..

“என்ன பயமாயிருக்கா? பயப்படு..இன்னும் ரெண்டு நாள் இருக்கு..முழுசா ரெண்டு நாள் இருக்கு..” ஏஞ்சல் அவனைப் பார்த்து சொல்ல 

“ஏஞ்சல்..என்னாச்சு உனக்கு?” 

கேட்கும்போதே மயக்கமானான். 

மயக்கம் தெளிந்து பார்க்கும்போது 

“அண்ணா இப்போ பரவாயில்லையா?” பிரின்சி கேட்க 

தான் இருப்பது தன் வீட்டில் என்று உணர்ந்தான். 

“எனக்கு என்னாச்சு பீட்டர்?” 

“குளத்தில் குளிக்கப் போய் மயக்கம் போட்டு க் கிடந்தே..நல்ல வேளையா அப்பா iஎன்னை அனுப்பிப் பார்க்க சொன்னார்..நான் வந்ததால் நல்லதாப் போச்சு..” பீட்டர் இயல்பாய் பேச அவன் மேல் ஜானுக்கு நம்பிக்கை வந்தது. இருந்தாலும்

அங்கு ஏஞ்சல் எப்படி வந்தாள்? ஜான் எழுந்தான். 

“நிம்மி..” 

நிர்மலாவை அழைக்க அவனுக்கு ஜூஸ் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். 

“என்னாச்சுங்க?” கேட்டவள் “இது சாப்பிடுங்க..” ஜூஸ் கொடுத்தாள்.

வாங்கி ஒரே மூச்சில் குடித்தான். 

“ஏஞ்சல் எங்கே?” 

“தூங்கிட்டா..” 

“தூங்கிட்டாளா?”

“ஆமாங்க..”

“நிம்மி..”

“சொல்லுங்க..” 

“நான் குளத்துக்கு குளிக்கப் போகும்போது ஏஞ்சல் எங்கிருந்தா..?”

“ஏஞ்சலும். கிறிஸ்டியும் விளையாடினாங்க..ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்கிட்ருக்காங்க..ஆமா இது எதுக்கு கேக்கறீங்க?” 

நிர்மலா அவன் கண்களை ஊடுருவினாள்.

“இல்லை..விஷயம் ஒண்ணுமில்ல.. சும்மாதான் கேட்டேன்.” சமாளித்தான்.

மனதில் ஒரு பேரதிர்ச்சி. குளக்கரையில் பார்த்தது ஏஞ்சல் இல்லை. அப்போ அது யார்?

“இன்னும் இரண்டு நாளில் பள்ளியில் பெருநாள் வெச்சிட்டு இன்னும் ஏற்பாடுகள் சரியா செய்யாம இருக்கிறது எனக்கு சமாதானமாகல..” ஜார்ஜ் அலைபேசியில் பேசியது கேட்டது.

ஜானுக்கு தூக்கி வாரிப் போட்டது. 

“இன்னும் ரெண்டு நாள் இருக்கு..” குளக்கரையில் சொன்னது இங்கே பொருந்துது. 

‘அப்படியென்றால் பெருநாள் அன்று ஏதோ ஒன்று நடக்கப் போகிறது’ மூளை எச்சரித்தது. 

எழுந்தான். 

ஜார்ஜின் அறைக்குச் சென்றான்.

“அப்பா..”

“வாப்பா..எப்படி இருக்கு? இப்போ?” 

“என்னப்பா..குளத்தில் குளிச்சேன்..அப்போ..’ 

“சொல்லுப்பா..” 

ஏஞ்சல் பெயரை கவனமாக தவிர்த்தான்.

“அங்கே ஏதோ வித்தியாசமா..” ஜான் சொல்லும்போதே ஜார்ஜ் புன்னகைத்தார். 

“தெரியும்” ஜார்ஜ் சொல்ல ஜான் அதிர்ந்தான்.

“என்னப்பா சொல்றீங்க?” 

“அந்தக் குளத்தில் யாரும் இப்போ குளிக்கிறதில்லை..நீ என்கிட்டே கேட்டிருக்கணும். குளிக்கப் போறதுக்கு முன்னாடி.. ஆனா தப்பு பண்ணிட்டே ஜான்..”

“அப்பா..”

“சரி.. அங்கே என்ன நடந்தது? ஒண்ணு விடாம சொல்லு..” 

“அங்கே போன நான் குளத்தில் குளிச்சேன். அப்போ யாரோ அழற சத்தம் கேட்டுச்சு..”

“மேல சொல்லு”

“யாரோ நின்னிட்டிருந்த மாதிரி இருந்தது..”

“ம்ம்” 

“யாருன்னு பார்க்கலாம்னு நினைச்சேன்..அப்போ யாரோ என்னை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டாங்க.. இல்லை பிடிச்சது மாதிரி ஓர் உணர்வு.. என்னால் ஒண்ணும் பண்ண முடியல. அப்போ ‘பயமா இருக்கா? பயப்படு இன்னும் ரெண்டு நாள் இருக்குன்னு ஒரு.குரல்..”

“என்ன சொல்றே ஜான்?” ஜார்ஜ் அதிர்ந்தார். 

“இன்னும் ரெண்டு நாளில் பெருநாள் இருக்கு..” பதட்டமானவர்

ஜானிடம் குனிந்தார். 

“நல்லா யோசிச்சு சொல்லு.. அது மனுஷனா..இல்ல வேற மாதிரியா?” 

அவரின் கேள்வி அவனை அதிர வைத்தது. 

“என்னப்பா சொல்றீங்க? வேற மாதிரின்னா?”

“அதாப்பா..இந்த ஆவி..அப்படி ஏதாவது?”

“தெரியலப்பா..” 

“உன் காதில் குரல் கேட்டிச்சுன்னு சொன்னியேப்பா?”

“ஆமாப்பா கேட்டுச்சு..”

“அப்போ கண்டிப்பா அங்க ஒரு உருவம் இருந்திருக்கணும்” ஜார்ஜ் தீர்மானமாய் சொல்ல 

ஜான் கலவரமடைந்தான். 

‘ஏஞ்சல் அங்கிருந்ததை சொல்லிவிடலாமோ?’ ஒரு நிமிடம் வந்த யோசனை யைப் புறக்கணித்தான் ஜான். சொன்னால் அப்பா குழந்தை என்றும் பாராமல் தண்டித்து விடுவார் . இப்போதைக்கு சொல்லாமல் இருப்பது தான் நல்லது யோசித்த ஜான் ஏஞ்சல் உறங்கும் அறைக்குச் சென்றான். படுக்கையில் ஏஞ்சல் இல்லை. அதிர்ந்த ஜான் சுற்றுமுற்றும் பார்த்தான்.கட்டிலுக்குக் கீழே ஏஞ்சல் உட்கார்ந்திருந்தாள். ஜான் தயங்கினான்.  

“ஏஞ்சல்” மெதுவாக அழைத்தான்

ஏஞ்சல் திருப்பாமல் இருந்தாள்.  

ஜான் மீண்டும் அழைத்தான் 

“ஏஞ்சல்”

திரும்பினாள்.

“அப்பா..” ஏஞ்சல் அழைக்க

‘நல்லவேளை ஏஞ்சல் தான்’ மனதில் நிம்மதி ப் பெருமூச்சு. விட்டபடி ஏஞ்சலை நெருங்கினான்.

“தூங்கலையாப்பா?”

“தூங்கிட்டிருந்தேன்பா..ஆன்டி எழுப்பி விட்டுட்டாங்க..”

கேட்ட ஜான் பதறினான்.

“என்னம்மா சொல்றே? யார் உன்னை எழுப்பி விட்டது?” 

பதட்டமாகக் கேட்டவனின் முகத்தைப் பார்த்து சொன்னாள் ஏஞ்சல்.

“உங்களுக்குப் பின்னாடி நின்னுட்டிருக்காங்களே அவங்க தான்பா “ 

ஏஞ்சல் சொல்ல ஜானுக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

‘என்ன சொல்கிறாள் ஏஞ்சல்? எனக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்களா? ஏஞ்சலின் அறைக்குள் வந்தது நான் மட்டும் தான். என் பின்னாடி இருப்பது யார்? பார்க்கலாமா? ‘ நினைத்தவனுக்கு வியர்த்து ஊற்றியது. 

கண்ணாடியில் பார்த்தான்.  

இரவின் நீல விளக்கு அவனை மங்கலாகத் காட்ட அவனுக்குப் பின் ஒரு உருவம் காற்றாய் கண்ணாடியில் காட்ட ஜான் அதிர்ச்சியானான்.

“அப்பா..” 

“சொ...ல்....லு...ம்..மா..”

“பயப்படாதீங்கப்பா..” 

“ச..ரி... ம்....மா”

“இன்னும் ரெண்டு நாள் ஆன்டி யாரையும் எதுவும் பண்ணமாட்டாங்கப்பா..” 

“என்ன...ம்மா..சொல்றே?” 

“ஆன்டி சொன்னதை சொன்னேன் பா..” 

ஜான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காற்று அறையில் பயங்கரமாய் வீசியது. 

“அப்பா...” ஏஞ்சல் அழுதாள்.

ஜான் தவித்தான். துடித்தான்.

“என்னம்மா ஆச்சு? யாராவது வாங்க..” குரல் எழுப்ப பல முறை முயன்றும் ஒரு வார்த்தையும் வெளியில் வரமுடியா அவஸ்தைக்கு ஆளானான். 

“அப்பா..என்னால் முடியலப்பா..”

“ஏஞ்சல்..” ஜான் அலறினான்.

“ஆன்டிய என்கிட்ட இருந்து போகச் சொல்லுங்கப்பா..அப்பா..” ஏஞ்சலின் குரல் உச்சஸ்தாயியில் ஒலித்தது.

ஏஞ்சலின் உடல் திமிறியது. யாரோ பிடித்துக்கொண்டது போல் உடலை முறுக்கினாள்.  

சட்டென்று ஓர் அமைதி. 

ஏஞ்சல் கட்டிலில் கிடந்தாள்.

“ஏஞ்சல்..அம்மா ஏஞ்சல்..என்னம்மா ஆச்சு? “ 

ஜான் அழாக்குறையாய் அருகில் சென்றான். 

‘இந்த முறை பெருநாள் கொண்டாட வந்தது என்னோட தப்பு..ஜான் தனக்குள் நினைத்தான்.

“அப்பா..” ஏஞ்சல் அழைக்க 

ஜான் மலர்ந்தான். மகளின் முகம் பார்க்க ஏஞ்சல் அவனை மர்மப் புன்னகையுடன் பார்த்தாள். 

“சொல்லுங்கப்பா..’ 

“வாம்மா நம்ம ரூமுக்குப் போலாம்” ஜான் சொல்ல 

“நான் வரலைப்பா..கொஞ்சம் வேலையிருக்குப்பா” ஏஞ்சல் சொல்ல 

“என்ன வேலை ஏஞ்சல்?”

“இன்னும் ரெண்டே ரெண்டு நாள் தான் பா” 

சொன்ன ஏஞ்சல் தலையணையை சரியாக வைத்தபடி தூங்க முற்பட்டாள்

ஒன்றும் புரியாத ஜான் வெளியே வர

“என்னங்க..” புதிய குரல்..

யாரது? ஏஞ்சல் தான் பேசுகிறாள். 

“சொல்லு ஏஞ்சல்..” 

“நான் ஏஞ்சல் இல்லை..” ஏஞ்சல் சொல்ல 

ஜான் உறைந்தான்.

“என்னை குளத்துக்கரைல இருந்து வீட்டுக்கு கொண்டு வந்ததுக்கு ஒரு பரிசு..” 

ஜான் திகைத்தான்.

ஏஞ்சலையே பார்த்தான். 

‘உன்னை மட்டும் வலிக்காமப் பார்த்துக்கறேன்” சொன்ன ஏஞ்சல் புன்னகையுடன் தொடர்ந்தாள். 

“உன்னைக் கொலை பண்றப்போ..”


3


“உனக்கு வலிக்காமப் பார்த்துக்கிறேன் உன்னைக் கொலை பண்ணும் போது”

ஏஞ்சல் சொல்ல ஜான் அதிர்ந்தான்

உடனடியாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

‘இப்போ என்ன பண்ணலாம் யாரோ ஏஞ்சல் உடம்புல இருக்காங்க.. அது யாருன்னு எப்படி தெரிஞ்சுக்கிறது? இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு கோயில் திருவிழாக்கு... அப்பாகிட்ட விஷயத்தை கொண்டு போலாமா?” 

ஜான் ஒரு நொடி யோசித்தான்.

“வேண்டாம் இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்”

மாறி மாறி வந்த யோசனைகள் அவனை பதட்டத்தில் தள்ளின.

‘நிம்மி கிட்ட விஷயத்தை சொல்லலாமா?’ யோசித்தான்.

‘வேண்டாம் அவளுக்கு தெரிந்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும்’ 

மனம் சொல்ல அப்போது அவனுக்கு அவன் நண்பன் சரத்தின் ஞாபகம் வந்தது  

ஜானின் முகம் மலர்ந்தது. கண்டிப்பாக நல்ல யோசனை ஏதாவது கொடுப்பான் . யோசித்தவன் தன் அறைக்குச்செல்ல நடந்தான்.

*** 

சுவர்க்கோழிகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த நள்ளிரவு நேரம். 

ஏதோ சத்தம் கேட்டு தாமஸ் விழித்துக்கொண்டான். 

“யாரு?” 

பதிலில்லை.

கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தான். 

ஏதோ ஒரு உருவம் மசமசப்பாய் தெரிந்தது. 

“யாரது?” எழுந்த தாமஸ் லைட் போட்டான். 

ஏஞ்சல் நின்றிருந்தாள். 

“ஏஞ்சலா? நீ என்னம்மா இப்போ வந்திருக்கே.. என்னாச்சு?” தாமஸ் குழப்பத்துடன் கேட்டான். 

ஏஞ்சல் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தாள்.

“என்னம்மா நான் கேட்டுட்டே இருக்கேன்..ஒண்ணும் சொல்லாம இருக்கே?” 

தாமஸ் கொஞ்சம் கோபமானான். 

“விளையாடறதுக்கு இதுவா நேரம்? போ..போய் அம்மாகிட்ட இல்லேன்னா அப்பாகிட்டே படுத்துத் தூங்கு..” 

ஏஞ்சல் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் புன்னகைத்தாள்.

கோபம் கொண்ட தாமஸ் எழுந்தான். 

ஏஞ்சல் அழைத்தாள்.

“அண்ணா..” 

“என்ன அண்ணான்னு கூப்பிடறே..? நான் உன் சித்தப்பாம்மா..” சொன்னவன் அப்போது தான் கவனித்தான். அது ஏஞ்சலின் குரல் அல்ல. 

தூக்கம் முழுவதும் கலைந்துவிட பயம் உடலெங்கும் பரவியது.

“யார் நீ?” தாமஸின் குரல் நடுக்கமாய் வெளிவந்தது. 

“அண்ணா.. திருவிழா வரைக்கும் காத்திட்டிருக்க முடியலைண்ணா.. மன்னிச்சுக்கோங்கண்ணா” 

ஏஞ்சல் புன்னகையுடன் சொல்ல..

“நீ என்ன சொல்றே? எனக்கு எதுவும் புரியல..” சொன்ன தாமஸ் திறந்திருந்த கதவைப் பார்த்தான்.

‘வெளியே ஓடிவிடவேண்டும். வெளியே போய்விட்டால் யாரேனும் உதவிக்கு வருவர். அப்போ இந்த குட்டிப் பிசாசை பிடித்து விடலாம்’ 

தாமஸ் எண்ண..

“என்னை பிடிக்க முடியும்னு நினைக்கிறீங்களா அண்ணா?” 

ஏஞ்சலின் கேள்வியில் தாமஸ் அயர்ந்தான்.

“உனக்கு என்ன வேணும்?”

“தெரிஞ்சுக்கிட்டே கேட்டா நான் என்னன்னு சொல்றது?” 

ஏஞ்சல் அவனை நெருங்கினாள். 

தாமஸ் கதவை நோக்கி ஓடினான். அதிர்ந்தான். கருப்பாய் ஒரு புகை நடுவில் அது நின்றது. நொடிப்பொழுதில் தாமஸைப் பிடித்து தூக்கி எறிய அறையின் பக்கவாட்டு சுவரில் மோதிக் கீழே விழுந்தான். 

“யாராவது வாங்க...காப்பாத்துங்க...” கத்த முயன்றான். சத்தம் வெளியே வராமல் தொண்டையை ஏதோ அடைத்தது. 

ஏஞ்சல் சிரித்தாள்.  

“அண்ணா...கஷ்டமா இருக்கு அண்ணா.. நீங்க இப்படி கஷ்டப்படறது பார்க்க..” 

சொன்ன ஏஞ்சலைப் பார்த்து திகைத்தான். 

“நீ..நீ..என்ன சொல்றே...”

“எங்க கூட சீக்கிரம் வாங்கண்ணா..”

அதிர்ந்தான்.

“யார் நீங்க?” 

“என்னண்ணா ..எங்களை அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்க.. நீங்க போனதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் துடிச்சிட்ருந்தோம்.. தண்ணி வேணும்னு துடிச்சோம்..யாரும் தண்ணி கூட கொடுக்கல..”

ஏஞ்சல் சொல்ல தாமஸிற்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. 

“நீ...நீ...” சொல்ல நினைத்ததை சொல்ல முடியாமல் ரத்தம் அவன் மேல் வழிந்தது. 

“நான் தான் அண்ணா.. இந்நேரம் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்.. ஆனா என்ன பண்றது? உங்க ஆயுசு முடியப் போகுதே..” 

“வேண்டாம்..” முகத்தில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடி நகர முயன்றான். முடியவில்லை. தூக்கி வீசப்பட்டதில் இடுப்பு எலும்பு எங்கோ முறிந்திருந்தது போல் வலி உச்சக்கட்டத்தில் இருந்து அவனை அசையவிடாமல் செய்தது. 

ஏஞ்சல் தன் அருகில் இருந்த புகையைப் பார்த்தாள். 

“முடிக்க வேண்டாம்.. கொஞ்ச நேரம் துடிச்சு சாகணும் ..நாம துடிச்ச மாதிரி..” ஏஞ்சல் சொல்ல காற்று அறைக்குள் வீசியது. 

மெதுவாக..வேகமாக..அதி வேகமாக வீச..அறையில் இருந்த பொருட்கள் பறந்தன. தாமஸ் காற்றின் திசைக்கேற்ப எல்லா இடங்களிலும் தூக்கி வீசப்பட்டு மொத்தப்பட்டான். ரத்தம் சுவர்களில் தெறிக்க மயக்கமானான். 

ஏஞ்சல் வெளியேறினாள். 

*** 

காலையில் தாமஸின் அறையைப் பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். 

எல்லாப் பொருட்களும் கலைந்தபடி இருக்க தாமஸ் இறந்திருந்தான். 

ரோசி பெருங்குரல் எடுத்து அழ விக்டோரியா பிரின்சி நிர்மலா அதிர்ச்சி விலகாமல் உறைந்து போய் பார்த்தனர். 

பீட்டர் அழுதபடி இருக்க ஜார்ஜ் மட்டும் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். 

ஜான் மற்ற ஏற்பாடுகளை கவனித்தான். 

எல்லாம் முடிந்து வீட்டில் ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவியது. ஜானுக்கு ஏஞ்சல் மீது சந்தேகம் இருந்தாலும் ஒரு சின்னப்பெண் இப்படி கொடூரமாய் கொலை செய்ய முடியுமா என்றும் யோசித்தபடி இருந்தான். 


எவ்வளவு சீக்கிரம் சரத்தைப் பார்த்து எல்லாம் சொல்லி ஏதாவது செய்கிறோமோ அவ்வளவு நல்லது. ஜான் தனக்குள் எண்ணினான். 

“அண்ணா..” 

ஜான் நிமிர்ந்து பார்த்தான். 

“அப்பா கூப்பிடறார் ணா..” 

ஜான் சென்றான். 

“வாப்பா..” 

“பார்த்தியா இப்போ? அன்னிக்கு நீ குளத்தில் குளிக்கப் போகும்போது யாரையோ நீ பார்திருக்கணும்.. நல்லா யோசிச்சு சொல்லு..அது யார்னு எனக்குத் தெரிஞ்சாகணும்..” ஜார்ஜ் முகத்தில் கோபம் தெரிந்தது. 

“எனக்குத் தெரியலப்பா.இதுவரை பார்க்காத முகம்.. அது மட்டும் இல்ல.. எனக்கு தெளிவாவும் தெரியல..” சொன்ன ஜானை உற்றுப் பார்த்த ஜார்ஜ் 

“நீ எதையோ என்கிட்டே மறைக்கிறே ஜான்.. இன்னும் எத்தனை பேரை அது காவு வாங்கும்னு எனக்குத் தெரியல..” 

ஜார்ஜ் சொல்ல ஜானுக்கு நடுங்கியது. 

அவரிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்தபின்னும் கூட அவர் சொன்னதே மனதில் இருந்தது. 

‘உன்னைக் கொல்லும்போது வலிக்காம கொல்றேன்’ ஏஞ்சல் சொன்னதும்

‘இன்னும் எத்தனை பேரை அது காவு வாங்கப் போகுதோ’ அப்பா சொன்னதும் மாறிமாறி ஜானுக்குள் ஓடின. 

அப்பாவிற்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அது.அவர் சொன்னால் மட்டும் தான் தெரியும். 

இனியும் தாமதிக்கக் கூடாது. சரத்திற்கு அழைப்போம். ‘ முடிவெடுத்தவன் அலைபேசியை எடுத்தான். 

புதிய வீடியோ ஒன்று வந்திருப்பதாக இருந்த குறுஞ்செய்தி யை அழுத்தினான்.

பதட்டமானான். 

தாமஸ் இறக்கும் முன் ஜானுக்கு வாட்ஸாப்பில் அனுப்பிய வீடியோ.

‘அண்ணா..இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் செத்துடுவேன். 

உன் பொண்ணு இங்கே வந்திருந்தா.. அவளும் ..” 

தாமஸ் மூச்சிறைத்தபடி பேசினான்.

“என்னைக் கொன்னு...எல்லோரும் பத்தி...ர...மா... இருங்க...

அண்ணா..உன் பொண்ணு...ஏஞ்சல்...இப்போ ..ஏஞ்சலா...இல்ல..


அவ...உடம்புக்குள்ள.

இருக்கிறது...


தெ... ன்.... ற....ல்....”



4

ஏஞ்சல் உடம்புக்குள்ளே இருக்கிறது தென்றல்'

தாமஸ் அனுப்பிய வாட்ஸ்அப் வீடியோவைப் பார்த்த ஜான் அதிர்ந்து போனான் .

'யார் இந்த தென்றல்? ஒருவேளை தாமஸ் சாவுக்கு

தென்றல்தான்காரணமோ? :ஏஞ்சல் உடம்பில் இருப்பது தென்றல் தான் என்றால் நம் குடும்பத்திற்கும் தென்றலுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் உள்ளது அது என்ன?

யாரிடம் போய் கேட்பது? என்று குழம்பினான்.

ஜானுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்பாவிடம் வெளிப்படையாக பேசி விட வேண்டியது தான்.அதே நேரத்தில் ஏதோ ஒரு தயக்கம் அவனை தடுத்தது ஏஞ்சலின் உடம்பில் தென்றல் இருக்கிறது என்றால் அப்பா நிச்சயம் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார் நிச்சயம் ஏஞ்சலுக்கு அது பாதிப்பை தரும். என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

முதலில் சரத்தை போய் பார்த்து பேசுவோம் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் மனம் சொல்ல ஜானுக்கும் அதுவே சரியென்று பட்டது.

சரத்தின் ஃபோன் நம்பருக்கு தொடர்பு கொண்டான்

ரிங் போனது

சரத் எடுக்கவில்லை

ஒருவேளை பிஸியாக இருப்பான். எதற்கும் நேராக போய் பார்த்து விட்டால் நன்றாக இருக்கும். ஜான் யோசனையை செயல்படுத்த நினைத்தான்.

வெளியே கிளம்புகையில் எதிரே ஜார்ஜ் வந்தார்

"எங்க கிளம்பிட்ட?"

"அப்பா ஒரு இடம் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்"

என்றவன் அவர் அவனைக் கேள்வியாகப் பார்ப்பதை புரிந்து கொண்டான். 

"பக்கத்துல தாப்பா ஒரு மணிநேரத்தில் வந்துருவேன்"

ஜார்ஜ் அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே நகர்ந்தார்

வெளியே வந்த ஜான் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

பைக் சீறியது. சேவிளை மெயின்ரோட்டை அடைந்தவன் நாகர்கோவில் செல்ல வலது பக்கம் திரும்பினான். 

பத்து நிமிடம் போயிருப்பான் அதற்குள் அவனது அலைபேசி அடித்தது.

எடுத்தான். சரத் தான் பேசினான். 

"ஹலோ"

"சொல்லு ஜான் நான் சரத் பேசுறேன்"

"சரத் எங்கே இருக்க?"

"ஆபீஸ்ல இருக்கேன்"

"ஒரு ஒன் ஹவர் பிரீ பண்ணிக்க முடியுமா?"

"வா ஜான் ஒண்ணும் பிரச்சனை இல்லை"

"சரி நேர்ல பேசிக்கலாம் அங்க தான் வந்துட்டு இருக்கேன்"

"ஓகே ஜான்"

பேசிவிட்டு அலைபேசியை பாக்கெட்டில் வைத்த ஜான் பைக்கை விரட்டினான்.

சரத்தின் ஆபீஸ் மண்டே மார்க்கெட் தாண்டி அமைந்திருந்தது.

ஆபீஸ் அடைந்தவன் பைக்கை நிறுத்தினான்

மாடிப்படியில் ஏறினான்

கண்ணாடி கதவை தள்ளி திறந்தான்.

ரோலிங் சேரில் அமர்ந்திருந்த சரத் புன்னகைத்தான்.


"வா ஜான் என்ன இவ்வளவு தூரம்?" சிரித்தபடியே கேட்டவன் பெல்லை அழுத்தினான் .

ஒரு பெண் எட்டிப் பார்த்தாள் 

"ரெண்டு காபி "

சரத் சொல்ல அவள் தலையசைத்துப் போனாள்

ஜான் உட்கார்ந்தான். மூச்சு வாங்கினான்


ஜானின் உடல்மொழியை சரத் கவனித்தான்

"என்ன ஜான் உனக்கு ஏதும் பிரச்சனையா என்ன?"

சரத் கேட்க 

ஜான் "ஆம்" என்று தலை அசைத்தான்.

"ஓகே முதல்ல ரிலாக்ஸ் பண்ணிக்கோ

பிரச்சனை என்னன்னு விளக்கமா சொல்லு எனக்கு "

சரத் கேட்க ஜான் சொல்ல ஆரம்பித்தான்.

கோயில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்தது வந்த அன்று அருகிலிருந்த குளத்தில் குளிக்கப் போனது குளத்தில் குளிக்கும்போது தெரிந்த ஏஞ்சலின் மாயத்தோற்றம் அதன்பிறகு தான் அடைந்த மயக்கம் ஏஞ்சலின் அறைக்குச் செல்லும்போது தனக்கு பின்னால் இருந்த கருப்பு உருவம் அந்த கருப்பு உருவம் ஏஞ்சலை ஆக்கிரமித்தது தாமஸ் கொல்லப்பட்டது தாமஸ் அனுப்பிய வாட்ஸ்அப் வீடியோ தன் தந்தை ஜார்ஜின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஜான் விலாவாரியாக சரத்திடம் எடுத்துரைக்க சரத் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டான் .


"ஜான் நீ சொன்னதிலிருந்து எனக்கு ஒண்ணு புரியுது"

"சொல்லு சரத்"

"அந்த வாட்ஸ்அப் வீடியோ வச்சு பார்க்கும் போது தென்றலுக்கு இல்லன்னா தென்றலை சேர்ந்தவர்களுக்கு உன் குடும்பத்தில் யாரோ என்னமோ பண்ணி இருக்காங்க அது என்னன்னு முதல்ல கண்டுபிடிக்கணும்"


"அது எப்படி முடியும்?"


"முடியும் ஜான் அடுத்த கொலை நடக்கிறதுக்குள்ள கண்டுபிடிக்கணும்"


சரத் சொல்ல ஜான் அதிர்ந்தான்.


"சரத் நீ சொல்றத வச்சு பார்க்கும் போது.."


"ஆமா ஜான்..உன் குடும்பத்துல இருக்கற யாரையுமே அது விடாது இது என்னோட கெஸ் அதனால தென்றலுக்கு என்ன நடந்தது அப்படின்னு நாம கண்டுபிடிக்கணும் அதுக்கு முன்னாடி தென்றல் யார்னு உனக்குத் தெரிஞ்சாகணும்.

அதுக்கு ஏதாவது வழி இருக்கா?"


"அப்பாக்கு விஷயம் தெரிஞ்சுருக்கு ஆனா அப்பா எதுவும் சொல்ல மாட்டார்"


" அது பரவாயில்லை நீ ஒண்ணு பண்ணு"


"சொல்லு சரத்"


"உன் அப்பா கிட்ட ஒர்க் பண்ற ஸ்டாப் எல்லார்கிட்டயும் விசாரிக்கணும்

கண்டிப்பாக நமக்கு ஏதாவது ஒரு நூல் கிடைக்கும்

அதுமட்டுமில்ல அப்பாவோட பேங்க் பேலன்ஸ் பேங்க் ஸ்டேட்மென்ட் எல்லாமே கலெக்ட் பண்ணு"


"அது எதுக்கு சரத்?"


"சொல்றத செய்"


சொன்ன சரத் கண்கள் மூடி யோசித்தான்.

*** 

"அப்பா"

கண் முன் வந்து நின்ற பீட்டரை பார்த்த ஜார்ஜ்

"சொல்லுப்பா" என்றார்.


"நீங்க கூப்பிட்டீங்கனு பிரின்சி சொன்னா"


"ஆமா நான் தான் கூப்பிட்டேன் மறந்துட்டேன்"


"என்ன விஷயம் பா?"


"சும்மாதான் கூப்பிட்டேன்

இன்னைக்கு நைட்டு என்ன பிளான் உனக்கு?"


"விடியற்காலையில் லோட் வருதுப்பா ஆபீஸ்ல தங்கிக்கலாம்னு இருக்கேன் "


"ரொம்ப நல்லது அங்கேயே தூங்கு"

சொன்ன ஜார்ஜை ஒன்றும் புரியாமல் பார்த்தபடி 

"சரிப்பா "என்றான் பீட்டர்.

நேரம் கரைந்தது

"என்னங்க வந்து சாப்பிடுறீங்களா?"


ரோசி கேட்க ஜார்ஜ் தலையசைத்தார் .


டைனிங் டேபிளுக்கு வரும்போது ஜார்ஜின் பார்வையில் பட்டது பீட்டரின் அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு.

பதட்டமான ஜார்ஜ் பீட்டரின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கே பீட்டர் இல்லை.  

அவரைப் பின்தொடர்ந்து வந்த ரோஸி "என்னங்க ஆச்சு?" என்று கேட்டாள்


ரோஸிக்கு ஒன்றும் பதில் சொல்லாத ஜார்ஜ் "பீட்டர் எங்கே ?"

என்று கேட்டார்.


"இங்கேதான் இருந்தான் இப்ப"


"அவனைப் பார்த்தா உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லு"

ஜார்ஜ் சீரியஸாக சொல்ல அவர் முகபாவம் கண்டு திகைத்து நின்றாள். 

சாப்பிட்டு முடித்து விட்டு தன் அறைக்கு வந்தார் ஜார்ஜ் .

'பீட்டர் ஏன் இன்னிக்கு ஆபீஸ் போகல.? அவனை எப்படியாவது ஆபீசுக்கு அனுப்பி வைக்கணும்'

நினைத்த ஜார்ஜ் வாசலில் நிழலாடியது கண்டு நிமிர்ந்தார்.

வாசலில் ஏஞ்சல் நின்று கொண்டிருந்தாள்.


"தாத்தா" ஏஞ்சல் அழைத்தாள்.

ஜார்ஜ் புன்னகைத்தார்

"உள்ளே வாம்மா"

ஏஞ்சல் உள்ளே வந்தாள்.

அப்போது ஜார்ஜின் அலைபேசி அடித்தது

எடுத்தார் .

பீட்டர் பேசினான்

"சொல்லுங்கப்பா"

"பீட்டர் உடனே நீ ஆபீஸ்க்கு போ இன்னைக்கு நைட் அங்கேயே தங்கு.. இங்கே தங்க வேண்டாம்"

ஜார்ஜ் பதட்டமாய் சொன்னார்.

"என்னப்பா சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியலையே"

"நான் சொல்றத கேளு உடனே கிளம்பு"

"சரிப்பா "

பீட்டரிடம் பேசிவிட்டு ஜார்ஜ் நிம்மதியாக திரும்பினார்.

" தாத்தா "

ஏஞ்சல் அழைத்தாள் .


"சொல்லும்மா"


"இன்னிக்கு பீட்டர் சித்தப்பா சாகப் போறதில்லை"

ஏஞ்சல் சொல்ல ஜார்ஜ் அதிர்ச்சிக்கு உள்ளானார்.


"என்னம்மா சொல்ற? உனக்கு எப்படித் தெரியும்?" ஜார்ஜ் பதட்டமாய் கேட்க புன்னகை மாறாத ஏஞ்சல் சொன்னாள்.


"ஏன்னா இன்னிக்கு சாகப் போவது நீங்கதான் தாத்தா"

5


“ இன்னைக்கு நைட்டு சாகப் போகிறது நீங்கதான் தாத்தா “

ஏஞ்சல் சொல்ல ஜார்ஜ் அதிர்ந்தார்.

" என்ன சொல்ற நீ?"

கோபமாய் ஏதோ சொல்ல ஜார்ஜ் முயன்றார். தொண்டையிலிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. யாரையாவது கூப்பிடலாம் என்று நினைத்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் வாயிலிருந்து வார்த்தை வெளியே வரவில்லை .அவரின் அவஸ்தையை பார்த்த ஏஞ்சல் சிரித்தாள்.


" என்ன தாத்தா ஒண்ணும் பண்ண முடியலையா ?"


கேட்டவள் அவரையே இமைக்காமல் பார்த்தாள். ஜார்ஜ் ஏஞ்சல் விழிகளைப் பார்த்தார்.


ஏஞ்சல் கட்டளையிட்டாள்.


 "தாத்தா"


"சொல்லுமா"


" அந்த டேபிள் பக்கத்துல போங்க"


 ஜார்ஜ் டேபிளின் அருகில் சென்றார்.


"அது மேல இருக்கிற கத்தியை எடுங்க தாத்தா"


ஜார்ஜ் எடுத்தார்.


  ஏஞ்சல் அவர் மீதிருந்த விழிகளை எடுக்கவில்லை. விழிகளால் கட்டளையிட்டாள். 


ஜார்ஜ் எஜமான் கட்டளையை சிரமேற்கும் அடிமைபோல் அந்த கத்தியால் தன் மணிக்கட்டை அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிட்டது.

அவர் கீழே விழுவதை சந்தோசமாக பார்த்துக்கொண்டிருந்தாள் ஏஞ்சல்.


மறுநாள் ஜார்ஜ் இறந்திருந்ததைக் கண்ட அனைவரும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்தனர் ஒன்றும் புரியாமல் குழம்பினர் . ரோஸி அழுது அழுது ஓய்ந்து இருந்தாள்.  நடப்பதற்கெல்லாம் காரணம் ஏஞ்சல் தான் என்று ஜான் புரிந்தான்.

ஆனாலும் இதை எங்கு போய் சொல்வது என்று உள்ளேயே தவித்தான்.

அன்று மாலை ஜார்ஜை அடக்கம் செய்து வந்து ஜான் வீட்டில்.அமர்ந்திருந்த நேரம் சரத் வீட்டுக்கு வந்தான்.


" ஜான்"

"சொல்லு சரத்"

"கொஞ்சம் என் கூட வர முடியுமா?"

"எங்கே போறோம்?"

" ப்ளீஸ் வா சொல்றேன்"


சரத் சொல்ல ஜான் தலையசைத் தான்

இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர்.

 சரத் காரில் வந்திருந்தான். ஜான் ஏறிக்கொள்ள சரத் காரை கிளப்பினான். அரைமணிநேரத்தில் சரத் தன் அலுவலகத்தை அடைந்தான்.

ஒன்றும் புரியாமல் சரத்தை ஜான் பின்தொடர்ந்தான் .


 "உட்காரு ஜான் "

சரத் சொல்ல ஜான் அவனுக்கு எதிரில் உட்கார்ந்தான்.


உள்ளே இருந்து ஒரு போட்டோவை எடுத்து போட்டான் சரத்.


" இவனை தெரியுமா ஜான் கொஞ்சம் பார்த்து சொல்லு"


சரத் காண்பித்த போட்டோவில் மெலிதாய் தாடிவைத்த ஒருவன் நேர் பார்வை பார்த்தபடி முறைத்துக் கொண்டிருந்தான் .


 அந்த போட்டோவைப் பார்த்த ஜான்  


"இல்ல சரத் இவனை நான் எங்கேயும் பார்க்கல" 


" இவனோட பெயர் ஜோஸ் இவன் அக்கவுண்டுக்கு உங்க அப்பாவோட அக்கவுண்டில் இருந்து ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அஞ்சு லட்ச ரூபா போயிருக்கு.அப்படின்னா இவன் வந்து உங்க அப்பாக்கு நல்லா தெரிஞ்சவன். சரியா?" 


 ஜான் சரத்தை பார்த்தான். 


" அப்போ என்ன சொல்ல வரே சரத்?"


" ஜான் நான் சொல்றதை நல்லா கேளு. இந்த ஜோஸ் நல்லவன் இல்ல."

சொன்ன சரத்தை பார்த்தான் ஜான்.


" உங்க அப்பா என்னமோ பெருசா தப்பு பண்ணி இருக்காரு அந்த தப்பு தான் இப்ப குடும்பத்தை துரத்தி அடிக்குது"


சரத் சொல்ல ஜான் திகிலாய் பார்த்தான்.


"எனக்கு ஒரு ஐடியா தோணுது"


" சொல்லு ஜான்"


" இவன விசாரிச்சா நமக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும் கரெக்டா?"


"கரெக்டு தான் ஆனா ஒரு சின்ன சிக்கல் இருக்கு"


" என்ன சிக்கல் சரத்?"


 " ஜோஸ் இப்போ உயிரோட இல்ல செத்துட்டான்"


சரத் சொல்ல ஜான் தளர்ந்தான்.


" இப்ப நாம என்ன பண்ண போறம் சரத்?"


" யோசிப்போம்" சொன்ன சரத் " இப்போ உன் குடும்பத்தில் மிச்சமிருக்கிறது நீயும் உன் தம்பி பீட்டரும். கொஞ்ச நாள் ரெண்டு பேரும் வீட்டுல தங்கறது வேண்டாம்"


ஜான் யோசித்தான்


" என்ன யோசிக்கிற ஜான்?"


"எல்லார்கிட்டயும் என்ன சொல்றதுன்னு தெரியல"


"ஏதாவது சொல்லி சமாளி நீயும் வீட்டில் தங்குறது ரொம்ப ஆபத்தானது"


சரத் சொல்ல ஜான் தலையசைத்தான்.


*** 


அரசு துவக்கப்பள்ளி. 


"படிக்கிற பிள்ளைங்க ஆர்வத்தை அதிகப்படுத்தணும். அதுக்கு பல முறை நான் உங்ககிட்ட சொல்லியும்.நீங்க இதுவரை ஒண்ணும் செய்யல..ஆனா வந்து கொஞ்ச நாளில் செயல் முறையில் கல்வியை மாற்றி எல்லாக் குழந்தைங்க மனசில் ஆர்வத்தை கொண்டு வந்த மேரி டீச்சரை உங்க எல்லோரின் சார்பா நான் பாராட்டறேன்.." 


தலைமையாசிரியர் மணி சொல்ல மீட்டிங்கில் இருந்தவர்கள் எல்லோரும் கைதட்ட மேரி டீச்சர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் சகாய மேரி எழுந்தாள்.


எல்லோரையும் பார்த்துக் கும்பிட்டாள். 


"உட்காரும்மா..இந்த சின்ன வயசில் எத்தனையோ குழந்தைங்க அன்பை சம்பாதிச்சிருக்கேம்மா..உன்னை நினைச்சா பெருமையா இருக்கும்மா.." 

மூத்த ஆசிரியை பிரகாசி சொல்ல அனைவரும் மேரியை பெருமையாகப் பார்த்தனர். 


"நீங்க எல்லோரும் என்னைப் பாரட்டினீங்க. அது உங்க பெருந்தன்மை. நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடலை.. குழந்தைங்க ஆர்வமா படிக்க வைக்க இருக்கிற பொருளை வெச்சே என்னென்ன பண்ண முடியும்னு கத்துக்கொடுத்தேன். அவ்வளவு தான்..எல்லோருக்கும் என் நன்றி.." 


சொன்ன மேரி தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள். 


மேரி நான்காம் வகுப்பில் வகுப்பாசிரியை. 


இந்த வகுப்பிற்கு வந்து இரண்டு வாரங்களே. ஆகியுள்ளதால் இன்னும் குழந்தைகளுடன் நன்றாகப் பழகவில்லை. 


மேரி வகுப்பில் நுழைந்தாள். 


எல்லோரும் எழுந்து நின்றனர். 

புன்னகைத்தாள்.

"உட்காருங்க"

உட்கார்ந்தனர். எல்லோர் முகத்தையும் பார்த்த மேரியின் கவனத்தை கடைசி வரிசையில் பாவமாய் அமர்ந்திருந்த ஒரு சிறுமி கவனத்தை ஈர்த்தாள். 


'வகுப்பை முடித்துவிட்டு அழைத்துப் பேச வேண்டும்' முடிவெடுத்த மேரி அறிவியல் பாடத்தை எளிய முறையில் விளக்கினாள்.


"இப்போ என் கையில்.இருக்கும் டஸ்டரை தூக்கிப் போடறேன்..என்னாகும்?" 

தூக்கிப் போட்டாள். அது கீழே. விழுந்தது.


"இப்படித்தான் மரத்தின் மேலிருந்த ஆப்பிள் ஒண்ணு கீழே விழுந்துச்சு.. இதுக்கு காரணம் புவி ஈர்ப்பு விசை..இதை முதன் முதலா உலகிற்கு சொன்னவர் நியூட்டன்.." 


மேரி சொல்ல அவள் முக பாவங்களிலும் வார்த்தைகளுக்கு எங்கெங்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்த அழுத்தமும் குழந்தைகளை மேரியை முழுவதும் கவனிக்க வைத்தன.


வகுப்பு முடியும்.நேரத்தில் மேரி அந்த சிறுமியிடம் சென்றாள்.


"என் கூட வா.." 

அவள் பயந்தாள்.

"பயப்படாதே..ஒண்ணும் செய்ய மாட்டேன்.." 

அவள் கையைப் பிடித்தாள் மேரி.

தன் சேம்பருக்கு சிறுமியை அழைத்துப் போனாள்.

தான் சாப்பிட வைத்திருந்த லன்ச் பாக்ஸ் எடுத்து அந்த சிறுமியிடம் கொடுத்தாள்.


"சாப்பிடு.." மேரி சொல்ல அந்த சிறுமி மறுத்தாள்.


"சொன்னா கேக்கணும் சாப்பிடு.. காலையில் ஒண்ணும் சாப்பிடலையா?" 

மேரி கேட்க அவள் இல்லையென்று தலையசைத்தாள்.


"சாப்பிடு.." மேரி பாக்ஸ் ஓபன் செய்து கொடுத்தாள்.


அந்த சிறுமி தயங்கித் தயங்கி சாப்பிட்டாள்.

மேரியைப் பார்த்து புன்னகைத்தாள்.


"அப்பாடா..சிரிச்சுட்டே.. காலையிலே ஏன் சாப்பிடலை.. அம்மா சமைக்கலையா?"


மேரி கேட்க அந்த சிறுமி சோகமாக சொன்னாள்.


"எனக்கு அம்மா இல்லை.டீச்சர்.." 


மேரி அவள் கைகளைப் பற்றிக்கொண்டாள்.


"கவலைப்படாத.. உனக்கு என்ன பிரச்னைனாலும் டீச்சர் நான் இருக்கேன்.சரியா?" 


மேரி கேட்க அந்த சிறுமியின் முகத்தில் ஒளி.


"ஆமா..உன் பேர் என்ன?" மேரி கேட்க  

அந்த சிறுமி சொன்னாள்.


"தென்றல்.."



6


சொன்னாக் கேளு பீட்டர் கொஞ்ச நாள் நாம ரெண்டு பேருமே வீட்டில் தங்க கூடாது "

ஜான் சொல்ல பீட்டர் கேட்டான்.


"ஏன் அப்படி சொல்ற?"


"என்னை எந்த காரணமும் கேட்காத. நான் சொல்றதைக் கேள் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்"


"அப்பா மாறி தாமஸ் அண்ணன் மாதிரி நானும் செத்து போயிடுவேன்னு நினைக்கிறியா?"


பீட்டர் கேட்க ஜான் அயர்ந்தான்.


"அப்படி இல்ல பீட்டர் நான் என்ன சொல்றேன்னா?"


"நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். இன்னைக்கு நைட்டு நான் இங்க தான் தங்கப் போறேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம். நீ வேணும்னா வெளியில போய் தங்கிக்கோ"


பீட்டர் தீர்மானமாகச் சொல்ல ஜான் மௌனமானான்.


நடந்ததையெல்லாம் கேட்ட சரத் 


"நீ என்ன சொன்னாலும் பீட்டர் கேட்கலையா?"


"ஆமா சரத் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல"


"சரி பார்ப்போம் என்ன ஆகப் போகுதுன்னு"


சரத் சொல்ல ஜான் சரத்தையே பார்த்தான்.

*** 


அன்று மாலை

பீட்டர் தன் அறையில் தங்கியிருந்தான்.


'யார் வராங்கன்னு நான் பாக்கறேன் யார் வந்தாலும் சரி' தனக்குள் எண்ணியபடி காத்திருந்தான்.


"அண்ணா " பிரின்சி வந்தாள்.


"சொல்லுப்பா"


"என்ன நடக்குது நம்ம வீட்டுல ? யாருக்கும் எதுவும் தெரிய மாட்டேங்குது தாமஸ் அண்ணன் செத்து போயிட்டாரு அப்பா தற்கொலை பண்ணிட்டாரு ஜான் அண்ணா இங்க நீங்க ரெண்டு பேரும் தங்கக் கூடாதுன்னு சொல்றாரு என்ன நடக்குது நம்ம வீட்ல?"


பீட்டர் பிரின்சியைப் பார்த்தான்.


"ஒரு தப்பு பண்ணிட்டோம் அந்த தப்பு எங்களை துரத்துது"


பீட்டர் சொல்ல பிரின்சி அதிர்ந்தாள்.


"என்னண்ணா சொல்றீங்க? என்ன தப்பு பண்ணிங்க?"


பீட்டர் சொல்ல வாய் எடுக்கும் முன்பு வாசலில் நிழலாடியது.


"அத்தை உன்னை பாட்டி கூப்பிட்டாங்க"


ஏஞ்சல் சொல்ல பிரின்சி அங்கிருந்து கிளம்பினாள்.


ஏஞ்சல் புன்னகைத்தாள்.


பீட்டர் சொன்னான்.


"உனக்காகத்தான் காத்திருக்கிறேன் ஏஞ்சல் "

பீட்டரின் முகத்தில் புன்னகை.


"தெரிஞ்சிடுச்சா?" ஏஞ்சல் கேட்க


"அப்பா ரூமுக்கு கடைசியா போனது நீ அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு மத்தவங்க வேணும்னா நினைக்கலாம் நான் நினைக்க முடியாது. அப்பா எப்படின்னு எனக்கு எல்லாமே தெரியும்"


சொன்ன பீட்டர் ஏஞ்சல் எதிர்பாராத ஒரு வினாடியில் அவளை தாக்கினான். 


பீட்டரின் கையிலிருந்த தடி ஏஞ்சலின் தலையைத் தாக்கியது . அதை எதிர்பாராத ஏஞ்சல் கீழே விழுந்தாள். மயக்கமானாள்.

பீட்டர் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மயங்கிக் கிடந்த ஏஞ்சலை தரதரவென்று அறைக்குள் இழுத்து கட்டிலுக்கு அடியில் போட்டான். 


" என்ன குட்டி பிசாசே நீ என்னைக் கொல்லப் போறியா இங்கேயே கிட. எல்லாரும் போனதுக்கப்புறம் வந்து உன்னை மேல அனுப்பி வைக்கிறேன்"


பீட்டர் விஷமப் புன்னகையுடன் வெளியில் வந்தான்.  

ரோஸி நிர்மலா பிரின்சி எல்லோரும் அவனை பயத்துடன் பார்த்தனர்.


"பயப்படாதம்மா இன்னிக்கு எனக்கு ஒண்ணும் ஆகாது" 


பீட்டர் சொல்ல ரோஸிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பிரின்சி மட்டும் அந்த தப்பு என்னவாக இருக்கும் என்றே யோசித்தாள்.


நேரம் ஓடியது.


எல்லாரும் தூங்கிவிட பீட்டர் தன் அறைக்குச் சென்றான்.

கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தான். ஏஞ்சல் இன்னும் மயக்கத்தில் இருந்தாள் சமையல் அறையில் இருந்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்தான். ஏஞ்சலை இழுத்து வெளியில் போட்டான்.

கத்தியை எடுத்தான். ஏஞ்சலின் கழுத்தில் கத்தியை வைத்தான்.


"என்னையா கொல்ல வரே? செத்துத் தொல" 


சொன்னவன் கத்தியை அழுத்த முற்படுகையில் 


"என்னது சத்தம்?" பீட்டர் திடுக்கிட்டான்.


வெளியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் நெருப்புப்பொறி பறந்தது. என்னவென்று வேடிக்கை பார்ப்பதற்குள் கரண்ட் போனது. பீட்டர் பதட்டமானான். கரண்ட் போனால் கண்டிப்பாக எல்லோரும் எழுந்து விடுவர்.


'சீக்கிரமா ஏஞ்சலக் கொன்னுட்டு யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணியாகணும் ‘ 


தன் அலைபேசியில் டார்ச் லைட்டை உயிர்ப்பித்தான். கீழே பார்த்தவன் உச்சமாய் அதிர்ந்தான். ஏஞ்சல் அங்கில்லை

பரபரப்புடன் தேடினான் அருகில் நின்றபடி யாரோ மூச்சு விடும் சத்தம் கேட்டது டார்ச் வெளிச்சத்தை அங்கு கொண்டு சென்றான். ஏஞ்சல் நின்றுகொண்டிருந்தாள் அவனையே தீர்க்கமாக பார்க்க பீட்டர் பயந்தான். அறைக் கதவைத் திறந்து கொண்டு ஓட ஆரம்பித்தான். ஏஞ்சல் புன்னகைத்தபடி பார்த்தாள். பதட்டத்தில் மாடி படிக்கட்டுகளில் ஓடியவன் மொட்டை மாடியை வந்தடைந்தான். பின்னால் ஏஞ்சல் வரவில்லை என்பதை உணர்ந்து நிம்மதி அடைந்தான்..


மொட்டை மாடியில் எங்கும் கும்மிருட்டாக இருக்க அலைபேசியில் டார்ச் வெளிச்சத்தை அங்குமிங்கும் அடித்தான்.


அப்போது அலைபேசி தொலைக்காட்சிக்கு பக்கத்தில் வைத்தாற்போல் ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சப்தம் எழுப்பியது.

பீட்டர் அதிர்ந்தான். யாரோ இங்கு இருக்கிறார்கள். பதட்டத்தில் டார்ச் லைட்டை கண்டபடி திருப்பினான். மாடியின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்த ஒரு உருவம் கண்ணுக்கு தென்பட்டது.


பதறிய பீட்டர் "யார்?" என்று கேட்டான்.


உருவம் ஒன்றும் பேசவில்லை.


இறங்கி தப்பித்துவிடலாம் என்று பீட்டர் நினைக்க ஏஞ்சல் படிக்கட்டுகளில் ஏறி வந்து கொண்டிருந்தாள்.


" சித்தப்பா கத்தியை மறந்துட்டீங்க அதான் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்" 

ஏஞ்சல் பீட்டரின் கையில் கத்தியை கொடுத்தாள்.


பீட்டர் வியர்த்தான். 

"வேண்டாம்..என்னை ஒண்ணும் பண்ணாதே.." 

அலற நினைக்க தொண்டையில் இருந்து சப்தம் எழவில்லை. 

"அம்மா..மாடிக்கு யாராவது வாங்க.." பீட்டர் சொல்ல முற்பட்டான். அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. தொண்டையில் யாரோ காலை.வைத்து அழுத்தியது போல் உணர்ந்தான். மூச்சு வாங்கியது.


பேசுவது எதுவும் வெளிவராமல் போக இரு கைகள் எடுத்து ஏஞ்சலைக். கும்பிட்டான். 

ஏஞ்சல் அவனையே பார்த்தாள். 


"வாட்டர் டேங்க் மேல ஏறு.." ஏஞ்சல் சொல்ல பீட்டர் அதிர்ந்தான். 

மறுப்பாய் தலையை ஆட்டினான். 


ஏஞ்சல் உருவத்தைப் பார்த்தாள். உருவம் புகையாய் அவன் மேல் படிந்தது.


யாரோ பீட்டரைப் பிடித்து தூக்கியது போல் உணர்ந்தான். 


மாடியின் விளிம்பில் தலை கீழாய் தொங்கினான்.

திமிற முயன்று தோற்றான். பயமாய் ஏஞ்சலைப் பார்க்க ஏஞ்சலின் முகத்தில் புன்னகை. ஏஞ்சல் புகையைப் பார்த்து கண்காட்ட பீட்டர் கீழே ஏஏஏ போனவன் தரையை அடையும் போது வேகமாய் தரையை அடைந்து தலை சிதறினான். ரத்தம் தெறிக்க கண்கள் நிலைத்தபடி இறந்து போனான்.


*** 


சவப்பெட்டி யில் இருந்த பீட்டரை கண்கள் கலங்கப் பார்த்தான் ஜான். அருகில் சரத் நின்றிருந்தான்.


"எவ்வளவோ முறை சொன்னேன் சரத்..என் பேச்சைக் கேட்கலை அவன்.." ஜான் சொல்ல 

சரத் யோசனையில் ஆழ்ந்தான்.

"என்னாச்சு?" 

"நீ ஒருத்தன் தான் இருக்கே..இன்னும் கவனமா நாம இருக்கணும்.." சரத் சொல்ல ஜானுக்கு அப்போதே தூக்கி வாரிப்போட்டது.

நிர்மலா அருகில் வந்தாள்.

"சொல்லும்மா.."

"கோயில் திருவிழா க்குத்தான் ஊருக்கு வந்தோம்..இப்போ வந்த இடத்தில்.மூணு பெரிய காரியம் நடந்திடுச்சு.. நாம சீக்கிரமா பெங்களூருக்குப் போலாங்க.. இங்க இருக்கிறதுக்கே பயமா இருக்கு"

நிர்மலா சொல்ல.ஜான் தலையசைத்தான்.


எதார்த்தமாக திரும்பிய ஜான் அதிர்ந்தான். ஏஞ்சல் நின்றிருந்தாள். அவனையே புன்னகையுடன் பார்த்தபடி.


7


ஏஞ்சல் ஜானை பார்ப்பதை சரத்தும் பார்த்தான். ஜானை வெளியே கூப்பிட்டான். வெளியே வந்தான் ஜான் 

“ஜான் இப்ப நமக்கு அதிக டைம் இல்ல எவ்வளவு சீக்கிரம் தென்றல் யாரு தென்றலுக்கு என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்கணும். எவ்வளவு சீக்கிரம் கண்டு படிக்கிறோமோ அவ்வளவு நல்லது நமக்கு.

அதுமட்டுமில்ல ஏஞ்சல காப்பாத்தணும்.


ஏஞ்சல் உடம்புக்குள்ள இருக்கிற தென்றலுக்கு நீ எதிரி. ஏஞ்சலுக்கு நீ அப்பா. ஆனால் ஏஞ்சல் உடம்பில் இருக்கும் தென்றலால் உனக்கு ஆபத்து தான் அதிகம். உன்னை பழி வாங்க முடியாமல் போயிட்டா ஏஞ்சல் உயிருக்கும் ஆபத்து வரும்" 


"சரத் நீ சொல்றது எனக்கு ரொம்ப பயமா இருக்கு" 


"பயப்பட்டாலும் உண்மை அதுதான்"


"இப்ப நான் என்ன பண்ணனும்?"


'என்கூட கிளம்பி வா எனக்கு ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு அத வெச்சு மேற்கொண்டு விசாரிப்போம்" 


ஜான் அங்கு நின்று கொண்டிருந்த தன் மைத்துனர் டேவிட் இடம் காரியங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சரத்துடன் கிளம்பினான்


ஜான் காரில் ஏறிக்கொள்ள சரத் காரை படு வேகமாக ஓட்டினான். 


கார் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாலையில் திரும்பியது. 

ஜான் குழம்பினான்

" சரத் எங்க போறோம் இப்போ நாம?"


" சொல்றேன்" சொன்ன சரத் காரை இன்னும் வேகப்படுத்தினான்.


ஜான் வெளியில் பார்த்தான். தோவாளை என்னும் பெயர் பலகையை பார்த்தவன் குழம்பினான்.

" எங்கே வந்திருக்கோம் நாம?" ஜான் கேட்க சரத் ஒன்றும் பேசாமல் உள்ளே மண்சாலையில் திரும்பினான்.

அங்கிருந்த ஒரு வீட்டின் முன் நிறுத்தினான்.


" இது யார் வீடு சரத்?"


" இறங்கு சொல்றேன் 


சரத் சொல்ல ஜான் இறங்கினான். 

அவனைத் தொடர்ந்து இறங்கிய சரத் ஜானிடம் சொன்னான்.


" இது ஜோஸோட வீடு."

ஜான் திகைத்தான். 


"ஏற்கனவே ஜோஸ் செத்துட்டான்னு நீ சொன்னியே?"


" ஜோஸ் செத்தது உண்மைதான் ஆனா நாம இங்க வந்திருக்க ஒரு காரணம் இருக்கு." 

சரத் சொன்னான்.


சரத் அழைப்பு மணியை அடித்தான் கொஞ்சநேரம் காத்திருப்புக்குப் பின் கதவு திறக்கப்பட்டது உள்ளே இருந்து ஒரு வயதான பெண் வந்தார் .


"வணக்கம்மா நான்தான் சரத்"


" வா தம்பி என் கூட போன்ல பேசுனது நீ தானா? "


" ஆமாம்மா நான் தான் பேசினேன்"


"உள்ளே வாங்க" 

உள்ளே சென்றனர்


" உட்காருங்க "

உட்கார்ந்தனர்.


ஜான் சரத்தை கேள்வியாகப் பார்த்தான்.


சரத் சொன்னான்


" இவங்க ஜோஸோட அம்மா"



*** 

தோவாளை


மேரி அதிகாலையிலேயே எழுந்து இருந்தாள். குளித்து பிரார்த்தனைகள் முடித்துவிட்டு வெளியில் வந்தாள். 

இன்னும் முழுதாக விடியாத வானம் இருட்டுடன் கலந்திருந்தது.


மெலிதான குளிர் அவள் மேனியை தழுவ கண்கள் மூடி ஒரு நிமிடம் அதை அனுபவித்தாள்.

அறையை எட்டிப்பார்க்க அங்கு பாட்டி இன்னும் உறக்கத்தில் இருந்தாள்.

சமையல் அறைக்குள் சென்றாள்

' இன்று என்ன செய்யலாம் ?' யோசித்தவள் தக்காளி சாப்பாடு செய்வோம் என்று தீர்மானித்தாள். சமையலில் ஈடுபடும் போது தென்றலின் நினைவு வர அவளுக்கும் சேர்த்து செய்து கொண்டு போலாம் என்று தீர்மானித்த மேரி தென்றலுக்கும் சேர்த்து சமைத்தாள் அரை மணி நேரத்தில் சமையல் முடிந்தது.


பாட்டி எழுந்திருந்தார். 


"என்ன பாட்டி காபி போட்டுத் தரவா?" கேட்ட மேரியைப் பார்த்து புன்னகைத்தார்.


பாட்டிக்கு காபி போட்டுத் தந்துவிட்டு 


"பாட்டி நான் கோவிலுக்கு போயிட்டு வரேன் வீட்ட பார்த்துக்குங்க" 


சொன்ன மேரி வீட்டிலிருந்து இறங்கினாள்.


கோவிலுக்குச் செல்லும் வழியில் நடந்தாள். மணி பார்த்தாள். ஆறரை மணி ஆக 

'பிரார்த்தனைக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும்' எண்ணிய மேரி நடையை விரைவாக்கினாள்.  


அப்போது ஒரு அலறல் சத்தம் கேட்டது மேரி திடுக்கிட்டாள். சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினாள். அங்கே ஒரு பெண் தப்பித்து ஓட எத்தனிக்க அவளை இருவர் பிடித்து டாட்டா சுமோவில் வலுக்கட்டாயமாக ஏற்றினர் .

மேரி பதறினாள். சாலை வெறிச்சோடி இருந்தது . ஜீசஸ் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அவர்களிடம் சென்றாள்.


"யார் நீங்க? எதுக்கு அந்த பொண்ண தூக்கி கார்ல போடுறீங்க?"


மேரி கேட்க அந்த இருவரில் ஒருவர் சிரித்தான்.


"டேய் இங்க வந்துட்டா பாரு வைஜயந்தி ஐபிஎஸ்"


அவன் சொல்ல மற்றவன் மேரியிடம் வந்தான்.


"யார் நீ? உனக்கு என்ன இங்க வேலை ? வேலைய பாத்துட்டு போ"


"என் வேலையை நான் பாத்துட்டு போறேன்" சொன்ன மேரி தொடர்ந்தாள் 


"அந்தப் பொண்ணை விடு "


அவன் கண்டுகொள்ளாமல் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான்.


மேரி பாய்ந்தாள் அவனைத் தடுத்தாள்

உச்சமாய் கோபம்கொண்ட அவன் மேரியை தள்ளிவிட்டான்.

மேரிக்கு பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் மொபைலை எடுத்து வண்டி நம்பரை போட்டோ எடுத்தாள்

டாடா சுமோவில் உள்ளிருந்து அந்தப்பெண் அலறினாள்.


"சேச்சி என்ன ரட்சிக்கணும் "


மேரி சுதாரித்து எழுவதற்குள் டாட்டா சுமோ கிளம்பிப் போனது. பார்வையிலிருந்து மறைந்தது. 

கீழே விழுந்ததில் பட்ட சிராய்ப்பு காயங்கள் எரிய அவற்றை கண்டுகொள்ளாத மேரியின் மனம் முழுவதும் அந்த பெண்ணின் மீதே இருந்தது.


மொபைலை எடுத்தாள். ஆர்டிஓ ஆபீஸில் வேலை பார்க்கும் தன் நண்பன் சங்கருக்கு போன் செய்தாள்.

ரிங் போனது.


"ஹலோ மேரி குட்மார்னிங்" சங்கர் சொல்ல


"குட்மார்னிங் தூங்கிட்டு இருக்கியா?"


"இல்ல மேரி எழுந்துட்டேன் சொல்லு"


"எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்"


"சொல்லு பண்ணிடுவோம்"


"ஒரு வண்டி நம்பர் அனுப்புறேன் அது யாரோட வண்டின்னு தெரியணும்'


"என்னாச்சு மேரி? எதுவும் பிராப்ளமா?"


"இல்ல சங்கர் அதெல்லாம் ஒண்ணும் இல்ல இந்த வண்டியோட ஓனர் மட்டும் கண்டுபிடிச்சு கொடு"


"ஓகே மேரி ஆபீஸ் போனதுக்கப்புறம் பாத்து சொல்லிடறேன்"


"தேங்க்ஸ் சங்கர்"


அதன் பிறகு மேரி பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட போதும் அவளது நினைவு முழுவதும் சேச்சி என்ன ரட்சிக்கணும் என்று கதறிய பெண்ணின் மீது மட்டுமே இருந்தது


பள்ளிக்குப் போனபின் குழந்தைகளின் முகத்தை பார்த்ததும் அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது பள்ளிக்கு போனதும் முதல் வேலையாக தென்றலை கூப்பிட்டு தான் கொண்டு வந்திருந்த தக்காளி சாதம் ஆம்லெட் கொடுத்து சாப்பிட வைத்தாள் மேரி.


"டீச்சர் "


"சொல்லுமா "


"நீங்க எதுக்கு எனக்கு சாப்பாடு கொண்டு வரீங்க? "


"ஏன்மா நான் கொண்டு வரக்கூடாதா ?"


"எதுக்கு உங்களுக்கு கஷ்டம்?" 


தென்றல் பெரிய மனுஷி போல் கேட்க மேரிக்கு சிரிப்பு வந்தது. தென்றலை அணைத்துக்கொண்டாள்.


" டீச்சருக்கு ஒரு கஷ்டமும் இல்ல. நீ டெய்லி வந்து என்கூட சாப்பிட்டு போ .சரியா?" 


மேரி கேட்க தென்றல் பூப்போல் சிரித்தாள்.


மேரியின் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தாள்.

சங்கர்.


" சொல்லு சங்கர் அட்ரஸ் கிடைச்சதா?"


"ஆமா மேரி நோட் பண்ணிக்க"


சங்கர் சொன்னான்.


"ஜார்ஜ் கூந்தக்குழிவிளை"


8


போலீஸ் ஸ்டேஷன்.

இன்ஸ்பெக்டர் ரகுராம் தன் எதிரில் அமர்ந்திருந்த மேரி சொன்னதை கவனத்துடன் கேட்டார்.


“அந்த டாட்டா சுமோவில் ஒரு பொண்ணைக் கடத்தினதா சொல்றீங்க. நம்பர் பிளேட்டை போட்டோ எடுத்திருக்கீங்க. அவங்க ரெண்டு பேருன்னு சொன்னீங்க. அவங்களில் யாராச்சும் ஒருத்தனோ இல்ல அந்த பொண்ணயோ போட்டோ எடுத்திருந்தா இந்நேரம் அந்த ஜார்ஜைத் தூக்கி இங்க உட்கார வச்சுருப்பேன்..”


“அந்த பதட்டமான சூழ்நிலை ல எனக்கு இதான் சார் பண்ண முடிஞ்சது.”


“பரவாயில்லை “


“இப்போ என்ன சார் பண்ணலாம்?”


“விசாரிப்போம். ஆனா அவனை ஒரு கட்டத்துக்கு மேல அழுத்த முடியாது. 

எதுக்காக அந்தப் பொண்ணைத் தூக்கினான்னும் தெரியாது. பொண்ணு வேற மலையாளின்னு சொல்றீங்க. நம்ம சைட் ஒண்ணும் பண்ண முடியாது.. சரி நான் விசாரிக்கிறேன்” 


சொன்ன ரகுராம்


“மேரி.. உங்களை நான் பாராட்டறேன். யாருக்கோ ஒண்ணுன்னு போகாம அக்கறையோடு இருக்கீங்க..”


“தேங்க்ஸ் சார்..” 


ரகுராம் ஜீப்பை எடுத்தார். கூந்தக்குழிவிளைக்கு ஜீப் கிளம்பியது.


“அய்யா..உங்களைப் பார்க்க இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்”


“என்ன விஷயமாம்?”


“உங்க கிட்டே தான் சொல்வாராம்”


“வரச்சொல்லு”


இன்ஸ்பெக்டர் ரகுராம் உள்ளே நுழைந்தார். 


“சொல்லுங்க..என்ன விஷயமா என்னைப் பார்க்கணும்?” 


ஜார்ஜ் கேட்க


“இன்னிக்கு காலைல உங்க டாட்டா சுமோவில் தோவாளை ல ஒரு பெண்ணைக் கடத்தினதா எனக்கு ஒரு புகார் வந்திருக்கு..”


“அதுக்கு?” 


ஜார்ஜ் கேலியாக சிரித்தார். 


“புகாரில் உண்மை இருக்கா இல்லையான்னு..” 


ரகுராமை முடிக்க விடாமல் சிரித்தார் ஜார்ஜ்.


“உண்மைதான்..” 


கூட நின்றிருந்த பீட்டர் தாமஸ் ஜோஸ் எல்லோரும் அவரை வியப்பாய் பார்த்தனர். 


“இதோ நிக்கிறானே..ஜோஸ்..இவன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டா..அவளை அங்க இருந்து இவன் தூக்கிட்டு வந்துட்டான்..”


ஜார்ஜ் கிண்டல் செய்கிறார் என்று ரகுராமுக்குப் புரிந்தது.


“அதாவது விருப்பம் இல்லாம..இல்லையா சார்?”


“ஆமா..”


“அப்ப நான் ஜோஸைக் கொண்டு போலாமா? “


ரகுராம் கேட்க அதை எதிர்பார்க்காத ஜார்ஜ் திகைத்தார்.


“வா ஜோஸ் போலாம்..சார் சொல்லிட்டாரே..” 


ரகுராம் சிரிக்க 


“வேண்டாம் சார் இது நல்லதுக்கு இல்ல”


சொன்ன ஜோஸ் சொல்லி முடிக்கும் முன் கடுமையாய் அறை வாங்கினான். உள்ளே ரத்தம் சூடாய் வர கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு துடித்தான். 


“போலீஸ்காரனுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும்..எனக்கு சொல்லித்தறியா நீ? ராஸ்கல்..” 


ரகுராம் சொல்ல 

ஜார்ஜ் கோபமானார். 


“உன்னை இன்னும் பத்து நாளில் இந்த இடத்தில் இருந்து மாத்திக்காட்டறேன்”


ரகுராம் சிரித்தார். 


“அதுக்குள்ள எனக்கு நீ செய்ற தப்புக்கு ஒண்ணுல ஆதாரம் கிடைச்சாக் கூட உன்னை உயிரோடு வெச்சு தோலை உரிச்சுடுவேன்” 


ரகுராமின் கண்களைப் பார்த்த ஜார்ஜ் பயந்தார். 

ரகுராம் கிளம்பிப் போய்விட ஜோஸ் ஆவேசமானான். 


“இதெல்லாம் அவ கொடுத்த புகார் தான்..” 


“யார் ஜோஸ்?” 


ஜார்ஜ் அருகில் வந்து கேட்டார்.


“அந்த ஸ்கூல் டீச்சர் ஒருத்தி காலையில் என்னையும் பீட்டரையும் பார்த்துட்டா..” 


ஜார்ஜின் கண்கள் சிவந்தன. 


“அவ கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கா அதான் இவன் வந்துட்டுப் போயிருக்கான்.”


“அவ எங்களைப் பார்த்துட்டாப்பா.. “


“அப்போ ஏண்டா அவளை விட்டுட்டு வந்தீங்க?” 


ஜார்ஜ் கேட்க 


“அப்பா..” 


“பீட்டர்.. நாம பண்றது பெரிய நெட்வர்க்.

எவனுக்கு ஆர்கன்ஸ் வேணுமோ..அவனுக்குப் பொருந்தற ரத்தவகையில் யார் யார் எங்கிருக்காங்கன்னு தகவல்கள் கிடைச்சு அவங்கள கடத்தி நம்ம நெட்வர்க்ல இருக்கிற ஹாஸ்பிடல்ல அவங்க ஆக்சிடன்ட்ல செத்த மாதிரி கொலை பண்ணி பிரெயின் டெத் பண்றோம். ஆர்கன்ஸ் எடுக்கிறோம். இதுல ஒரு சின்ன தீப்பொறி இருந்தாலும் பெரிய நெருப்பா மாறி நாமெல்லாம் அழிஞ்சிடுவோம். இன்ஸ்பெக்டர் வேற நம்மள கண்கொத்தி பாம்பா கவனிச்சுட்டிருக்கான். அவனுக்குன்னு சரியான ஆதாரம் கிடைச்சிருந்தா இந்நேரம் நாம லாக்கப்பில் இருந்திருப்போம்.அதனால..” 


சற்று இடைவெளி விட்ட ஜார்ஜ் ஜோஸைப் பார்த்தார்.


“அவளைக் கொண்டு வந்திடறேன் அய்யா..”


ஜோஸின் கண்களில் வெறி. 


“அப்பா” பீட்டர் அழைத்தான்.


“சொல்லு..”


“எங்கே கொண்டு வர்றது? இங்கேயாவா?”


“இங்கே வேண்டாம்..நாளைக்கு நம்ம வீட்டில அம்மா இல்லை.. நாம மூணு பேர் தான்.. நாளைக்கு நம்ம வீட்டுக்கு அவளைக் கொண்டு வந்திடுங்க..அங்கே வெச்சு ..அவளை 

முடிச்சிடுவோம்..” 


ஜார்ஜ் சொல்ல பீட்டரும் ஜோஸும் தலையசைத்தனர். 


*** 


மறுநாள். 


வழக்கம் போல் மேரி அதிகாலையில் எழுந்தாள். குளித்து சமையல் கட்டில் நுழைந்தாள். 


முன்தினம் தென்றல் பேசியது எண்ணத்தில் ஓடியது. 


“டீச்சர்..” 


“சொல்லும்மா..”


“நாளைக்கு...” எதையோ சொல்ல வந்த தென்றல் சொல்லாமல் புன்னகை மட்டும் செய்ய 


“இங்கே வா..” பக்கத்தில் கூப்பிட்டு வைத்தவள்..


“என்னம்மா சொல்லு என்கிட்டே?” 


“நாளைக்கு எனக்கு பர்த்டே டீச்சர்..”


“வாவ்..” மேரி தென்றலை அணைத்துக்கொண்டாள்.


“மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் மை டியர்..”


தென்றல் சிரித்தாள்.


“நாளைக்கு உனக்கு என்ன கிப்ட் வேணும்?”


“அதெல்லாம் வேணாம் டீச்சர்..”


“வேறென்ன வேணும்?”


“நீங்க என் கூடவே இருக்கணும் டீச்சர்..எப்பவும்”


“அவ்வளவு தானா? சரி இருக்கேன்..”


“ப்ராமிஸ்?”


“ப்ராமிஸ்” 


தென்றல் சிரித்தாள். 


மேரி தென்றலுக்குப் பிடிக்கும் என்று கேசரி செய்தாள். 

வழக்கமான ஆசிரியை மாணவி உறவைத் தாண்டி ஏனோ தென்றலை மேரிக்கு நிறையவே பிடித்திருந்தது. 


அன்று பள்ளிக்குச் சென்றவுடன் தென்றலை அழைத்து சாப்பிட வைத்தாள்.


“என்ன தென்றல் பார்த்டேன்னு சொன்னே? புது ட்ரஸ் எங்கே?”


“இது தான் டீச்சர் இருந்துச்சு..”


“சரி சாயங்காலம் ஸ்கூல் விட்டுப் போய்டாதே..நீயும்.நானும் ஒண்ணா போறோம்..புது ட்ரஸ் வாங்கறோம்.. நான் உன்னை வீட்டில்.விட்டுடறேன்..” 


மேரி சொல்ல தென்றல் ஒன்றும் சொல்லாமல் மேரியையேப் பார்த்தாள்.


“என்னடா அப்படி பார்க்கிறே?” 


மேரி கேட்க

அவள் எதிர்பாராத நொடியில் தென்றல் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

வகுப்பிற்கு ஓடிவிட்டாள்.

மேரி நெகிழ்ந்தாள்.


‘சாயங்காலம் தென்றலை கூப்பிட்டு ஷாப்பிங் போகணும். அவளுக்கு என்னென்ன வேணுமோ வாங்கிக்கட்டும்..’


தனக்குள் நினைத்தாள்.


மேரியின் அலைபேசி அடித்தது.

எடுத்தாள்.

இன்ஸ்பெக்டர் ரகுராம்.


“சொல்லுங்க சார்..”


“நேத்து போய் விசாரிச்சேன் நான். ஆளு மாட்டலை.. ஒருத்தன் என்கிட்டே அறை வாங்கிருக்கான். எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க..அவனுங்க ரொம்பப் பெரிய நெட்வர்க்” 


“சார்..அப்போ அவங்கள ஒண்ணும் பண்ண முடியாதா? அந்தப் பொண்ணு நிலைமை என்ன சார்?” 


ரகுராம் மௌனமானார்.


“ஸாரி..வி ஆர் ஹெல்ப்லெஸ்..” சொன்னவர் போனை வைத்துவிட மேரி பெருமூச்சு விட்டாள்.


அன்று மாலை. தென்றலைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

நாகர்கோவில் அழகிய மண்டபம் அடைந்தவள்


‘பட்டர்ஃப்ளைஸ் லேடீஸ் அண்ட் கிட்ஸ் வேர் ‘ போர்ட் மின்னியது. உள்ளே போனார்கள்.

தென்றல் கண்கள் விரியப் பார்த்தாள். 


“டீச்சர்” 


“சொல்லும்மா..”


“இங்கே விலை அதிகமா இருக்குமா?”


“அதெல்லாம் நீ கேட்கக்கூடாது. உனக்கு என்ன பிடிக்கும்னு பாரு..” 


சொன்ன மேரி 


“இது ஓகே வா?” 


என்று ஒரு ரெட் கலர் ஃப்ராக் எடுத்துக்காட்ட தென்றல் தலையசைத்தாள்.


அங்கே ஷாப்பிங் முடித்துவிட்டு அருகிலிருந்த பிஸ்மி ஹோட்டலில் நுழைந்தனர்.


“ஒரு சிக்கன் பிரியாணி ஒரு டீ”


“டீச்சர் சாப்பிலையா?”


“இன்னிக்கு நீ சாப்பிட்டா எனக்குப் போதும் தென்றல்..”


மேரி சொல்ல தென்றல் புன்னகைத்தாள்


அதே நேரம் வெளியே டாட்டா சுமோ நின்று கொண்டிருந்தது.


“அய்யா..” ஜோஸ் கூப்பிட்டசன்.


“சொல்லு ஜோஸ்..” மறுமுனையில் ஜார்ஜ்


“ஒரு சின்னப் பொண்ணு கூட இருக்கா.. என்ன பண்றது?” 


“அந்த டீச்சர் வேற எங்காவது கம்ப்ளெயின்ட் பண்ணா நமக்கு சிக்கல்..நீ தூக்கிடு..”


“அந்த சின்னப் பொண்ணு?” ஜோஸ் இழுத்தான்.


“இவளை தூக்கிறதுக்கு அவ சாட்சியாக வேண்டாம்.நீ ஒண்ணு பண்ணு”


“சொல்லுங்கய்யா..”


“ரெண்டு பேரையும் தூக்கிடு..”


9


மேரியும் தென்றலும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தனர்

அவர்கள் சாலையை கடக்க முயலும் தருணத்தில் ஜோஸ் அவர்களுக்கு எதிரே நின்றான்.


"என்னத் தெரியுதா?"


கோணலாய் சிரித்தான்.


அவனைப் பார்த்தவுடன் மேரி ஆத்திரம் கொண்டாள்.


"நீயா? நீ எங்க இங்க?"


"கம்ப்ளைன்ட் பண்ணியா போலீஸ் கிட்ட? ஐயா உன்ன பாக்கணும்னு சொன்னாரு போலாமா?"


அவன் பேச்சு ஒரு மாதிரியாக இருக்க மேரி அவனை தவிர்க்கப் பார்த்தாள்.


"மரியாதையா போயிடு நாங்க இங்கே இருக்கிறது இன்ஸ்பெக்டர் ரகுராம் சாருக்கு நல்லா தெரியும்"


ரகுராம் பெயரைக் கேட்ட ஜோஸ் ஆத்திரமானான்.

தென்றலைத் தூக்கி ஜீப்பில் உட்கார வைத்தான்.


"பாப்பா என்னமா தாத்தாவை பார்க்கப் போலாமா?"


ஜோஸ் நக்கலாக கேட்க மேரி ஜோஸைத் தாக்க முயன்றாள். விலகிக்கொண்ட ஜோஸ் ஒரு கர்சீப்பை அவள் முகரும் படி செய்ய மேரி மயங்கினாள். சுற்றுமுற்றும் பார்த்த ஜோஸ் சாலையில் யாருமில்லை என்று உணர்ந்து மேரியைத் தூக்கி ஜீப்பில் போட்டான்.


தென்றல் பயந்தபடியே கேட்டாள் 


"யார் நீங்க?"


"ஒண்ணும் இல்ல பாப்பா. தாத்தாவைப் போய் பார்த்துட்டு வீட்டுக்கு போலாம் .என்ன " ஜோஸ் சிரித்தபடியே சொன்னான்.


ஜார்ஜுக்கு போன் போட்டான்.


"ஐயா நான் தான்"


"சொல்லு ஜோஸ் என்னாச்சு ?"


"ரெண்டு பேரையும் தூக்கிட்டேன் ஐயா"


"வெரிகுட் இப்ப எங்க வந்துட்டு இருக்க?"


"இப்ப நாகர்கோவிலிலிருந்து கிளம்பிட்டேன் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்"


"சரி ஜோஸ் அவங்க ரெண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற குளத்துக்கு கொண்டு வந்திடு."


பேசி முடித்த ஜார்ஜ் தாமஸை க் கூப்பிட்டார்.


"அப்பா"


"அந்த ஸ்கூல் டீச்சர தூக்கிட்டாங்க"


"சரிப்பா" புன்னகைத்தான் தாமஸ்.


"பெட்ரோல் டின் எடுத்துக்கொண்டு போய் அங்க வெச்சுடு" ஜார்ஜ் சொல்ல தலையசைத்தான் தாமஸ்.


பீட்டர் டாடா சுமோவை விரட்டினான். அரைமணி நேரம் கடந்து இருக்க. மேரிக்கு மெதுவாக மயக்கம் தெளிந்தது .

சூழ்நிலையை உணர்ந்தவள் 


"ஹெல்ப் ஹெல்ப்" என்று கத்தினாள். அவளது சத்தம் யார் காதிலும் போய் சேரவில்லை.


ஜோஸ் நக்கலாக சிரித்தான். மேரியை பிடித்துக்கொண்டான்.


தென்றல் பயத்துடன் பார்த்தாள்.  


"என்ன பாப்பா? இன்னும் கொஞ்சம் நேரம்தான் அதுக்கப்புறம் மேலே போய்டலாம் ஓகேவா?" 


ஜோஸ் கேட்க தென்றல் ஒன்றும் புரியாமல் தலையசைத்தாள்.


டாட்டா சுமோ ஜார்ஜின் வீட்டை தாண்டி குளத்தின் அருகில் போய் நின்றது.


ஜோஸ் மேரியைப் பிடித்துக்கொள்ள பீட்டர் தென்றலின் கையை பிடித்துக்கொண்டான்.


"வாங்க வாங்க" ஜார்ஜ் கேலியாக வரவேற்றார்.

மேரி எல்லோரையும் பயமாய் பார்த்தாள்.

தப்பிக்க முடியுமா? எப்படியாவது தென்றலை காப்பாற்றிவிட வேண்டும்..

நினைத்த மேரி தென்றலிடம் சொன்னாள்.


"தென்றல் இங்க இருந்து ஓடு" மேரி கத்த அருகில் வந்த ஜோஸ் மேரியை ஓங்கி அறைந்தான். மேரி கீழே விழுந்தாள். ஆத்திரமான தென்றல் ஜோஸின் வயிற்றில் தன் தலையால் முட்டினாள்.


"டீச்சர எதுக்கு அடிக்கிறே? டீச்சர விடு"


தென்றல் கோபமாய் சொல்ல அடிபட்ட ஜோஸ் தன் வயிற்றை தடவிக் கொண்டு கோபமாய் பார்த்தான்.


ஜார்ஜ் தென்றலை அழைத்தார்.


"இங்க வாமா டீச்சர யாரும் அடிக்காம நான் பாத்துக்குறேன்"


ஜார்ஜ் சொல்ல தென்றல் அதை நம்பி அவரிடம் போனாள்.


கீழே விழுந்து கிடந்த மேரி கத்தினாள்.


" தென்றல் வேண்டாம் அங்கே போகாதே" 

அதற்குள் ஜார்ஜ் தென்றலை பிடித்து பிடித்து விட்டார்.


"கவலைப்படாதே நான் இருக்கேன்" சொன்ன ஜார்ஜ் தென்றலை அணைத்துக்கொள்ள 

தாமஸ் அவரின் உத்தரவிற்கு காத்திருந்தான். தாமசைப் பார்த்து ஜார்ஜ் கண்கள் காட்டினார். சற்றும் தாமதிக்காது தாமஸ் கத்தியை எடுத்தான். தென்றலை முதுகில் குத்தினான். ரத்தம் பீறிட்டது.


மேரி துடித்தாள்.


" ஐயோ தென்றல்" என்று அலறினாள்.


"ஜோஸ் அவள் ரொம்ப கத்தறா.. கத்த விடாதே" ஜார்ஜ் சொல்ல 

ஜோஸ் மேரியின் அருகில் சென்றான்.அவள் கழுத்தில் காலை வைத்து மிதித்தான். மேரி என்னதான் கத்தியும் குரல் எழும்பவில்லை.


தென்றல் ரத்தம் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஜார்ஜிடம் கேட்டாள்.


"தாத்தா டீச்சர விட்டுருங்க தாத்தா"


ஜார்ஜ் சிரிக்க தென்றல் மீண்டும் கத்தினாள்.


"தாத்தா டீச்சர விட்டுருங்க. இல்லன்னா நீங்க யாருமே உயிரோடு இருக்க முடியாது. உங்க குடும்பத்தில் எல்லாரையும் சாகடிப்பேன்"


தென்றல் ஆவேசமாய் கத்தியதைப் பார்த்த ஜார்ஜ் பீட்டர் தாமஸ் ஜோஸ் நான்கு பேரும் பயங்கரமாய் சிரித்தனர்.


தென்றல் ஜோஸிடம் வந்தாள்.


"காலை எடு" தென்றல் சொல்ல ஜோஸ் சிரித்தான்.


இன்னும் தன் காலை அழுத்தினான் மேரி மூச்சுக்குத் திணற யாரும் எதிர்பாராத ஒரு நொடியில் தென்றல் கீழே கிடந்த அரிவாளை எடுத்து வீசினாள். அது குறி தவறாமல் போய் ஜோஸின் தலையைத் துண்டித்தது.


ஜோஸ் தலை வேறாக முண்டம் வேறாக துடிக்க ஜார்ஜ் அதிர்ந்தார்.


" பீட்டர் அவங்க ரெண்டு பேரையும் உடனே முடி"


பீட்டர் கத்தியைக் கொண்டு வந்தான்.


"தென்றல் எப்படியாவது தப்பிச்சுப்போ " மேரி கத்தினாள்.


அதை சட்டை செய்யாத தென்றல் பீட்டரின் முன் நின்றாள்.

பீட்டரின் கத்தி தென்றல் நெஞ்சைத் துளைக்க அங்கேயே சரிந்தாள்.


"தென்றல்"

தீனமாய் அலறியபடி மேரி எழுந்திருக்க முயல

தாமஸ் அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொள்ள பீட்டர் கழுத்தை அறுத்தான். மேரியின் உடம்பு தூக்கித் தூக்கிப் போட உயிர்போகும் கடைசி நொடியில் இருந்த தென்றலின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது அவள் பார்வை மூவரின் மீதே நிலைத்திருந்தது.


"அப்பா இப்ப என்ன பண்றது?"


பீட்டர் கேட்க


"இவங்க ரெண்டு பேரையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி குளத்தில கரைச்சிடு"


"ஜோஸ் உடம்பைஎடுத்துட்டு போயி அவங்க வீட்ல கொடுக்கணும்"


"சரிப்பா" என்று சொன்ன பீட்டர் பெட்ரோல் டின்னை எடுத்துக்கொண்டு மேரியின் அருகில் போனான் .

*** 

அந்தம்மாள் எல்லாவற்றையும் விலாவரியாக சொல்லி முடிக்க ஜானும் சரத்தும் உறைந்து போயினர்.


"என் பையன் பண்ணது தப்பு அந்த தப்புக்கு தான் அவனுக்குத் தண்டனை கிடைச்சுடுச்சு எத்தனையோ முறை சொன்னேன் தப்பு பண்ணாத தப்பு பண்ணாதன்னு அவன் என் பேச்சை கேட்கல "


அந்த அம்மாள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.


"இப்போ அந்த மூணு பேரையும் தென்றல் கொன்னுடுச்சு. ஆனால் இவனுக்கும் அந்த கொலைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவனையும் கொல்வேன்னு சொல்றது எப்படிம்மா சரியா வரும்?"


"சம்மந்தம் இருக்கு சம்மந்தம் இல்லன்னு இல்லப்பா இவர் ஜார்ஜோட புள்ள. தென்றல் இவர கண்டிப்பா கொன்னுடுவா.." அந்த அம்மாள் சொல்ல

சரத் அதிர்ந்தான்.


"வேற வழியே இல்லையா இதுக்கு?"


"ஒரு வழி இருக்கு"


"என்னம்மா அது?"

சரத் ஆர்வமுடன் கேட்டான் .


"அந்த தென்றல் கிட்ட இருந்து தப்பிக்க இவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிப் போயிடணும்"


"அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்குமா"


"என்ன சிக்கல் ?" அந்த அம்மாள் கேட்டார்.


"தென்றல் இறங்கி இருக்கிறது இவருடைய பொண்ணு உடம்புல'


அந்த அம்மாள் பயங்கரமாய் அதிர்ந்தாள்


"பொறந்த நாள்ல ஒரு ஆத்மா உடம்பிலிருந்து பிரிக்கப்பட்டா அதுக்கு சக்தி பல மடங்கு ஜாஸ்தி" 


"என்ன சொல்றீங்கம்மா?"


"தென்றல் இவரை கொல்லணும். இல்லேன்னா இவர் பொண்ணு செத்துப் போய்டும்.."



10

ஜோஸின் அம்மாவிடமிருந்து சரத்தும் ஜானும் விடைபெற்றனர். 

ஜான் உச்சகட்ட டென்ஷனில் இருந்தான். அவனைப் பார்த்த சரத் அவன் கையைப் பிடித்துக் கொண்டான்.  


"கவலைப்படாத ஜான் ஏதாவது பண்ணுவோம்" 


சொன்னவனைப் பார்த்த ஜான் 


"இன்னைக்கு நைட்டுக்குள்ள என்ன பண்ண முடியும்?" 


கவலையோடு கேட்ட ஜானை ஆறுதல் படுத்தினான். 


"இப்போ மணி ஆறு வீட்டுக்கு ஒன்பது மணிக்குப் போனாப்போதும் இடையில் நமக்கு மூணு மணி நேரம் இருக்கு. அந்த மூணு மணி நேரத்துல நாம என்ன வேணாலும் செய்யலாம்." 


" எனக்கு நம்பிக்கை இல்ல சரத் நான் என் பொண்ண பலி கொடுக்க விரும்பல. அதுக்கு நான் செத்து போயிடறேன்" ஜான் சொல்ல சரத் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தான். 


"இப்போ எங்க போயிட்டு இருக்கோம்?" 


ஜான் சரத்தைக் கேட்டான். 


"எனக்கு தெரிஞ்ச ஒரு இடத்துக்கு போறோம்"  


சரத்தின் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தான். காரை ஓட்டிக் கொண்டே இடது கையால் செல்போனை எடுத்தான். 


"சொல்லுங்க பாதர் இருக்கீங்களா? இப்போ அங்க தான் வந்துட்டு இருக்கேன் ஓகே பாதர் நேர்ல வந்து பேசுறேன்"


" சரத் இப்ப என்ன எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்கே?" ஜான் கேட்க 


"அங்க போனதுக்கப்புறம் தெரிஞ்சிக்கலாம் வா" அமைதியாக தீர்மானமாக சரத் சொல்ல ஜான் மௌனமானான்.


அரைமணி நேர பயணத்தில் கார் அங்கிருந்த ஒரு சர்ச் வளாகத்திற்குள் நுழைந்தது. இருவரும் இறங்கினர்.


அங்கு வந்த ஒருவரிடம் சரத் கேட்டான்.


" பாதர் பெர்னாண்டஸ் எங்க இருக்காரு ?" 

"நேரா போய் பாருங்க படிக்கட்டுக்குப் பக்கத்தில் பர்ஸ்ட் ரூம்"  

சரத் நன்றி சொல்லி நகர்ந்தான்.

ஜானுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சரத்தை பின்தொடர்ந்தான். 


அறைக்கு வெளியிலிருந்து கதவைத் தட்டினான்.


"யெஸ் ப்ளீஸ்"


" பாதர் நான் சரத். போனில் பேசினேனே" 


" யெஸ் யெஸ் வாங்க உட்காருங்க "   


சரத்தும் ஜானும் அமர்ந்தனர். இருவரையும் கூர்மையாக பார்த்தார். ஃபாதர் பெர்னாண்டஸ் 


"சரத் நீங்க சொன்ன பிரண்ட் இவர் தானா?"


"ஆமா ஃபாதர்" சொன்ன சரத் நடந்த சம்பவங்களை மீண்டும் சுருக்கமாக ஒருமுறை அவரிடம் சொன்னான்.


ஃபாதர் பெர்னாண்டஸ் கண்கள் மூடி யோசித்தார்.

" நீங்க சொல்றத வச்சு பார்க்கும் போது அந்த சின்ன பொண்ணு ரொம்ப ஆவேசமா இருக்கா. அவளை உங்க பொண்ணோட உடம்பிலிருந்து பிரிக்கணும். அப்படிப் பிரிக்க முயற்சி பண்ணும் போது அந்தச் சின்ன பொண்ணு உங்க பொண்ணை கொல்ல வாய்ப்பிருக்கு"


ஃபாதர் பெர்னாண்டஸ் சொல்ல ஜான் அதிர்ந்தான்.

" ஃபாதர் " ஜான் அழைத்தான்.


" சொல்லுங்க"


" ஏதாச்சும் பண்ணி என் பொண்ண காப்பாத்துங்க" ஜான் கெஞ்சினான். கொஞ்ச நேரம் யோசித்த ஃபாதர் பெர்னாண்டஸ் 


"உங்க பிரதர் அனுப்பிச்ச வாட்ஸ்அப் வீடியோவ ஒரு நிமிஷம் காட்டுங்க"

தாமஸ் அனுப்பிய வீடியோவை எடுத்துக் கொடுத்தான் ஜான். ஃபாதர் அதை உன்னிப்பாக கவனித்தார். அவர் முகத்தில் புன்னகை பிறந்தது. அதைப் பார்த்த சரத் பாதரின் முகத்தையே பார்த்தான்

" அந்த சின்ன பொண்ணு கூட இருக்கிற இன்னொரு ஆத்மா மேரி டீச்சர் .சின்னப்பொண்ண உங்க பொண்ணு கிட்ட இருந்து பிரிச்சாதானே தொந்தரவு? அதுக்கு பதிலா தென்றல் கூட இருக்கிற மேரி டீச்சர தென்றல் கிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ணலாம். "


"அப்படி பண்ணினா என்ன பாதர்?"


"மேரியை பிரிச்சுட்டோம்னா அந்த சின்னப் பொண்ணு தனியா இருக்காது. உங்க பொண்ணை விட்டுட்டு போய்டும்"


ஃபாதர் சொன்னதைக் கேட்டு மலர்ந்தான் ஜான்.


"ஆனா மேரி மேல் ரொம்பப் பாசமா இருக்கு அந்த சின்னப்பொண்ணு. நாம மேரியைப் பிரிக்க முயற்சி பண்ணா தென்றலோட அதீத கோவத்திற்கு நாம ஆளாகவேண்டி வந்தாலும் வரலாம்.

அப்படி நடந்தா அதுதான் நம்ம எல்லோருக்கும் கடைசி நாள்..!"


சொன்னவரை பார்த்த சரத் சொன்னான்.


"நமக்கு நாள் கணக்கெல்லாம் இப்போ இல்ல பாதர். நேரக் கணக்கு மட்டும் தான்" 


சரத் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தார் பாதர்


" தெரியும் ஏற்கனவே நீங்க போன்ல சொல்லியிருக்கிங்க. விக்டர்னு ஒருத்தருக்காக காத்திட்டிருக்கேன். அவருக்கு மீடியத்தை கண்ட்ரோல் பண்றதில் அனுபவம் இருக்கு" 


"மீடியம்னா..?" ஜான் இழுக்க சரத் "தென்றலைத்தான் சொல்றார்" ஜான் காதில் கிசுகிசுத்தான்.


நேரம் கடந்துகொண்டே இருக்க ஜானுக்கு தவிப்பு கூடியது.


கொஞ்ச நேரத்தில் விக்டர் வந்தான்.


"ஸாரி பாதர் ..லேட்டாயிடுச்சு.." 


" அது பரவாயில்லை உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டியா?" பாதர் கேட்க விக்டர் தலையசைத்தான்.


மணி பார்த்த சரத்திற்கு பதட்டம் கூடியது.


"பாதர் போலாமா?"


" போலாம் சரத்" 


நால்வரும் அவசரமாக போய் காரில் ஏறிக்கொண்டனர். சரத் காரை எடுத்தான். கார் சாலையில் சீறியது. பாதர் காரில் ஜெபித்துக் கொண்டே வந்தார். விக்டர் ஓஜா போர்டு எடுத்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.


கார் வீட்டை அடையும்போது மணி ஒன்பது ஆனது. இறங்கிய ஜான் அவசரமாய் உள்ளே ஓடினான். அவனை சரத் பாதர் விக்டர் மூவரும் பின்தொடர்ந்தனர்.


விக்டோரியா பிரின்சி நிர்மலா மூவரும் பதட்டமாய் நின்று கொண்டிருக்க ஜான் அவர்களிடத்தில் விரைந்தான்.


" என்னாச்சு நிர்மலா? எதுக்கு எல்லாரும் வெளியே நிக்குறீங்க?" 


ஜான் குரலை கேட்ட நிர்மலா அழுதுகொண்டே ஓடி வந்தாள்.


" ஜான் நம்ம ஏஞ்சலைப் பாருங்க" 


நிர்மலா மேலே கைகாட்ட மேலே பார்த்த ஜான் அதிர்ந்தான். மேலே மாடியின் கைப்பிடிச் சுவரில் ஏஞ்சல் தலைகீழாய் தொங்கிக்கொண்டிருந்தாள்.


ஜானைப் பார்த்தவள் 


"அப்பா" என்று கத்தினாள்.


" ஏஞ்சல் என்னம்மா பண்ற? இறங்கும்மா கீழ" ஜான் பதட்டமாக..


"அப்பா என்னை விட மாட்டேன்கிறாங்க" 


"என்னம்மா சொல்றே?"


"நீங்க ஒண்ணு பண்ணினா என்னை விடறாங்களாம்பா.." ஏஞ்சல் சத்தம் கேட்டது.


"சொல்லும்மா..நான் என்ன பண்ணனும்? எதுனாலும் அப்பா உனக்காக பண்றேன்மா" ஜான் உரத்த குரலில் சொல்ல..


ஏஞ்சல் ஜானைப் பார்த்து கத்தினாள்.


"தூக்கு மாட்டிக்கப்பா."


11


"தூக்குப் போட்டுக்கோ"


ஏஞ்சல் சொல்ல ஜான் உள்ளே ஓடினான் 

சூழ்நிலையை புரிந்த பாதர் 

"சரத் ஜானை கன்ட்ரோல் பண்ணு"

சரத் பின்னால் ஓடினான். ஜானை பிடித்துக்கொண்டான் என்னை விடு சரத்

நான் சாகணும். சொன்ன ஜானை சரத் ஓங்கி அறைந்தான்.

ஜான் கீழே விழ 

"முட்டாள் மாதிரி நடக்காதே.." சரத் சொல்ல ஜான் கண்ணீர் விட்டான்.


"ஏஞ்சல் நிலைமையைப் பார்த்தே தானே?"


"நீ உயிரோடு இருக்கும் வரை ஏஞ்சலுக்கு ஒண்ணும் நடக்காது" சரத் சொல்ல.ஜான் கொஞ்சம் தெளிவடைந்தான். முகத்தைத் துடைத்துக்கொண்டான். 


"ஆமா ஜான் ..சரத் சொல்றது சரி.." 

அருகில் வந்த பாதர் சொல்ல 


"இப்போ என்ன பாதர் பண்ண?" ஜான் கேட்டான்.


"முதலில் நீங்களும் உங்க பொண்ணும் மட்டும் இங்கே இருந்தாப் போதும். மத்த எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்புங்க. வேற எங்கேயாவது தங்க வைங்க.."


"சரி பாதர்.."


"விக்டர் என்ன பண்ணனும்னு சொல்வான்.." பாதர் சொல்ல விக்டர் அருகில் வந்தான் .சொன்னான்.


" ஹாலில் ஒரு வட்டம் வரைவேன். அதுல நீங்க உட்காரணும். உங்களைப் பழி வாங்க ரெண்டு ஆத்மாக்களும் அங்க வரும். ஒண்ணு உங்க பொண்ணு. மேல் இருக்கும் தென்றல்.அதுக்கு உடம்பு இருக்கு. மற்றத்துக்கு உடம்பில்ல. 


.உடம்பு இருக்கிற ஆத்மா உங்க பக்கத்துல வருவது உங்களுக்கு தெரியும். உங்களால் பார்க்க முடியும்.


உடம்பு இல்லாத ஆத்மா உங்களுக்கு பக்கத்துல இருந்தாலும் நீங்க பார்க்க முடியாது ஆனா நாம பேசப்போவது அந்த உடம்பு இல்லாத ஆத்மா கூட தான் 


உங்களைக் கொல்ல உங்க பொண்ணு வட்டத்துக்குள் வரும். அது வட்டத்துக்குள்ள வரும்போது நீங்க வெளிய வந்துடுங்க. வட்டத்துக்கு வெளியே நீங்க போகும்போது உங்களப் பிடிக்கிறதுக்கு உங்க பொண்ணு முயற்சி பண்ணுவா. ஆனா உங்க பொண்ண வட்டத்தை விட்டு வெளியே வராமல் இருக்க எங்களால் ஆன எல்லா முயற்சியும் நாங்க செய்வோம்.


ஒருவேளை உங்க பொண்ணு வட்டத்தை விட்டு வெளியே வந்துச்சுன்னா எங்களால அதை கட்டுப்படுத்த முடியாது. அப்போ"

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் தொடர்ந்தான் விக்டர்..


"உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் "

விக்டர் சொல்ல ஜான் தலையசைத்தான்.


ரோசி விகடோரியா பிரின்சி நிர்மலா கிறிஸ்டி ஐவரையும் அங்கிருந்து. கிளம்ப வைத்தனர். 


"என்னால் முடியாது..நான் இங்கேயே இருக்கேன்..என் பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா நானும் செத்துடறேன்" நிர்மலா கதறினாள். ஜான் சமாதானப் படுத்தினான்.


"என்னை நம்பு நிர்மலா..நம்ம பொண்ணுக்கு ஒண்ணும் நடக்காது.." ஜான் அவளை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினான். கார் கிளம்பியது.


பாதர் பெர்னாண்டஸ் எல்லாரையும் பார்த்தார்.


"நேரம் ஆயிட்டே இருக்கு. சீக்கிரம்"


" ஓகே பாதர்" விக்டர் தன் பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான் .


பாதர் ஒரு குடுவையில் இருந்த நீரை எல்லா இடங்களிலும் தெளித்தார்.


விக்டர் ஒரு பெரிய வட்டம் ஒன்றை வரைந்தான். உள்ளே ஒரு மனித எலும்பைக் கொண்டு வந்து வைத்தான். அதன் மேல் கருப்பாய் ஒரு பொடியைக் கொண்டு வந்து பூசினான். வட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஓஜா போர்டை வைத்தான். கழுத்தில் இருந்த தன் சிலுவையைத் தொட்டு கும்பிட்டான். 

.

"பாதர் நான் ரெடி.." விக்டர் சொல்ல பாதர் மனதில் ஜெபித்தார். சரி என்பதாய் தலையாட்டினார்.


விக்டர் ஜானைப் பார்க்க ஜான் வட்டத்தின் நடுவில் வந்து அமர்ந்தான். சரத் எல்லாவற்றையும் பதட்டத்துடன் பார்த்திருந்தான்.


விக்டர் ஓஜா போர்டின் முன் அமர்ந்தான்.


"இங்கு இடைநிலையில் இருக்கும் ஆத்மா.இங்கே வரணும்.." வாய் மெதுவாய் ஏதோ ஜெபிக்க மெழுகுவர்த்தி ஏற்றினான். இடைவிடாது ஜெபித்தான். மெழுகுவர்த்திக்கு ஒன்றும் ஆகவில்லை. விக்டர் திகைப்பாய் பார்க்க பாதர் காத்திரு என்பதாய் சைகை காட்டினார். விக்டர் தன் ஜெபத்தை தொடர்ந்தான்.


ஏஞ்சல் மெதுவாய் உள்ளே வந்தாள். எல்லோரையும் பார்த்தாள். 


"அப்பா..' ஏஞ்சலின் குரல் கேட்ட ஜான் தன்னிலை மறந்தான். 


"எந்தக் காரணத்தை வெச்சும் ஏஞ்சல் உள்ள வராம நீங்க வட்டத்தை விட்டு வெளியே வராதீங்க..அப்படி எதுவும் நடந்தா எல்லோருக்கும் ஆபத்து" விக்டர் சொன்னதை மறந்தான். 


"என்னம்மா?" வெளியில் ஒரு காலை வைத்து மறு காலை எடுத்து வைக்க முயல எல்லோரும் பதறிப்போய் பார்க்க சரத் ஓடிவந்து அவனை வட்டத்தில் தள்ளினான். 


ஏஞ்சல் சரத்தைப் பார்த்த பார்வையில் கோபம் கொப்பளித்தது. 


"டீச்சர்.. இவன் நமக்குத் தடையா இருக்கான்.." ஏஞ்சலின் குரல் கிறீச்சிட சரத் உறைந்தான். 


அவன் முன் புகையாய் அந்த உருவம் நின்றது. பாதரின் குரல் நடுங்கியது. தன் ஜெபத்தைத் தொடர்ந்தார். 


ஏஞ்சல் எல்லோரையும் பார்த்தாள். புன்னகைத்தாள். 


"டீச்சர்..இங்க இருக்க வேணாம்..எங்கேயாவது போலாம்.." ஏஞ்சல் கத்தினாள். அதே நேரத்தில் ஏற்கனவே பேசி வைத்தபடி ஏஞ்சல் உள்ளே நுழைந்தவுடன் வெளிக்கதவை வெளிப்புறமாக தாழிட்டான் டேவிட். 


புகை சரத்தை சூழ்ந்த அதே நேரம் விக்டர் தன் முன் இருந்த பொம்மையை இறுக்கிப் பிடித்தான். 


ஏஞ்சலின் பார்வை ஜான் மேல் திரும்பியது. வட்டத்திற்குள் எதிர்பாராத நேரத்தில் பாய்ந்தாள். அவள் கைகள் ஜானின் குரல்வளையைப் பிடிக்க முயல ஜான் கடைசி நொடியில் விலகி வட்டத்திற்கு வெளியே விழுந்தான்.


"அப்பாஆஆஆ" ஏஞ்சலின் குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது.


அந்த நேரத்தில் விக்டரின் முன் இருந்த மெழுகுவர்த்தி அணைந்தது. ஓஜா போர்ட் அசைந்தது.விக்டர் எச்சரிக்கையானான். 


"யார் நீ?" 

மௌனம்..

"யார் நீ?"

மீண்டும் மௌனம்.

"சொல்லாம இங்க இருந்து போக முடியாது"

"மேரி.." தகரத்தை அறுப்பது போன்ற குரல் கேட்டது. 

"இங்க எதுக்கு வந்திருக்கே?"

"என் குழந்தைக்காக.."

"யார் உன் குழந்தை?"

"தென்றல்.."

"அவளைக் கூப்பிட்டுப் போ"

"இல்லை..அவ வரமாட்டா.."

"ஏன்?"

"அவனைக் கொல்லாம வரமாட்டா"

"அது அவளால் முடியுமா?"

விக்டர் கேட்க ஏஞ்சல் வட்டத்திலிருந்து எழுந்தாள். விக்டரை உக்கிரமாய் பார்த்தாள்.

"உன் குழந்தையைக் கூப்பிட்டுப் போ.." சொன்ன விக்டர் மண்டை ஓடு ஒன்றை எடுத்தான். "இல்லன்னா நீ மட்டும் கிளம்பு.." 


ஏஞ்சல் கத்தினாள். 

"டீச்சர்..வேணாம்..விட்டுட்டுப் போகாதீங்க..கூடவே இருங்க"


விக்டர் கேட்டான். "திரும்பப் பிறவி எடுக்க நீ செய்யும் பாவம் தடுக்கும்னு உனக்கு தெரியுமா? தெரியாதா?"

மௌனம்.

"மேரி.. இங்க இருந்து போ.." விக்டர் சிலுவை கையில்.வைத்தபடி சொல்ல உருவம் தயங்கியது. மெல்ல புகை கலைந்தாற்போல் எல்லோருக்கும் தோன்ற

ஏஞ்சல் அழுதாள். கத்தினாள்.


"டீச்சர்..நான் பாவம் ..விட்டுட்டுப் போகாதீங்க டீச்சர்..எனக்குன்னு நீங்க தான் இருக்கீங்க?" கதறிய ஏஞ்சலைப் பார்த்த பாதர் கலங்கினார். ஜானின் விழிகள் கண்ணீர் சிந்தின. சரத் நம்ப முடியாமல் பார்த்தான்.


புகை முழுவதும் கலைந்து. விட..ஏஞ்சல் சரிந்து விழுந்தாள். 

"ஏஞ்சல்.." ஜான் பதறியபடி அருகே செல்ல முயல கொஞ்சம் பொறு என்பதாய் சைகை காட்டினார் பாதர்.


எங்கும் நிசப்தம் மட்டும் இருக்க பாதர் மெதுவாய் ஏஞ்சலின் அருகில் வந்தார். 


விக்டரைப் பார்த்தார். ஓஜா போர்ட் அசைவில்லாமல் இருக்க பாதரைப் பார்த்து எல்லாம் முடிந்ததென்று கண்காட்டினான்.


பாதர் ஏஞ்சலைத் தூக்கினார். ஜான் அருகில் ஓடி வந்தான். 


"ஏஞ்சல்.." தவிப்பாய் கத்தினான். 

அவன் தோளைத் தட்டிய பாதர் புன்னகைத்தார்.


"ஆபத்து ஒண்ணும் இல்ல..குழந்தைகளுக்கு கொடுமை பண்ண அவங்க மனுஷங்க இல்ல.."


பாதர் சொல்ல ஜானும் சரத்தும் நெகிழ்ந்தனர்.


*** 

குழித்துறை ரயில்.நிலையம்.


ஐலண்ட் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க ஜான் நிர்மலா ஏஞ்சல் மூவரும் ஏறிக்கொண்டனர். ரயில் கிளம்பியது. 


நடந்தவற்றையெல்லாம் இன்னும் ஜானால் நம்ப முடியவில்லை. அருகில் அமர்ந்திருந்த ஏஞ்சலின் தலையைக் கோதினான். 

"அப்பா.."

"சொல்லும்மா.."

"எனக்கு சிக்கன் பிரியாணி வேணும்" வழக்கம்போல ஏஞ்சல் பேசுவதைக் கண்டு புன்னகைத்தான்.

"திருவனந்தபுரம் சென்ட்ரல்ல ட்ரெயின் நிக்கும்.. வாங்கித்தரேன்."

"சரிப்பா.."


ரயில் திருவனந்தபுரம் அடையும்போது பிற்பகல் மணி ஒன்று.


பிரியாணி வாங்கிக்கொண்டு வந்த ஜான் ஏஞ்சலின் அருகில் ஒரு பெண் இருப்பதைக் கண்டான். ஜானைப் பார்த்து அவள் எழ முயல 


"பரவாயில்லை உட்காருங்க.." சொன்னவனிடம்


"பொண்ணு ரொம்ப க்யூட்" சொன்னாள்.

ஜான் புன்னகைத்தான்.


"ஜான்..பெங்களூர் போறேன்" சொன்ன அவனிடம் அந்தப் பெண் ஏஞ்சலையும் ஜானையும் புன்னகையுடன் பார்த்தபடி சொன்னாள்.


"ஸ்கூல் டீச்சர் ...மேரி"


நிறைந்தது.


வாசித்தோருக்கும் நேசித்தோருக்கும் நன்றிகள்


கவுதம் கருணாநிதி










Rate this content
Log in

More tamil story from Gavudhama Karunanidhi S

Similar tamil story from Horror