வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீன
வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீன
கதிரவனின் ஒளிக்கதிர்களின் தாக்கத்தால் கண் விழித்த ஆதன்யா ஏதோ வித்தியாசமாக உணர்ந்தவள்.....
தன்னைச் சுற்றியுள்ளவற்றைப் பார்த்த பின்பு தான் கொற்கை வந்ததையும்... இரவு ஊஞ்சலில் தூங்கியதையும் உணரவே சில நிமிடங்கள் ஆனது....
சற்று நேரம் காலைவேளையின் ரம்மியமான கிராமத்து அழகை ரசித்து விட்டு குளிக்கச் சென்றுவிட......
வீட்டில் பெரியவர்கள் அனைவரும் அவரவர் வேலைகளைக் கவனிக்க சென்றிருந்தனர்...
கலைப்பிரியனும் குளித்து விட்டு கீழே வந்தவன்.....
மீனாட்சி காபி கொடுக்க ..... காபியை குடித்துக் கொண்டிருக்கும் போது....
கலைப்பிரியனின் பின்னால் வந்த அனல்விழி.... டேய் அண்ணா நீ எப்ப வந்த என்று ஆச்சரியத்துடன் கேட்ட....
அனல்விழியை சீண்டிப் பார்க்க நினைத்தவன்....
" நான் நைட்டே வந்துட்டன் குட்டிச் சாத்தான்... ஆமா நீ எப்போ வீட்டுக்கு வந்த... உன்ன காலேஜ்ல இருந்து துரத்தி விட்டுட்டாங்களா என்ன...." கலைப்பிரியன்.
கலை கேட்டதில் அனல்விழிக்கு கோபம் வர பதிலுக்கு .....
" உன்னோட பிஸ்னஸ் நடுத்தெருவுக்கு வந்துட்டுதா என்ன... அதான் நீ இங்க மாடுமேய்க்குறதுக்கு வந்திட்டியா... கவலப்படாத நான் தாத்தாட்ட சொல்லி எக்ஸ்ரா வா நாலு மாடு வாங்கி தாரேன்" அனல்விழி.
"நீ சொய்யப் போற வேலைய என்கிட்ட எதுக்கு சொல்லுற குட்டிச்சாத்தான்...." கலைப்பிரியன்.
இருவரின் சிறப்பான சண்டையை தாய்மார்கள் இருவரும் சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க....
டேய் அண்ணா என்று.... அனல்விழி அடுத்து பேசுவதற்குள்.... கலைப்பிரியனின் அலைபோசி அழைத்திட....இதுக்கு மேல என்னால உன்கிட்ட பேச முடியாது.....
எனக்கு முக்கியமான போன் வருது நான் போய் பேசப்போறன்.... என்றவன் அனல்விழியை கோபப்படுத்தி பார்க்க நினைத்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் கலைப்பிரியன் போனுடன் கார்டன் பக்கம் சென்றுவிட......
செல்லும் கலைப்பிரியனையே பார்த்து முறைத்தவள்.....
சிரித்துக் கொண்டிருந்த மீனாட்சியையும் இலக்கியாவையும் பார்த்து...
நான் இப்ப கோவமா போறன்... என்று கூறிவிட்டு .... பொய்க் கோபத்துடன் அகிலனைத் தேடி அவனது அறைக்குச் சென்றாள்...
(அங்க போய் அகிய என்ன பண்ணப் போறானு தெரியலையே.....)
அகிலனின் அறையினுள் சென்ற அனல்விழி தூங்கிக் கொண்டிருந்த அகிலனைப் பார்த்ததும்
"அண்ணா... டேய் அண்ணாணாணா எழுந்திரு" அனல்விழி.
"நான் என்னோட எனர்ஜி ய வேஸ்ட் பண்ணி கத்திட்டு இருக்கன்.... நீ கொஞ்சம் கூட அசையாம தூங்குற."
அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்தவள்..... அதை அப்படியே அகிலனின் முகத்தில் ஊற்றியதும்...
பதறியடித்துக் கொண்டு எழுந்தவன்... கண்களை மலங்கமலங்க விழிப்பதை பார்த்த அனல்விழி....
முழிக்குறதப்பாரு திருவிழாலக் காணம போன குழந்தமாதிரி என மனதில் நினைத்து.... அகிலைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்...
அப்போது தான் கையில் வாட்டர் பாட்டிலுடன் சிரித்துக் கொண்டு தன் எதிரே நிற்கும் பாசமான தங்கை அனல்விழியைக் கண்ட அகிலன்....
கொலைவேறியுடன் அனலைப்பார்த்து....
"ஏய்... குண்டு பூசணி எதுக்கு டி என் மேல தண்ணிய ஊத்தின..." அகிலன்.
அகி கத்தியதில்...
" இவன் கத்துறதப் பார்த்தா இன்னைக்கு என்ன கொல்லாம விடமாட்டான் போலையே.... சரி எதாவது சொல்லி சமாளிப்போம் நமக்கு இது புதுசா என்ன என நினைத்தவள்...."
"அண்ணா..... அம்மா தான் உன்ன வர சொன்னாங்க.... அதான் உன்ன எழுப்புறதுக்கு கொஞ்சம்மா...... தண்ணீ ஊத்தினன்... " அனல்விழி.
என்று இழுத்து சொன்னவளை நம்பாத பார்வை பார்த்தவன்...
" ஏது.... நீ ஊத்தினது கொஞ்ச தண்ணீ... அத நான் நம்பனும்...... ஒரு பாட்டில் தண்ணீய ஊத்திட்டு பொய்யா சொல்லுற..." அகிலன்.
கண்டுபுடச்சிட்டானே..... அடிக்கிறதுக்குள்ள ஓடிரு அனல்..... என நினைத்தவள்.....
அகிலன் எட்டி பிடிப்பதற்குள்... அவள் தப்பித்து அறையை விட்டு வெளியே ஓடிருந்தாள்...
அனல்விழி சென்ற பின் நனைந்து போய்.... தூக்கம் போச்சே.... என்று கன்னத்தில் கைவைத்து அமர்த்திருந்தவன் மனதில் ஏதோ தோன்ற இதழில் தோன்றிய சிறு புன்னகையுடன் அறையை விட்டு வொளியேறினான்.....
அகிலனிடம் இருந்து தப்பி ஓடிய அனல் சென்று நின்றது... ஆதன்யாவின் அறையில் தான்... உள்ளே சென்றவள் பார்த்தது ஊஞ்சலில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டும்.... பலத்த யோசனையில் இருந்த ஆதன்யாவைத் தான்...
அனல்விழி வந்ததைக் கூட ஆதன்யா உணராமல் இருக்க.... அனல் அருகே சென்று அமரவும் ஆதன்யா உணர்விற்குவந்தாள்....
அனல்விழியைக் கண்டவள் இதழ்களில் சிறு புன்னகையை சிந்த....
"ஏதோ... யோசனைல இருக்குற மாதிரி இருக்கு" அனல்விழி.
ஆமா டி என்னனு தெரில்ல இங்க வந்ததுல இருந்து மனதுக்கு நிம்மதியான புது உணர்வா இருக்கு...... என்ற ஆதன்யாவைப் பார்த்த அனல்விழி இதழ்கள் விரிந்த புன்னகையுடன்.....
அப்போ இதே நிம்மதியோட வந்து அம்மா கையால போட்ட காபி ய குடி இன்னும் புது ஃபில் கிடைக்கும்..... என்று கூறிய அனல்விழி ஆதன்யவை அழைத்துக் கொண்டு மீனாட்சி, இலக்கியாவிடம் சென்றாள்....
இதழில் சிறு புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறிய அகிலன்.... சென்று நின்றது தன் அறையில் இருந்து சற்று தள்ளி இருந்த அறையின் வாயிலில்....
அறைக் கதவினை சற்று திறந்து உள்ளே பார்க்க அப்பாவியான இரண்டு ஜீவன்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பதைத் தான்....
கண்களில் குறும்புடன் உள்ளே நுழைந்தவன் அடுத்து செய்ய வேண்டிய வேலையை தொடங்கினான்....
*****
ஆறடி உயரம் கொண்ட அந்த உருவம் சிறு பங்களாவைப் போல் இருந்த வீட்டினுள் யாரும் அறியாமல் நுழைந்தது.....
வீட்டினுள் நுழைந்த உருவம் ஒவ்வொரு அறையையும் மெதுவாக திறத்து பார்க்க....
அறைகள் அனைத்தும் யாருமில்லாமல் வெறுமையாகவே அந்த உருவத்தை வரவேற்றது....
வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட உருவம் ஹாலில் இருந்த சோபாவில் தலையை இரு கைகளிலும் தாங்கியவாறு அமர்ந்து விட்டது.....
சற்று நேரத்தில் எழுத்த உருவம்..... ஒரு அறையினுள் நுழைந்து தனக்குத் தேவையானதை தேடத் துவங்கியது.....
தேவையானதை தேடிக் கொண்டிருக்கும் போது.... ஹாலில் இருந்த போன் ஒலிக்க அதைசென்று எடுத்த உருவத்தின் இதழ்களில் சிறு புன்னகை வந்து மறைந்தது....
தீர்ப்பாயா....

