வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீ என
வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீ என
அத்தியாயம் - 1
செங்கதிரோன் தோன்றி தன் செந்நிறக் கதிர்களை பூமியின் மீது மென்மையாகப் பரப்ப, சந்திரிகை மெல்ல மறைத்து செல்ல, பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டிருக்க அன்றைய நாள் இனிதே தொடங்கியது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரமும் பரபரப்பாக இயக்கத் தொடங்கியது.
ஆதன்யா... ஆதன்யா..என தன் தோழி அழைப்பதில் எழுந்து அமர்ந்த...
ஆதன்யாவின் விழிகளில் கண்ணீர் வழிய காத்திருப்பதைக் கண்ட மிதுலா".
"என்னடித் திரும்பவும் அதே கனவா..." மிதுலா.
என்றவுடன் மேல் கீழாகத் தலையசைந்தாள்.....
(என்ன கனவா இருக்கும் 🤔)
"அந்தக் கனவும் உன்ன விடுவதாக இல்லை உனக்கும் கனவுல வர்ற முகம் தெளிவாத் தெரிஞ்ச மாதிரியும் இல்லை என்று கூறிக் கொண்டு அறையினுள் நுழைந்தாள் அனல்விழி".
தோழிகள் இருவரும் சேர்ந்து தங்கள் உடைமைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதன்யாவைப் பார்த்து.
"என்னடி பார்த்துட்டு இருக்க ஊருக்கு கிளம்பளையா...." அனல்விழி.
"நான் எங்க கிளம்புறது...... அனல்.." ஆதன்யா.
அப்பாவி போல் கேட்டவளை இருவரும் கைகளைக் கட்டிக்கொண்டு முறைத்துப் பார்த்தனர்.
முறைத்தவர்களைப் பார்த்து.
"நான் நாளைக்குத்தான் காஞ்சிபுரம் போறன்" ஆதன்யா.
அவள் கூறிய மறு நிமிடம் தோழிகள்
இருவரும் சேர்ந்து ஆதன்யாவை புரட்டி எடுத்தனர்.
"இரவு நாங்க உனக்கு என்ன சொன்னா நீ இப்போ என்ன சொல்லுற" மிதுலா.
"நீ மட்டும் இப்போ எங்க கூட ஊருக்கு வர மாட்டேன்னு சொல்லு அப்பிடியே கையக் காலக் கட்டிட்டு தூக்கிட்டுப் போயிருவோம் பாத்துக்க........" அனல்விழி.
பொய்யாக மிரட்டியவர்களைப் பார்த்து எப்படி இவர்களுக்கு கூறி புரிய வைப்பது என்று விழித்தவள் இருவரையும் பார்த்து.
"படிப்பு முடிச்சதும் பிஸ்னஸ்ச நான் பார்த்துக்கிறன்னு மகேந்திரன் அங்கிள் கிட்ட சொல்லிட்டன். நான் காஞ்சிக்குப் போறன் நீங்க உங்க ஊருக்கு போங்க" ஆதன்யா.
கூறி விட்டு எழுத்தவளை இருவரும் சேர்ந்து மறித்து
"மகேந்திரன் அங்கிள் கிட்ட நான் சொல்லிட்டன் " அனல்விழி.
"என்னன்னு...." ஆதன்யா.
"நீ எங்க கூட ஊருக்கு வார திரும்பி காஞ்சிக்கு வந்ததுக்கு அப்புறமா நீ பிஸ்னஸ்ச பாந்துப்பனு...." அனல்விழி.
இருவரும் ஆதன்யா சொல்லும் எதையும் காதுகொடுத்துக் கேட்காமல் அவள் தங்களுடன் ஊருக்கு வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.
இவங்க கிட்ட பேசி பயனில்லை என்பதை அறிந்து சரி என்றவள்....
"இப்போ கஞ்சிக்குப் போய்ட்டு நாளைக்கு ஊருக்குப் போகலாம்"ஆதன்யா.
என்று கூறி விட்டு குளியல் அறையினுள் புகுந்து கொண்டாள்.
நீ எங்க கூட ஊருக்கு வந்தா போதும் என்று நினைத்தவர்கள் அவள் கூறியதற்கு ஒப்புக் கொண்டார்கள்.
கவியரசன், பூங்குழலி தம்பதியினரின் ஒரே மகள் ஆதன்யா பார்ப்பவர்கள் மனதில் விரைவில் இடம் பிடிக்கக் கூடிய அழகும், அறிவும், பண்பும், தைரியமும் கூடவே அளவில்லா குறும்புத்தனமும் உடையவள். ஆதன்யா ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் பூங்குழலி விபத்தில் இறந்துவிட (விபத்தா அல்லது ஏற்படுத்தப்பட்டதா).
கவியரசன் தன் மகள் ஆதன்யாவுடன் திருச்சியில் இருந்து காஞ்சிபுரந்துக்கு குடி பெயர்ந்து விட்டார். அத்துடன் அவர் நடத்தி வத்த தொழில்கள் அனைத்தையும் காஞ்சிபுரத்துக்கு மாற்றினார்.
ஆதன்யா தன் பள்ளிப் படிப்பைக் காஞ்சியில் முடித்தவள், கோயம்புத்தூரில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தற்போது எம்பிஏ இரண்டாம் ஆண்டு கடைசி செம் தேர்வையும் முடித்து விட்டு தன் தந்தை தொடங்கிய தொழில்களை பொறுப்பேற்க முடிவேடுத்தாள்.
தொழில்களை கவனித்துக் கொள்வதற்கான காரணம் சில மாதங்களுக்கு முன்பு தந்தையாகவும் தாயாகவும் இருந்த கவியரசன் விபத்தில் இறந்து விட்டார்........
தாய் தந்தையை இழந்தவளுக்கு ஆறுதலாக இருந்தது அவளது இரு தோழிகளான மிதுலாவும் அனல்விழி யும் தான்.
கவியரசன் இறந்தது முதல் தற்போது வரை தொழில்களை கவனித்துக் கொள்வது மகேந்திரன். கவியரசனின் உதவியாளராகவும், நண்பராகவும் ஆன மகேந்திரன் இவர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரிய வராகவு உள்ளவர். கவியரசன் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டார் என்று கூட சொல்லலாம்.
கவியரசன் இறந்தபின் ஆதன்யாவை தந்தை ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்பவரும் அவரே.
அனல்விழியும், மிதுலாவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்களின் குறும்புத்தனத்தால் தங்களது தோழியை பழைய ஆதன்யாவக மாற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.
ஆதன்யா சிரிப்பை மறந்து பல மாதங்கள் ஆகி இருந்தது.
ஆதன்யாவை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றாள் அவள் மனநிலை சற்று மாறும் என்ற நம்பிக்கையுடன் தோழிகள் இருவரும் முடிவெடுத்தனர்.
குளித்துவிட்டு வந்த ஆதன்யா இடை வரை நீண்டிருந்த கார்க் குழலைப் பின்னல் இட்டுப்
பிறை நெற்றியில் வட்டப் பொட்டு வைத்து நீள்வட்ட முகத்தில் எவ்விதமான ஒப்பனையும் இல்லாமல் பார்ப்பவர்களை எளிதில் கவரும் அழகுத் தேவதையாய் தயாராகி வந்தவள்.....
தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு மிதுலா மற்றும் அனல்விழியுடன் கோவையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி தன் பயணத்தை தொடங்கினாள்.......
சென்னை மாநகரம் எப்போதும் போல பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
சில அடுக்குமாடிகளைக் கொண்ட அலுவலகம்....... எப்போதும் இல்லாத அளவுக்கு இயங்கிக் கொண்டிருக்க....
அலுவலகத்தினுல் மகிழுந்து ஒன்று நுழைந்தது......
ஆறடி உயரத்தில் மகிழுந்தில் இருந்து இறங்கியவன் அலுவலகத்தினுள் நுழைந்தவுடன் அங்கு பணிபுரியும் ஒவ்வொரு வரும் அவனிற்கு காலை வணக்கம் கூற...... கூர்மையான விழிகளால் அவர்களைப் பார்த்து தேவைக்கேற்ப மட்டும் புன்னகைக்கும் அவனது இதழ்கள் சிறு புன்னகையை உதிர்த்து தலையசைக்க அவனின் கேசம் நெற்றியை வருடிச் சென்றது... தன்
அறையினுள் நுழைத்து.... பெரிய மேசையின் பின் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் கலைப் பிரியன்......
சற்று நேரத்தில் கலைப் பிரியன் அறையினுள் நுழைந்த கிஷோர் மீட்டிங்கு அனைவரும் தயாராக இருப்பதாக கூறிக் கலையை அழைக்க..... சில கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தவன் வருவதாக கூறி விட்டு...... மீட்டிங் நடக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.....
இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடித்த மீட்டிங் முடிவடைந்தவுடன் தன் அறைக்குச் சென்றவன் கிஷோரை அழைக்க.....
கிஷோர் வீட்டுக்கு சென்று விட்டதாக ஒரு பெண் வந்து கலையிடம் கூறிவிட்டுச் சென்றாள்.....
கிஷோர்க்கு போன் பண்ணி சிலப் பல அர்ச்சனைகளை வாரி வழங்கிய கலை... தன் வேலைகளைச் செய்து முடித்து விட்டு.....
எப்போதும் வீட்டிற்குச் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே அலுவலகத்தில் இருந்துப் புறப்பட்டக் கலைப் பிரியன்...... தன் மகிழுந்தை வீட்டை நோக்கிச் செலுத்தினான்....
அவனது மகிழுந்து வீட்டை வந்தடைந்ததும்...
வீட்டினுள் நுழைந்தவன் வெளியே செல்வதற்கு தயாராக இருந்த நண்பர்களைப் பார்த்து...
"நீங்க எங்கடா போகப் போறிங்க.....
இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து மதியமே இரண்டு பேரும் வீட்டுக்கு வந்திட்டிங்க...... என்று கலை இருவரையும் கோபமாகத் திட்ட......
அவர்களோ எதுவும் கேட்காதது போல் நின்று கொண்டிருந்தனர்.....
இருவரையும் திட்டித் தீர்த்தவன்......
"இப்போவாது சொல்லித் தொலைங்க டா.... எங்கதான் போகப் போறிங்க...." கலை.
"நீங்க எங்க அண்ணா எங்கள சொல்ல விட்டிங்க..... " கிஷோர்.
நண்பர்கள் இருவரும் கோரசாக நாங்க உங்க கூட ஊருக்கு வாறம்.
தன் நண்பர்கள் கூறுவதைக் கேட்டதும்.....
சரி என்று விட்டு மனதிற்குள் உங்க தலையெழுத்து ஊர்லவத்து என்ன பாடுபடப் போறிங்களோ இல்ல ஊர என்ன பாடு படுத்தப் போறிங்களோ தெரியல என்று நினைத்தவன்.....
தன் நண்பர்கள் அருகில் நின்றிருந்த தயாலனைக் கண்டவன்....
"டேய் நீ எப்போ டா... வந்த" கலை.
நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியுடன்...... கேட்டுக்கொண்டே அவனது தோள்களைக் கட்டிக் கொண்டான்.
"இப்போ தான் டா... வந்தன்" தயாளன்.
இருவரும் மாறி மாறி நலன் விசாரித்துக் கொண்டவர்கள்....
அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்...
" தயாளனைப் பார்த்து......... அகழ்வாராய்ச்சி எல்லாம் எப்படி டா... போகுது" கலை.
"ம்ம்... நல்லா போகுது டா.... இனிமேல் அகழ்வராய்ச்சி நம்ம ஊர்ல தான் டா........... " தயாளன்.
"சூப்பர் டா தயா அப்போ எங்க கூடவே ஊருக்கு வந்துரு......" கலை.
"அப்போ நீயும் ஊருக்கு போகப் போறியா டா.... கலை" தயாளன்.
"ஆமா டா... தாத்தா தான் ஊருக்கு வரச் சொல்லிருக்காரு....." கலை.
"ம்ம்...... அப்போ ஓக்கே டா...... நானும் உங்க கூடவே ஊருக்கு வாறன்....." தயாளன்.
இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போது மற்றவர்கள் இருவரும் ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் இருக்க...
தயாளனிடம் பேசிக் கொண்டிருந்தவனுக்குத் தன் தம்பியின் ஞாபகம் வரக் கிஷோரிடம் அகிலனைக் கேட்டான்....
யாரைக் கேட்டானோ அவனது இரு சக்கர வாகனம் கேட்டினுள் நுழைந்தது.
கண்களில் இருந்த கருப்பு நிறக் கண்ணாடியைக் கழட்டிய படி வீட்டிற்குள் நுழைந்தவனைக் கண்டதும்...
அகிலனிடம் மீட்டிங் முடிந்ததா என்று கேட்ட கலையின் கைகளில் பைல்களைக் கொடுத்துவிட்டு....... கலை அண்ணா நாளைக்கு அவங்க உங்கல மீட் பன்னனுமாம் என்று கூறியதும்.......
"எதுக்கு டா......." கலை.
"தெரியாது டா....... ௭துக்குனு ஒன்னும் சொல்லல்ல" அகிலன்.
"ம்ம்.. ஓக்கே எந்த ஊர்ல மீட்டிங்" கலை.
"காஞ்சிபுரம் அவங்க நேம்....... மயூரி" அகிலன்.
"பைல்ல ஜெயந்தன்னு இருக்கு........மயூரி யாரு டா........" கலை.
"ஜெயந்தன் தங்கச்சி தான் மயூரி அவங்க தான் மீட்டிங் வந்திருந்தாங்க ஜெயந்தன் வரல" அகிலன்.
"அப்போ நாளைக்கு மீட்டிங் முடிந்ததும் எல்லாரும் ஊருக்கு போகலாம்" கலை.
கலைப் பிரியன் இவ்வாறு கூறியதும் நண்பர்கள் முகம் கவலை கொண்டது... அவங்க தான் இப்பவே ஊருக்கு போக தயாரா இருந்தார்கள் அல்லவா.
கலை கூறியதையும் தன் ஆருயிர் நண்பர்களின் முகம் வாடியதையும் கண்டவன் தன் நண்பர்களும் ஊருக்கு வருவதை ஊகித்துக் கொண்டும்.....
மனதில் இருத்த மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டும்..... தன் நண்பர்களை சீண்டிப் பாக்க நினைத்தவன்...... கலையைப் பார்த்து.......
"அண்ணா எல்லாரும் ஊருக்கு வந்துட்டா ஆபீஸ்ச யார் பாத்துக்கிறது......." அகிலன்.
"அடேய் கிராதகா........... நாங்க ஊருக்கு வாறது உனக்கு போருக்களையா டா...." மனதிற்குள் கிஷோர்.
மற்றவன் அகிலனைக் கொலை வெறியுடன் முறைத்தான்.
"சுதாகர் ஆபீஸ்ச பாத்துப்பான் அகில்" கலை.
"அப்போ... ஓக்கே அண்ணா....சுதாகர் அண்ணாவே பாத்துக் கட்டும்... " அகிலன்.
"அப்பாடா நாம தப்பிச்சோம்..... பாவம் சுதாகர் அண்ணா மாட்டிட்டாரே......" கிஷோர்.
"ஆமா சுதாகர் அண்ணா எங்க காணம்" அகிலன்.
"அவன் மீட்டிங்காகப் பெங்களூர் போய்ருக்கான் டா....... அகில் நாளைக்கு வந்துருவான்" எனக் கூறி விட்டுத் தன் அறைக்குள் கலைப் பிரியன் சென்று விட்டான்.
கலைப் பிரியன் அறையினுள் சென்று விட்ட பின்னும் நண்பர்கள் அகிலனை முறைத்தபடி நின்றிருத்தனர்........
அவர்கள் முறைப்பதை அறிந்தவன் தன் பார்வையை வேறு பக்கம் மாற்றியவனின் கண்களில் தயாளன் பட்டுவிட.......
ஹாய் தயா அண்ணா எப்படி இருக்கிங்க.... எப்ப வந்திங்க.... என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்....
வாடா..... நல்லவனே இப்போ தான் நான் உன் கண்ணுக்குத் தெரிஞ்சனா........ என்று பொய்யாக கோபித்துக் கொண்டு அகிலன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் துவங்கினான்.....
"இப்போதான் வந்தன்...... நான் நல்லா இருக்கன் டா... நீ எப்படி டா இருக்க..... " தயாளன்.
"நான் நல்லா இருக்கன் அண்ணா.... " அகிலன்.
அகிலன் தன் நண்பர்களைக் கண்டு கொள்ளாமல் தயாளனுடன் பேசிக் கொண்டிருக்க மற்ற இருவரும் சற்று நேரம் அகிலனை முறைத்தபடி இருந்தவர்கள்.......
அகிலனின் தலையில் வலிக்கும் படி இருவரும் சேர்ந்து கொட்டி விட்டு....
சிலப் பல அடிகளைக் கொடுத்தவர்களிடம் சிரித்துக் கொண்டே அடியை வாங்கிக் கொண்டான்.....
பின் நால்வரும் சேர்ந்து சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது, மற்றவன் வீட்டில் ஊருக்கு செல்லவதைப் பற்றி கூறிவிட்டு வருவதாக சென்று விட்டான்....
( இவங்க இப்படியே பேசிட்டு இருக்கட்டும்..... அதுக்குள்ள நாம இவங்க யாருன்னு பார்க்கலாம் வாங்க)
மதிவாணன், மீனாட்சிக்கு இரு பிள்ளைகள் மூத்த மகன் கலைப் பிரியன் இரண்டாவதாக ஒரு மகள். கலைப் பிரியன் தனது படிப்பை முடித்த பின் தன் தாத்தா, தந்தை சித்தப்பா தொடங்கிய தொழில்களையும் தன் முயற்சியில் புதிய தொழிலையும் தொடங்கி நிர்வகித்து வருகின்றான்..... ஆரம்பத்தில் சற்றுத் தடுமாற்றம் அடைந்தவனுக்கு உதவியாக மதிவாணனின் தம்பியான வேளமுதன் இருந்தார்....
தற்போது வேளமுதன், இலக்கியா வின் ஒரே மகன் அகிலன். படித்து முடித்த பின் தன் அண்ணுக்கு உதவியாக சில நேரங்களில் உபத்திரமாகவும் இருக்கின்றான்.....
கூடவே செய்யும் சேட்டை க்கும் அளவில்லை
என்றும் கூறலாம்....
தயாளன், கலைப் பிரியன், அகிலன் மூவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.....
கலையும் தயாளனும் ஒன்றாகத் தங்கள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின் கலை இன்ஜினியரிங் படிப்பையும் தயாளன் தொல்லியல் துறை படிப்பையும் தேர்வு செய்து கல்லூரியில் படித்தனர்......
அகிலன் இவர்களை விட ஒரு வயது சிறியவன் என்பதால் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவுடன் தன் அண்ணன் படிக்கும் கல்லூரியிலேயே சேர்ந்து படித்தான்...
கலையும் எம்பிஏ முடித்த பின் தொழில்களை கவனிக்கத் தொடங்க.... அகிலனும் படித்து முடித்த பின் கலையுடன் இணைந்து கொண்டான்....
சுதாகர், கலைப் பிரியனுக்கு கல்லூரியில் பயிலும் போது கிடைத்த நண்பன்.... தற்போது கலையின் கம்பெனியில் வேலை செய்பவன்....
கொஞ்சம் பொறுப்பான பையன் என்றும் சொல்லலாம்....
கிஷோர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன், அகிலனின் நண்பன். தற்போது கலை அகிலனின் கம்பெனியில் வேலையும் செய்துகொண்டு இவர்களின் வீட்டிலேயே இருக்கின்றான்... கூடவே அகிலனுடன் சேர்ந்து செய்யும் சேட்டை க்கும் அளவில்லை......
கலை, அகில் சுதாகர், கிஷோர், மற்றும் ஒருவன் ( பெயர் சொல்லல்ல, இவர் யாருன்னே இன்னும் சொல்லல்ல) இவங்க எல்லாரும் தான் எப்பவும் ஒன்றாக இருப்பார்கள், இவர்கள் பெரும்பாலும் சென்னையிலே இருப்பதாலும் தயாளன் தொல்லியல் பணியின் காரணமாக பல ஊர்களுக்குச் செல்வதால் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து கொள்வது வழக்கம்....
தற்போது கலைப் பிரியன், அகிலனைத் தாத்தா ஊருக்கு அழைக்க...... தன் நண்பர்களும் ஊருக்கு வருவதாகக் கூறிப் பிடிவாதம் பிடிக்த்தனர்.... தயாளனும் வந்து விட்டதால்..... சுதாகரை சென்னையிலேயே விட்டு விட்டு மீதி அனைவரும் ஊருக்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள்........
அறைக்குள் சென்ற கலையும் குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறியவன் சிறிது நேரம் மடிக்கணினியை ஆராய்ந்து கொண்டிருந்தான்...
இன்று அனைவரும் ஊருக்கு செல்வதாக இருந்ததால் வீட்டு வேலை செய்யும் கனகம்மாவும் வேலைக்கு வரவில்லை என்பதால் கிஷோரும் அகிலனும் சென்று இரவு உணவை வாங்கி வந்தனர்....
வீட்டில் சொல்லி விட்டு வருவதாகச் சென்றவன் வந்துவிட அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டவர்கள் உறங்குவதற்குத் தங்கள் அறையைச் சரணடைந்தார்கள் .......
கோவையில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்ட மகிழுந்து ஆதன்யா வின் வீட்டை வந்தடைந்தது.
தோழிகள் மூவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு பயணக் களைப்பில் உறங்கி விட்டனர்......
கலையும் சாப்பிட்டு விட்டு அறைக்குள் நுழைந்தவன் சிறிது நேரம் தனது மடிக்கணினியை ஆராய்ந்தவன் உறக்கத்தை தழுவினான்.
கண் மட்டும் தெரியும் படி முகத்தைத் துணி கொண்டு மறைத்திருந்தவளின் கையில் இருந்த வாள் அவனது கழுத்தை நோக்கி வந்தது...........
தீர்ப்பாயா........
வணக்கம், நண்பர்களே...... இது என்னுடைய முதல் கதை..... என் கற்பனையில் உருவாக்கப்பட்டது......
உங்களுக்கு பிடித்திருந்தாலும் அல்லது பிடிக்கலைனாலும் உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க....
தவறு எதாவது இருந்தால் மன்னிச்சிருங்க, கண்டிப்பாக நான் திருத்திக் கொள்கின்றேன்.
🙏🙏🙏.......

