வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீ என
வஞ்சினம் தீர்ப்பாயா நீயே தீ என
அத்தியாயம் - 2
கண் மட்டும் தெரியும் படி முகத்தைத் துணி கொண்டு மறைத்திருந்தவளின் கையில் இருந்த வாள் அவனது கழுத்தை நோக்கி வந்தது......
தீடீர் எனக் கண்களைத் திறந்த கலைப்பிரியனுக்குக் குளிர்ந்த காற்று வீசும் அறையில் கூட வியர்த்துக் கொட்டியது .....
படுக்கையில் இருந்து எழுந்தவன் மனதில் கனவில் வத்தக் காட்சிகள் மீண்டும் தோன்றி மறைத்த படியே இருக்க......
கடிகாரத்தைப் பார்க்க அது மூன்று முப்பதைத் காட்டித் தன் வேலையைச் செய்வன செய்து கொண்டிருந்தது......
சற்று நேரம் அறையினுள் நடந்துவிட்டுச் சென்று படுத்தவன் கனவைப் பற்றிய சிந்தனையில் உழன்று கொண்டிருக்க.... அப்படியே உறங்கிப் போனான்....
அதிகாலையிலே எழுத்தவன் வழக்கம்போல் செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்து குளித்து விட்டு காஞ்சியை நோக்கி பயணமானான்.....
*****
சங்ககாலத்தில் முத்து விளைந்த நகரம், தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில்
தமிழனின் வரலாற்று எச்சங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சிறு கிராமம் கொற்கை.
சாலைகளின் இரு புறமும் காணப்படும் வயல் வெளிகளில், பாண்டிய மன்னனின் பெருமையை உணர்த்தும் கண்ணகிஅம்மன் கோயில்,பரந்து விரிந்த குளம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரம், எனப் பல விடயங்கள் கூறிக் கொண்டே போகலாம்.....
(இப்போ நாம கதைக்குள்ள போகலாம்)
கிராமத்தினுள் பல தனித் தனியான பல வீடுகள் காணப்பட்டாலும் பெரிய அளவில் பழைமை மாறாத வகையில்....... பல அறைகளுடன் நேர்த்தியாகக் கம்பீரத்துடன் காட்சியளித்த அந்த வீடு...
வீட்டினுள் இரு பெண்மணிகள் ஓடி ஓடி காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தனர்...
ஒருவர் வீட்டின் மூத்த மருமகள் மீனாட்சி, மற்றவர் வீட்டின் இளைய மருமகள் இலக்கியா... வீட்டு வேலைகளை செய்வதற்கு வேலையாட்கள் இருந்தாலும்......
சமையல் மற்றும் ஒரு சில வேலைகளையும் இவர்கள் இருவருமே சேர்ந்து செய்து விடுவார்கள்....
இவர்கள் இங்கு வேலைகளை செய்ய ....... வீட்டின் ஹாலில் மேகலாதன் அமர்ந்து தினசரி நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார்......
வெளியே சென்றிருந்த வேளமுதனும், மதிவாணனும் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தனர்.......
வந்தவர்களைக் கண்ட மேகலாதன் இருவரையும் அழைக்க ..... அருகில் சென்று அமர்ந்தனர்.......
"சொல்லுங்கப்பா.... " மதிவாணன்
"மதி...... பசங்க இன்னும் சென்னைல இருந்து கிளம்பளையா என்ன..... இன்னும் வீட்டுக்கு வரக் காணம்......" மேகலாதன்
" ஈவினிங் தான் சென்னைல இருந்து கிளம்புறதாக நேற்று இரவு கலை போன் பண்ணி சொன்னான்ப்பா......" மதிவாணன்.
மதிவாணன் கூறியதற்கு சரி என்று கூறியவர் மேலும் பொது விடயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க.......
இலக்கியா காஃபி கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார்.......
சற்று நேரம் பேசியவர்கள் உணவருந்தி விட்டு அவரவர்கள் தங்கள் வேலையை பார்க்கச் சென்று விட்டனர்.......
(என்ன எல்லாரும் அப்படியே போறிங்க உங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க...... சரி விடுங்க அத நானே சொல்லுறன்)
குடும்பத்தில் பெரியவர் மேகலாதன் வயது எழுபதைத் தாண்டியும் கிராமத்து உணவு முறை பழக்க வழக்கங்களால் நரைத்த முறுக்கு மீசையுடன் ஐம்பது - அறுபது வயது மதிக்கத்தக்க வரைப் போல் கம்பீரமாக இருப்பவர்.....
மேகலாதன் குடும்பம் கொற்கையைப் பூர்வீகமாகக் கொண்டு பல தலை முறைகளாக வாழ்ந்து வருகின்றனர்....
ஊரில் உள்ள மரியாதைக்குரிய முக்கிய குடும்பங்களில் ஒன்றாகவும் இருக்கிறார்கள்...
மேகலாதன், கோதையம்மாள்க்கு மதிவாணன்,வேளமுதன், தீபா என மூன்று பிள்ளைகள்......
மூவரையும் நன்கு படிக்க வைத்து வாழ்க்கையையும் நல்லமுறையில் அமைத்துக் கொடுத்தார் மேகலாதன்......
மேகலாதன் சிறுவயதில் நன்கு படித்திருந்ததால் விவசாயம் மற்றும் பிற தொழில்கள் தொடங்கி தன் முயற்சியில் நிர்வகித்து வந்தார்...... மதிவாணன், வேளமுதன் வளர்ந்த பின் தன் தொழில்கள் அனைத்தையும் இருவரிடமும் ஒப்படைத்துவிட்டு....
தன் மனைவியுடன் காசி, இராமேஸ்வரம் என்று கோவில்... கோவிலாக சுற்றத் தொடங்கி விட்டார்..... இப்படியே நாட்கள் அதன் போக்கில் ஓடப் பல ஆண்டுகள் கடந்தது.....
தற்போது மேகலாதனின் மனைவி கோதையம்மாள் உடல்நலக் குறைவால் இறந்து இரண்டு ஆண்டுகளும் ஆகிவிட்டது......
மேகலாதனின் முன்னோர்கள் காலம் காலமாக தங்கள் வாரிசுகளுக்கு நிறைவேறாமல் போன கடமையைப் பற்றிக் கூறி வந்தனர்......
மேகலாதனின் தந்தை மணிமாறன் கடமையையும் அதை நிறைவேற்றும் பொறுப்பையும் சோர்த்துக் கொடுத்து விட்டு.... அவர் இறைவனடி சேர்ந்து விட்டார்........
தற்போது கடமையை நிறை வேற்றுவதற்கே உயிர் வாழ்த்து கொண்டு இருக்கிறார்.....
( இவங்களை பற்றியும் இப்போதைக்கு அவ்வளவு தான்....... மீதியையும், அந்தக் கடமை என்னனு கதையின் போக்கில் பார்த்துக் கொள்ளலாம்)
காஞ்சியில் தோழிகள் மூவரும் பயண சோர்வின் காரணமாக உறங்கிக் கொண்டிருந்தனர்..
செஞ்சுடரோன் வெப்பம் தாளாமல் நித்திரையில் இருந்து எழுந்த ஆதன்யா....
குளித்து விட்டு அலுவலகம் செல்ல தயாரானவள்...... தன் தோழிகளை எழுப்பச் சென்றாள்...
மிதுலா, அனல்விழியை எழுப்ப...... அவர்களோ கும்பகர்ணனுக்குத் தங்கைச்சிங்க என்பதை நிருபித்துக் கொண்டிருந்தனர்...
ஆதன்யா இருவரையும் எழுப்ப முயன்று எவ்விதப் பயனும் இல்லாமல் போக......
கடைசியாக மிதுலா வின் மீது ஒரு அடி வைக்க.....
ஆஆஆஆஆ.... அம்மா...... என்று கத்தியபடியே
ஆதன்யாவைப் பார்த்து......
"எதுக்கு டி இப்போ விடியற்காலைல அடிச்ச...." மிதுலா.
"என்னது விடியற்காலையா..... நல்லா உன்னோட முட்டக்கண்ண துறந்து நேரத்த பாரு டி... மணி இப்போ ஒன்பது ஆகுது.... " ஆதன்யா.
"மணி ஒன்பது தான ஆகுது..... போடி எனக்கு தூக்கம் வருது....." மிதுலா.
கூறிவிட்டு மீண்டும் தூங்க போனவளைப் பிடித்து இழுத்தவள்....
"டி.... நான் சொல்லுறது மட்டும் கேட்டுட்டு போய் தூங்கு..... " ஆதன்யா.
"ம்ம்..... சொல்லும் டி....." மிதுலா.
தூங்கி வழிந்து கொண்டே கூறினாள்...
"மிது நான் மகேந்திரன் அங்கிள போய் பாத்துட்டு மதியம் தான் வருவன்.... நீங்க ரெடியா இருந்திங்கனா நான் வந்ததும் ஊருக்கு போகலாம்..." ஆதன்யா.
"ம்ம்ம்.... ஓகே நாங்க ரெடியா இருக்கும்...." மிதுலா.
ஆதன்யா சென்றுவிட அருகில் தூங்கிக் கொண்டிருந்த அனல்விழியை காலால் உதைத்து விட்டு மீண்டும் உறங்க செல்ல..
அனல் திருப்பி ஒரு உதை விட்டு விட்டு
"இப்போ தான டி அவ கிட்ட அடி வாங்கின.... என்ன எதுக்கு டி இப்போ அடிச்ச...." அனல்விழி.
"அடிப்பாவி அவ வந்ததுல இருந்து தூங்குற மாதிரி நடிச்சுட்டு இருந்தியா.... " மிதுலா.
ஆமா...... அவ உன்னை அடிக்கிறப்பவே நான் முழிச்சிட்டன்... என்று கூறி சிரித்தவளைப் பார்த்த மிது அனல்விழியை அடிக்கத் தொடங்கியிருந்தாள்...
இருவரும் சேர்ந்து மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டதில் அறையை அலங்கோலமாக மாற்றி இருந்தனர்....
தங்கள் சண்டையை முடித்தவர்கள் அறையைச் சுற்றி பார்க்க அது சர்வ நாசமாகி இருந்தது....
இருவரும் சேர்ந்து தலையில் கை வைத்தபடி சற்று நேரம் அமர்ந்து விட்டு... அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்து இருந்தனர்....
வீட்டில் இருந்து புறப்பட்ட ஆதன்யா அலுவலகத்தைச் சென்றடைத்தவுடன்.....
அலுவலகத்திற்குள் நுழைந்ததும் தன் தந்தையின் அறையைச் சென்றடைந்தாள்...
தந்தையின் அறைக்குச் சென்ற ஆதன்யா கவியரசனின் போட்டோ விற்கு மாலை போட்டுக் கொண்டிருந்த மகேத்திரனைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்று விட்டாள்.....
சற்று நேரத்தில் திரும்பிய மகேந்திரன்.....
"அட.... ஆதன்யா வாம்மா..... நல்லா இருக்கியா" மகேந்திரன்.
"ம்ம்ம்.... நல்லா இருக்கன் அங்கிள்...... நீங்க எப்படி இருக்கிங்க..... " ஆதன்யா.
"ஏதோ.... இருக்கன் மா.... உன் அப்பா போனதுக்கு அப்பறம் இந்த பிஸ்னஸ்ச உன்கிட்ட ஒப்படைக்கிற வரைக்கும்.... எனக்கு நிம்மதி இல்ல மா.... அதுக்கு அப்புறம் நான் செத்தாலும் பரவால்ல மா...." மகேந்திரன்.
"ஏன்.... அங்கிள் இந்தமாதிரி பேசிரிங்க.... எனக்கு இப்போ நீங்க மட்டும் தான இருக்கிங்க.... " ஆதன்யா.
"நானும் இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோட இருக்கப் போறன்..... உடல் நிலையும் வர வர சரியில்லாம போயிட்டு இருக்கு..... மா..... எப்படியோ உன் படிப்பும் முடிஞ்சுது.... இப்பவே எல்லாத்தையும் உன் கிட்ட ஒப்படைக்கலாம்னு இருக்கன் மா..... " மகேந்திரன்.
"இப்போவே வா..... அங்கிள் அனல்விழி உங்ககிட்ட எதுவும் சொல்லலையா..... " ஆதன்யா.
"இல்ல மா...... என் கிட்ட எதுவும் சொல்லல்ல..... ஆதன்யா எதாவது பிரச்சினை யா மா.... " மகேந்திரன்.
"இரண்டு பேரும் சேர்த்து என்கிட்ட போய் செல்லிட்டிங்கள்ள..... உங்களுக்கு இருக்கு வீட்டுக்கு வந்து பாத்துக்கிறன்..... " ஆதன்யா. மனதிற்குள் அனல் மிதுவை திட்டித் தீர்த்தாள்.....
"பிரச்சனைலாம் ஒன்னும் இல்ல அங்கிள்..... அனல்விழியும் மிதுலாவும் அவங்க கூட என்னையும் ஊருக்கு வார சொல்லி இருக்காங்க..... அத உங்க கிட்ட சொல்லிட்டன்னு என் கிட்ட சொன்னாங்க அங்கிள் அதான் கேட்டன்....." ஆதன்யா
மகேந்திரன் சிரித்து விட்டு...
"விளையாட்டுப் பிள்ளைங்க..... நீ அவங்க கூட வரணும்னு பொய் சொல்லிருப்பாங்க..... மா நீயும் அவங்க கூட ஊருக்கு போய்ட்டு வாமா.... வந்ததுக்கு அப்புறமா நீ பிஸ்னஸ்ச பாத்துக்கோ ..... அதுவரைக்கும் நனே பார்த்துக்கிறன்...... மா" மகேந்திரன்.
"ம்ம்ம்.... ஓக்கே அங்கிள்.... " ஆதன்யா.
மகேந்திரனிடம் சிறிது நேரம் பேசி விட்டும்.....
அலுவலகத்தை சுத்திப் பார்த்து விட்டும் தன் மகிழுந்தில் காஞ்சியின் வீதியில் சுற்றித் திரித்தாள் .......
கடைசியாக ஒரு ஆசிரமத்தின் வாயிலை ஆதன்யா வின் மகிழுந்து வந்தடைந்தது..........
ஆசிரமத்தினுள் நுழைந்தவள் அங்குள்ள மேலாளரிடம் சற்று நேரம் பேசியவள் எப்போதும் வழங்கும் நிதியை வழங்கிவிட்டு...
அவள் கையில் கொண்டு வந்த பொருட்களுடன்..... மரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நோக்கிச் சென்றாள்........
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்தடைந்த கலைப் பிரியன்...
மயூரியுடன் மீட்டிங்கை முடித்து விட்டு..... மீண்டும் சென்னையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தான்......
செல்லும் வழியில் ஆசிரமத்தைக் கண்டவன்.... எப்போதும் இணையத்தின் மூலமாக நிதி வழங்குவதால் இம்முறை அவனே நேரில் சென்று நிதியை வழங்க நினைத்தவன் ஆசிரமத்தின் வாயிலில் தனது மகிழுந்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்.....
ஆசிரமத்தில் உள்ளவர்கள் கலைக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் என்பதால்.... மேலாளரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு நிதியை வழங்கியவன் ....
ஆசிரமத்தை விட்டு வெளியே வரும்போது மரத்தின் கீழ் குழந்தைகள் கூட்டமாக நிற்பதைப் பார்த்தவன்...
குழந்தைகளை நோக்கிச் செல்ல..... கூட்டத்திற்குள் மத்தியில் அமர்ந்து இருந்த பெண்ணவளின் சிரிப் பொலியைக் கேட்டவனுக்கு.... இதே சிரிப்பொலியை வேறு எங்கோ கேட்டதைப் போல் உணர்த்த... கலை மேலும் குழந்தைகளை நெருங்கும் போது.... அவனது கைபேசி சினுங்கத் துவங்கியது....
அதை எடுத்தவன் திரையில் சுதாகரின் பெயரைப் பார்த்தவுடன் இதழ்களில் சிறு புன்னகையை உதிர்த்து விட்டு..... அதை உயிரப்பித்தவன்...
"ஹலோ..... கலை...." சுதாகர்.
"சொல்லு..... சுதா... பெங்களூர்ல மீட்டிங் முடிஞ்சுதா...." கலைப் பிரியன்.
"இன்னும் முடியல கலை.... ஈவினிங் தான் முடியும்... உனக்கு ஒரு பைல் மெயில் பண்ணிருக்கன் பார்த்துட்டு சொல்லு... டா" சுதாகர்.
"ம்ம்ம்... ஓக்கே டா... பார்த்துட்டு சொல்லுறன்..... " கலைப் பிரியன்.
சுதாகரிடம் பேசியபடியே தன் மகிழுந்தின் அருகில் வந்தவன்.... தன் மடிக்கணினியை எடுத்து சுதாகரின் மெயிலைப் பார்த்தவன்.....
சுதாகரனுக்கு போன் பண்ணி சில தகவல்களைக் கூறிவிட்டு......சென்னையை நோக்கிச் சென்றான்.....
ஆதன்யா குழந்தைகளுடன் பேசியதில் பல நாட்களுக்குப் பின் தன்னையும் மறந்து சிரித்தாள் ....
சற்று நேரத்தில் குழந்தைகளிடம் இருந்து விடை பெற்ற ஆதன்யா தன் வீட்டை நோக்கிச் சென்றாள்...
சென்னையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கலைப் பிரியனுக்கு..... ஆசிரமத்தில் கேட்ட சிரிப் பொலி மீண்டும் அவனது காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்க....
மீண்டும் ஆசிரமம் சென்று பார்க்கலாம் என்று நினைத்தவன்...... ஈவினிங் ஊருக்குச் செல்ல வேண்டியது நினைவுக்கு வர...... நேரமாவதை
உணர்ந்த கலைப் பிரியன்
பார்வையை வீதியில் பதித்து சென்னையை நோக்கி விரைந்தான்.......
ஆதன்யாவின் வீட்டில் தோழிகள் இருவரும் சேர்ந்து அறையைச் சுத்தம் செய்து முடித்தவர்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ள....
சமையலறைக்குள் நுழைந்த வர்கள் அங்கு உண்ணுவதற்கு எதுவும் இல்லாததால்.... தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முருகையாவை அழைத்து சமைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்கித்தரச் சொன்னவர்களிடம்......
சிறிது நேரத்தில் முருகையா பொருட்களை கொடுத்து விட்டு தன் தோட்டத்து வேலையைத் தொடர்ந்தார்....
மிதுலாவும், அனல்விழியும் சேர்ந்து தங்கள் சமையல் திறமையை காட்டத் துவங்கி இருந்தனர்...
"மிது உனக்கு சமைக்கத் தெரியுமா..... " அனல்விழி.
"இல்லடி எனக்கு சமைக்கத் தெரியாது..... உனக்கு.... " மிதுலா.
"அப்போ உனக்கும் சமைக்கத் தெரியாதா... எனக்கும் தெரியாதே... இப்போ என்ன பண்ணுறது...... " அனல்விழி.
( என்னாது....... இரண்டு பேருக்கும் சமைக்கத் தெரியாதா நான் வேற உங்களுக்கு பில்டப் கொடுத்து வெச்சிருக்கனே )
"இரண்டு பேருக்கும் சமைக்க வராது..... என்ன பண்ணலாம்..... ஐடியா... யூடியூப் பார்த்து சமைக்கலாம்... " மிதுலா.
" ம்ம் ம்ம்... சூப்பர் .... என்ன சமையல் பண்ணலாம்.... " அனல்விழி.
"வெஜ் பிரியாணி....." என இருவரும் சேர்ந்து சொல்ல..... கடைசியில் யூடியூப்பில் பார்த்து சமையல் செய்து முடித்தவர்கள்...... சமையலறையை விட்டு வெளியே வரவும்.... ஆதன்யா வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது....
வீட்டிற்குள் வந்த ஆதன்யா இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க.....
அனல்விழி மிதுலா வின் காதிற்குள்......
"என்னடி இவ இந்த மாதிரி முறைக்கிறா..... ஒருவேள நாம பொய் சொன்னத கண்டு பிடிச்சிட்டா போலையே..... " அனல்விழி.
"சரி விடு.... டி இதுக்கும் எதாவது சொல்லி சமாளிப் போம்.... நமக்கு என்ன இது புதுசா என்ன ..... " மிதுலா.
"ம்ம்ம்... சமாளிப் போம்..... சமாளிப் போம்.... " அனல்விழி.
இருவரும் இங்கு ரகசியம் பேச..... அங்கு ஆதன்யா இருவரையும் வெட்டுறதா இல்ல கூத்துறதா என முறைத்துக் கொண்டிருந்தாள்....
"ஏ... ஆதன்யா ஏன் டி இப்படி முறைக்கிறா... " மிதுலா.
"ஏன்... நான் எதுக்கு முறைக்கிறன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன.... " ஆதன்யா.
"ஈஈஈஈஈ..... நீ எங்க கூட ஊருக்கு வரணும்னு தான் பொய் சொல்லி டோம்.... " அனல்விழி.
மிதுலா முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு.....
"ஆதன்யா.... நீ எங்க கூட ஊருக்கு வருவதான.... " மிதுலா.
"ம்ம்ம்..... வாறன் முகத்த இப்படி அப்பாவி மாதிரி வச்சே என்னக் கவுத்துறுங்க டி.... " ஆதன்யா.
"ஈஈஈஈஈ....... " மிதுலா.
"சரி... சரி... வாங்க சாப்பிடலாம்" அனல்விழி.
மூவரும் சென்று சாப்பிட அமர மிதுலாவே பரிமாறினாள்...
மூவரும் ஒரு சேர சாப்பாட்டை எடுத்து வாயில் வைத்தவர்கள் கண்களில் இருந்து தாரை தாரை தாரையாக வரத் துவங்கி இருந்தது....
மிது, அனல் இரண்டு பேரும் சேர்த்து வஞ்சனை இல்லாம காரம், உப்பு எல்லாம் அள்ளிப் போட்டிருக்காளுக....
யூடியூப் பார்த்துப் பண்ணினது தப்பாப் போச்சே...... என மனதுக்குள் நினைத்த அனல்விழி ஆதன்யாவைப் பார்த்து.....
"சாரிரிரிரிரி..... டி......... நாங்க இரண்டு பேரும் இன்னைக்கு தான் முதல் முறைய சமையல் செய்தோமா.... அது தான் உப்புக், காரம் கொஞ்சம் அதிகமா போட்டுட்டோம்..... ஈஈஈஈஈ" அனல்விழி.
"அடிப்பாவிகளா... கொஞ்சநஞ்ச உப்புக் காரமா... போட்டுருக்கிங்க..... கொலைகாரப் பாவிங்களா கொஞ்சத்துக்குள்ள என்னக் கொல்லப் பாத்திட்டிங்களே டி...." ஆதன்யா.
ஆதன்யா கூறியதில் மிது, அனல் சிரித்து விட.... ஆதன்யா தலையில் அடித்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவள்...... திகைத்துப் போய் நின்றாள்...
மிது, அனல் இருவரும் சேர்ந்து சமையலறையை அலங்கோலமாக்கி இருந்தனர்....
(இரண்டு பேரும் சேர்ந்து அறையை நாசம் பண்ணது பத்தாதுனு சமையலறை யையும் நாசம் பண்ணி வெச்சிருக்கிங்களே......)
ஆதன்யா இருவரையும் முறைக்க .....
மறு நிமிடம் இருவரும் சேர்ந்து சமையல் அறையை சுத்தம் செய்து முடித்தனர்......
சமையலறையை சுத்தம் செய்து கொண்டே.....
"அனல்... இன்னைக்கு நம்ம இரண்டு பேருல யாருக்காவது சந்திராஷ்டம மா என்ன..... காலைல இருந்து எல்லாமே ஏடாகூடமாவே நடக்குது...... " மிதுலா.
"தெரியல்ல...... பட் நம்ம இரண்டு பேருல்ல ஒருத்தருக்கு இல்ல இரண்டு பேருக்கும் சந்திராஷ்டம மா இருக்கும்.... " அனல்விழி.
"அட... ஆமா... இரண்டு பேரும் ஒரே ராசி தான .... மறந்துட்டன்..... " மிதுலா.
"கடவுளே இன்னும் என்னல்லாம் நடக்கப் போகுதுனு தெரிலையே...... " அனல்விழி.
இருவரும் ஒரு வழியாக பேசிக்கொண்டே வேலையை முடிக்க....
ஆதன்யாவும் எளிதாக செய்யக்கூடிய உணவினை செய்து முடித்திருந்தாள்.....
மூவரும் உணவருந்திய பின் மிதுலா, அனல்விழி யின் சொந்த ஊரை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.....
இப்பயணத்தால் தன் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றத்தைப் பேதையவள் அறிந்திடவில்லை.........
தீர்ப்பாயா...........

