வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீ என
வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீ என
அத்தியாயம் - 3
காஞ்சிபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் ஆதன்யாவின் மகிழுந்து வேகமாக சென்று கொண்டிருந்தது...
மகிழுந்தை அனல்விழி ஓட்ட முன் இருக்கையில் மிதுலாவும், பின் இருக்கையில் ஆதன்யாவும் அமர்ந்திருந்தார்கள்....
மிதுலாவும் அனல்விழியும் ஒருவர் மாற்றி ஒருவர் மகிழுந்தை செலுத்த...
ஆதன்யா தான் ஐயோ.... பாவம்... போல் பின் இருக்கையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
"அனல், மிது....... உங்களுக்கு நல்லா கார் ஓட்டத் தெரியும் தான.... " ஆதன்யா.
"ஆதன்யா நீ ஒன்னும் பயப்படாத எங்க இரண்டு பேருக்கும் நல்லா கார் ஓட்டத் தெரியும்.... " அனல்விழி.
"ஆனா.... ஓரே... ஓரு..... தடவ.... " மிதுலா.
"என்ன.... டி.... ஆனானு...... இழுத்து ட்டு இருக்க... " ஆதன்யா.
"அது வந்து....... நானும் அனலும் சேர்ந்து அப்பாவோட ஜூப்ப ஓட்டினமா...... அப்படியே கொண்டு போய் ஒரு புளிய மரத்துல விட்டுட்டோம்...... " மிதுலா.
"ஜூப்ப மரத்துல விட்டுட்டு நாங்க சைட்டுல குதிச்சதால ஒரு சில அடியோட உயிர் தப்பினோம்...... அந்த ஜூப் தான் பாவம்..... கடைசில அத பேரிச்சம் பழத்துக்குத் தான் போட்டாங்க... " அனல்விழி.
"ஜூப் மட்டுமா பாவம்..... நீங்க எனக்கு பிரண்ட்ஸ்ஸா கிடைச்சது க்கு நானும் தான் பாவம்.... " ஆதன்யா "மனதிற்குள்"
மிதுலா ஆதன்யாவை பார்த்து.......
"அது நடந்து பைவ் இயர்ஸ் ஆகுது..... இப்போ எங்களுக்கு நல்லா கார் ஓட்டத் தெரியும்..... லைசென்ஸ் கூட எடுத்துட்டம்...... " மிதுலா.
"நீங்க லைசென்ஸ் எடுத்திருந்தாலும் பரவாயில்லை..... நானே கார் ஓட்டுறன்..... " ஆதன்யா.
"இல்ல.... ஆதன்யா நாங்களே ஓட்டுறம்...... " அனல்விழி.
"இதுக்கு மேலயும் நீங்க சொல்லுறத நான் கேட்கத் தயாராக இல்ல....... வழியாக மட்டும் சொல்லுங்க அது போதும்...... " ஆதன்யா.
"ம்ம்ம்.... ஓக்கே நீ இவ்வளவு கெஞ்சிக் கேட்குறதால...... நீயே ஓட்டு... எங்களுக்கும் காலைல இருந்து வேலை செய்து கைகால்லாம் ஒரே வலி... " மிதுலா.
ஆதன்யா மகிழுந்தை ஓட்டத்துவங்க ....
இருவரும் வழி சொல்லுறன்னு ஆளுக்கொரு வழியை சொல்ல...... பவம் கடைசியில் குழம்பிப் போனது ஆதன்யா தான்....
"அம்மாடிங்களா..... நீங்க வழியே சொல்ல வேண்டாம்..... " ஆதன்யா.
"வழி தெரியாமல் எப்படி... டி போறது..... " அனல்விழி.
"எனக்கு ஹெல்ப் பண்ணத் தான் அசிஸ்டன்ட் இருக்கே..... " ஆதன்யா.
"பாத்து டி...... முட்டு சந்துல எங்கேயாவது கொண்டுபோய் விட்டுறப் போவுது......" மிதுலா.
"நீங்க சொல்லுறத விட அது சரியாத்தான் சொல்லும்....... உங்க வேலையை பாருங்க டி......" ஆதன்யா.
ஆதன்யா சொல்லி முடித்த மறு நிமிடம் இருவரும் தங்கள் வேலையை தொடங்கியிருந்தனர் ...... எக்ஸ்ட்ரா வா குறட்டை சத்தம் வேறு.......
(இவங்க தூத்துக்குடி போகட்டும் நாம சென்னைக்குப் போகலாம் வாங்க......)
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையை வந்தடைந்த கலைப் பிரியன். வீட்டிற்குச் செல்ல.....
வீட்டில் அகிலன் மட்டும் தயாராகிக் கொண்டிருந்தான்.....
"அகி... தயாளன், கிஷோர், விக்னேஷ் எல்லாம் எங்கடா..... யாரையும் காணம்... " கலைப்பிரியன்.
"அண்ணா கிஷோரும் விக்கியும் ஆபீஸ் க்கு போயிருக்கானுங்க.... தயா அண்ணா யாரையோ பார்க்கப் போயிருக்காரு..... " அகிலன்.
"ம்ம்ம்... ஓக்கே அகி எல்லாரும் வந்ததும் கிளம்பளாம்... " கலைப் பிரியன்.
அகிலனிடம் கூறிவிட்டு தன் அறைக்குள் சென்ற கலை ரெஃப்ரஷ் ஆகி தயாராகி வருவதற்குள்.....
கிஷோரும், தயாளனும் வீட்டிற்கு வந்து ஊருக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.....
அறையாக விட்டு வெளியே வந்த கலைப்பிரியன்.... கிஷோர், தயாளனைப் பார்த்து விட்டு.
"கிஷோர்...... விக்கி எங்கடா அவன் ஊருக்கு வரளையா.... " கலைப் பிரியன்.
"கலை அண்ணா விக்கி மதியமே ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டான்.... யாரையோ பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு வருவதாக சொன்னான்.... என்னும் வீட்டுக்கு வரளையா..... " கிஷோர்.
"இல்ல கிஷோர்... அவன் இன்னும் வீட்டுக்கு வரளை... " அகிலன்.
"சரி.. நான் போன் பண்ணி பாக்கிறன்... " கிஷோர்.
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை....
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே...
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே...
ஒளி வீசும் மணிதீபம்
அது யாரோ நீ............
போன் ரிங்டோன் சத்தம் வந்த திசையைப் பார்க்க.....
அப்போதுதான் விக்கி வீட்டினுள் நுழைந்தான்....
"இந்த.... ரிங்டோன் எப்போத்துல இருந்து....... இது சரியில்லையோ........................ " கிஷோர் மைன்ட் வாய்ஸ்...
"சார்ர்ர்.... இவ்வளவு நேரம் எங்க போனிங்கனு கொஞ்சம் தெரிஞ்சிக்களாமா... " கிஷோர்.
கிஷோர் கேட்பது எதுவும் கேட்காதது போல்.... ஊருக்கு செல்வதற்கு தயாராக சென்றவனை வழி மறித்து கலையும் அதே கேள்வியைக் கேட்க...
ஏதேதோ கூறி சமாளித்து விட்டு சென்றான்.....
நால்வரும் அவன் சென்ற திசையைப் பார்த்து....
"இது சரிரிரிரி........ இல்லையேயேயே...... "
"விடுங்கடா...... எங்க போயிடப் போறான் ....... நம்ம் கூட தான இருப்பான்........ பார்த்துக்களாம்" கலைப்பிரியன்.
"சரி வாங்க .... எல்லாரும் ஊருக்கு கிளம்பளாம்....." அகிலன்.
மகிழுந்தை தயாளன் ஓட்ட முன் இருக்கையில் கலைப் பிரியனும் பின் இருக்கைகளில் மீதி மூவரும் அமர்ந்திருக்க
ஐவரும் கொற்கையை நோக்கிய தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.....
(இவங்க கொற்கைக்குப் போயிட்டே இருக்கட்டும் அதுக்குள்ள நாம விக்னேஷ் யாருன்னு பார்க்கலாம்).
விக்னேஷ் குமார் சென்னையை சேர்ந்தவன் படித்து முடித்துவிட்டு கலை ஆபீஸில் வேலை கிடைத்ததும் கிஷோர் கூட நட்பாகி அப்படியே அகில், கலை, தயாளன்னு எல்லார்க்கும் நண்பன் ஆகிட்டான்....
சில நேரங்களில் வீட்டில் அப்பாவுடன் சண்டை போட்டு விட்டு நண்பர்களுடன் தங்கி விடுவது வழக்கம்....... தற்போது நண்பர்களுடன் ஊருக்கு செல்கிறான்......
(கொஞ்ச நேரத்துக்கு முன்பு யாரைப் பார்க்க போனான்னு மட்டும் என்கிட்டக் கேட்டுறாதிங்க....... அது யாருன்னு என்கிட்டையே சொல்லுறான் இல்ல நான் எப்படி உங்க கிட்ட சொல்லுவன்.......)
இரவு வேளை என்பதால் தயாளன் சாலையில் மகிழுந்தை வேகமாக செலுத்தினான்......
தயாளனும் கலைப் பிரியனும் அமைதியாக வர......
பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த வர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினார்கள்.......
என்ன வேலைனு பாக்கிறிங்களா..... அதான் தூங்கிற வேலை.....
ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர்...... அதில் குறட்டை சத்தம் வேற......
*****
இரவு 10 மணியளவில் தூத்துக்குடியை அடைந்ததும்....
மிதுலா விடம் வீட்டிற்கு செல்வதற்கான வழியை ஆதன்யா கேட்க.....
மிதுலா அரை தூக்கத்தில் திக்கித் தினறி ஒரு வழியாக வழியை சொல்லி முடிக்க.....
சற்று நேரத்தில் ஆதன்யாவின் மகிழுந்து பிரம்மாண்டமாக காட்சியளித்த வீட்டின் முன் நின்றது......
மூவருக்காகவும் வீட்டில் உள்ளவர்கள் விழித்துக் கொண்டு காத்திருந்தனர்.....
அனல்விழி மீனாட்சியைக் கண்டவுடன் ஓடிச்சென்று அம்மா என்று கட்டிக் கொள்ள...
"போடி.... அந்தப் பக்கம்..... ஆதன்யா ஏன்மா அங்கேயே நிக்கிற.... உள்ள வாமா... " மீனாட்சி.
ஆதன்யாவின் தலையைத் தடவிய மீனாட்சி உள்ளே அழைத்துச் சென்றார்....
மிதுலா இலக்கியா விடம் சென்று.....
"அத்தை அம்மா அப்பா இன்னும் வரலையா...." மிதுலா.
"இல்ல மா... இரண்டு நாளைக்கு அப்புறம் வருவாங்க... " இலக்கியா.
"எல்லாரும் சாப்பிட்டிங்களா மா..... " மதிவாணன்.
மூவரும் இல்லை என்று தலையசைக்க..... மீனாட்சி அழைத்துச் சென்று உணவளித்தார்....
பின்னர் அனலும் மிதுலாவும் அவரவர் அவைகளுக்குச் செல்ல... ஆதன்யாவின் உடைமைகளும் அவளுக்கான அறையில் வைக்கப்பட்டது....
அறைக்குள் சென்று ஆதன்யா பயண சோர்வு போக குளித்துவிட்டு இரவு உடையை அணிந்தவள்.....
புதிய இடம் என்பதால் நித்திரை வராததால் அறையின் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து முழு மதியைப் பார்த்துக் கொண்டிருந்தவள்....
சற்று நேரத்தில் அப்படியே ஊஞ்சலில் நித்திரை கொண்டாள்....
நள்ளிரவில் தூத்துக்குடியை அடைந்த நண்பர்களின் மகிழுந்து சற்று நேரத்தில் கொற்கையில் உள்ள வீட்டின் முன் நின்றது.....
தயாளன் அவனது வீட்டிற்குச் செல்ல....
மற்ற நால்வரும் வீட்டிற்குள் நுழைய இலக்கியாவும் மீனாட்சியும் மட்டுமே விழித்துக் கொண்டிருந்தனர்...
வந்ததும் கலையும் அகிலனும் அவர்களது அறைகளுக்குச் செல்ல.... கிஷோர்க்கும் விக்னேஷ் க்கும் ஓர் அறை அளிக்கப்பட்டது....
தன் அறைக்குள் சென்று கலை குளித்து விட்டு சற்று நேரம் அறையின் பால்கனியில் நின்றவன் அருகில் உள்ள அறையின் பால்கனியின் ஊஞ்சலில் துயில் கொண்டிருந்த பெண்ணவளைக் கண்டவன்.....
அவளது முகத்தைக் காண முயன்று தோற்றே போனான்...
ஏனோ மனம் என்றும் இல்லாத அமைதியைக் கொண்டிருக்கத் தன் படுக்கையில் வந்து படுத்தவன் அப்படியே தூக்கத்தை தழுவினான்......
பாழடைந்த தோற்றத்துடன் வீற்றிருந்த கோவிலில் உள்ள ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தவர்........
திடீரென்று கண்களைத் திறந்து.......
" காத்யாயினி தேவி வந்துவிட்டாள்...."
தீர்ப்பாயா......

