CA Manimaran Kathiresan

Drama

3.8  

CA Manimaran Kathiresan

Drama

விடுதி வாழ்க்கை

விடுதி வாழ்க்கை

5 mins
655
பள்ளியில் அரையாண்டுத் தேர்வு முடிந்தது, பள்ளிக்கு ஒருமாத காலம் விடுமுறை என்பதால் பள்ளியில் இருக்கும் விடுதிக்கும் விடுமுறை விடப்பட்டது. பள்ளியில் விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படிக்கும் யாழினிக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. இந்த ஒருமாத காலத்தை எப்படி எப்படி கழிக்க வேண்டும் எனவும், என்ன உணவுகளை அம்மாவிடம் வாங்கி உண்ண வேண்டும் எனவும் கற்பனை வளர்த்துக் கொண்டாள். அதுமட்டுமல்ல அவளது நண்பர்களையும் மற்றும் உறவினர்களையும் பார்ப்போம் என்ற மகிழ்ச்சி வேறு. முக்கியமாக அவளது பாட்டியை பார்த்து பலவிதமான பலகாரங்களை செய்து கொடுக்கச் சொல்ல வேண்டுமென பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறாள்.


அவளது நண்பர்களை எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் செல்ல தன்னை அழைத்துப் போக தன் பெற்றோர் வருவார்களென வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறாள் இருப்பினும் ஏமாற்றமே. அவளது தந்தை அவளது மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நான் நம் சொந்தக்காரரை அனுப்புகிறேன் என்றும் அவருடன் நம் வீட்டிற்கு வருவாயெனவும் கூறிவிட்டு வைக்கிறார்.


அப்பா கூறியதுபோல் அவரது சொந்தக்காரர் கூட அல்ல அவர் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் அவர் அவரது கடை வேலையை முடித்துக்கொண்டு இரவு 10.30 மணிக்கு விடுதியை அடைகிறார். விடுதியில் அவளை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையம் சென்று அவளது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டனர். இவளோக்கோ பேருந்தில் ஏறியதிலிருந்து அவரிடம் கேள்விகளை தொடுக்க அவரோ சற்றும் பதில் சொல்ல முற்படாமல் வேலை அசதியில் உறக்கத்திற்கு சென்றுவிட்டார். இவளோ அவளுக்கான விடை கிடைக்காத நிலையில் என்ன செய்வதறியாது புலம்பி கொண்டும், அவளது வீட்டின் நினைவுகளை நினைந்து கொண்டும் பயணிக்களானாள்.


அவளது எண்ணமெல்லாம் அவளது வீட்டையும், அவளது பெற்றோரையும் சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கின்றது, அவளுக்கு இந்த பயணதூரம் பல வருட காலம்போல சென்று கொண்டிருந்தது. எப்பொழுது தனது வீடு வரும் என்ற எண்ணமே மேலோங்கியது, தனது வீடு வரவில்லையென நினைந்து கொண்டே பிறகு தன்னையும் அறியாமல் தூங்கினாள்.

அதிகாலை 3.45 மணிக்கு அவளையும் அறியாமல் எழுந்தாள், ஆம் அவளுக்குள் ஒரு வித சந்தோஷம் மற்றும் மனதில் மிகப்பெரிய கொண்டாட்டமே பூத்துக்குலுங்கியது. காரணம் அவளது ஊர் வருகின்ற சந்தோஷம் அவளுக்கு மனதளவில் தெரிந்திட அவளாக விழித்துக் கொண்டாள், அவள் அந்த பக்கத்து வீட்டுக் காரரையும் ஆவலோடு எழுப்புகிறாள்.


சரியாக காலையில் 4 மணியளவில் பேருந்து அவளது ஊருக்கு வந்து சேர்ந்தது. காலையில் பேருந்து நிலையத்தில் அவளுடைய கண்கள் தனது அப்பாவை தேடியது ஆனால் அவளது அப்பா இங்குகூட அவளை அழைத்துச் செல்ல வரவில்லை. என்னை கூப்பிட இங்குகூட வரவில்லையா என மனதிற்குள் புலம்பியபடி, வீட்டில் அவரிடம் பேசப் போவதில்லை என விளையாட்டு சபதம் எடுத்தவாறே அவருடன் அவளது வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள்.

சரியாக 4.10 க்கு அவள் அவளது வீட்டை அடைந்து விட்டாள். வீட்டின் வாசலில் ஆவலுடன் தன்னுடைய அப்பாவும், அம்மாவும் தன்னை அழைக்க காத்திருப்பார்கள் என்றென்னி வந்தவளுக்கு ஏமாற்றம், அவள் வீடோ பூட்டியிருந்தது.


ஆமாம் அவளது பெற்றோர் இருவரும் வேலை செய்துவிட்டு வந்த அசதியில் தூங்கிவிட்டார்கள். மேலும் அவளது அம்மா தன்மகள் வருகிறாள் என்பதற்காக இரண்டு நாள் விடுமுறை எடுப்பதால் தன்னுடைய வேலையை இரவு பகலாக முடித்துவிட்டு வரவேண்டிய நிலை. அவள் வீட்டிற்கு வந்து தனது பெற்றோரை அழைக்க, அவளது தாயார் ஓடிவந்து தன்மகளை அள்ளிக்கொண்டு கட்டியனைத்து முத்தமிடுகிறாள். இவளோ தன் தாயிடம் அவளை கூப்பிட யாரும் வரவில்லையென செல்லமாக கோபித்துக் கொள்கிறாள்.


அப்பாவிடம் இனமேல் நான் பேசப் போவதில்லை என்றும் பரவாயில்லை உன்னிடம் பேசிக் கொள்கிறேன் என்றும் வந்தவுடன் சட்டம் போட்டாள். வண்டியில் வந்த அசதியில் தனது அறைக்குச் சென்று தூங்க ஆரம்பித்தாள் அவளது தந்தையை கண்டும் காணாமல். அவளது தந்தையும் தன்னிடம் உள்ள கோபத்தை குறைத்துக் கொள்ளும் படியும் இனிமேல் இப்படி நடக்காது எனவும் ஒப்பதுல் தந்து மகளை சமாதானப் படுத்துகிறார். மகளும் சற்றும் யோசிக்காமல் தந்தையின் பாசத்தில் மூழ்கி கண்ணத்தில் முத்தமிட்டு படுக்கைக்கு செல்கிறாள்.


மறுநாள் காலையில் அவளது அம்மா அவளுக்கு பிடித்த பலகாரங்களை செய்ய ஆரம்பித்தாள் ஆமாம் அதற்காக தானே இரண்டுநாள் பணிக்கு விடுமுறை விடுத்திருந்தாள். வழக்கம்போல அவளது அப்பா அதிகாலையில் வேலைக்கு கிளம்பிவிட்டார்.

வழக்கம்போல காலையில் எட்டு மணிக்கு எழுந்து வந்தாள் யாழினி, எழுந்து வந்ததும் தன் அப்பா எங்கே எனவினவ சற்றே சிலபல பொய்களை சொல்லி சமாளித்தாள். அதனை காதில் வாங்கியும் வாங்கதவளுமாய் அம்மாவிடம் தேநீர் வேண்டுமென கேட்டு தன் விடுதிக் கதையை மீண்டும் நேரில் சொல்லிக் கொண்டிருந்தாள்.


விடுதியில் கிடைக்கும் தேநீர் பற்றியும், உணவுப் பண்டங்களைப் பற்றியும், அவளது நண்பர்களின் ஆர்பரிப்பு, அலப்பறையென அடுக்கிக் கொண்டே சென்றாள், இன்னும் அவளது அட்டவனை குறையவில்லை, ஆம் பல் துலக்க பலதூரம் போக வேண்டுமெனவும், குளிப்பதற்கோ கும்பலில் நின்று அசைய வேண்டுமெனவும், கழிவறைக்கு செல்வதில் கஷ்டகாலம் தான் என அவள் அனுபவித்த துன்பத்தையும், துயரத்தையும் அனுபுவக் கூற்றாக கூறிக் கொண்டிருந்தாள். அம்மாவும் அவளை சரி சரியென தேற்றியவாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.


தன் மகள் வந்திருக்கிறாள் என்பதற்காக அவள் அப்பா காலையிலேயே அவளுக்கு பிடித்தமான பண்டங்களையும் மற்றும் அவள் விரும்பும் மீனும் வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிட்டே வேலைக்குச் சென்றான். அவளுக்கோ அளவற்ற மகிழ்ச்சி இருப்பினும் அப்பாவிடம் சேர்ந்து சாப்பிட முடியாமல் போனதில் வருத்தமே.

யாழினி அம்மாவை அழைத்தாள், அவள் அம்மாவிடம் அம்மா இன்றிலிருந்து என்னுடைய துணிகளை நீயே துவைத்துத் தந்துவிடு, நான் ஒருமாத காலம் நிம்மதியாக இருப்பேன் என்றாள். அவள் மறுபடியும் துணியை துவைப்பதில் நடக்கும் கேலிகளையும், கஷ்டங்களையும் அவள் அம்மாவிற்கு எடுத்துக் கூறினாள்.


அதுமட்டுமா நீயெல்லாம் விடுதியில் இப்படிதான் கஷ்டப்பட்டியாயென எனக் கேட்க, அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. தான் விடுதியில் எங்கே தங்கினோம் என்று தன் மனதிற்குள் குற்ற உணர்ச்சியுடன் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதுமட்டுமா அவள் விடுதியில் என்னவெல்லாம் அழுந்தினாலோ அவற்றை எல்லாம் அம்மாவிடம் சொல்லி அவளுக்கென தனி இரக்கத்தை சம்பாதித்தால். இவள் பேசுவதைக் கண்டு அவள் அம்மாவும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறினாள்.


அம்மாவிடம் சொன்ன கதையை மீண்டும் பாட்டியிடமும் சொல்லி பாட்டியிடமும் நல்ல வேலை வாங்கினாள். இப்படியே காலைப் பொழுது கடக்க யாழினியின் அம்மா அவளது அப்பாவிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களை சீக்கிரமாக வரச்சொல்கிறாள் என்றாள். அவனும் சரியென சொல்லி வைக்கிறான். வந்தபிறகு இருவரும் தன் குழந்தையிடம் பேசி மகிழ்நது அவளுடன் வெளியே சென்று அவளுக்கு பிடித்த இடத்திற்கு சென்று வருகின்றனர். இவ்வாறு அந்நாள் நந்நாளாக முடிந்தது. இரவு உறங்கப் போகும்முன் யாழினியின் அம்மா அவள் விடுதியில் படும் சிரமத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். எப்போதும் சீக்கிரமே தூங்கப்போகும் யாழினி அன்று வழக்கத்துக்கு மாறாக தூங்காமல் தன் அறையில் படுத்துக்கிடந்தாள்.


வழக்கம் போல் அவள் பெற்றோர் இருவரும் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். ஆமாம் எல்லாம் அவளை விடுதியில் சேர்த்ததன் காரணமாகத்தான். அவளை விடுதியில் சேர்த்ததில் துளியும் அவள் அம்மாவிற்கு விருப்பமில்லை, அவளது அப்பாவிற்கும் இருப்பினும் யாழினியின் அம்மா வேலைக்கு செல்வதால் அவள் அப்பா இம்முடிவை எடுத்தார். இம்முடிவை அவளது அம்மா மாற்றச் சொல்லியும் கேட்டபாடில்லை. அவளது அப்பாவிற்கு அவளது அம்மா வேலைக்குப் போய்கொண்டே தன் மகளை பார்த்துக் கொள்ள முடியாதென முடிவெடுத்து விட்டார்.


அவளது அம்மாவோ என் வேலை இருப்பினும் என் மகளை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றக் கூற்றை பலமுறை சொல்லியும், கெஞ்சிக்கேட்டும், அவள் அப்பாவிற்கு புரிய வைக்க முடியவில்லை. மேலும் அவளது அம்மா நம் குழந்தைக்கு இன்னும் விவரம் பத்தாது எனவும் அதுவும் அந்த மூன்று நாட்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனவும், என்னென்ன செய்ய வேண்டும், எவை செய்யலாம் மற்றும் எவை செய்யக் கூடாது என்பது கூட அவளுக்கு தெரியாது. இந்த மாதிரியான நேரங்களில் அவள் என்னிடம் வளர்வதே சிறப்பு எனவும் மேலும் அவளுக்குத் தேவையானது எவையெனவும் என்னால் மட்டுமே அறிய முடியுமென கூறியும் எந்த பயனுமில்லை, அவளது அப்பா காதில் வாங்கவும் இல்லை அதற்கு மாறாக அவளுக்கு எல்லாம் என் மகள் கற்றுக் கொள்வாள் என்று கூறி விடுதியில் சேர்த்தார்.


இன்று மட்டுமல்ல இப்படி ஒவ்வொரு நாளும் தன் மகளை விடுதியல் சேர்த்ததை பற்றி அவளது தந்தையிடம் குறை கூறி சொல்லிக் கொண்டிருப்பாள். சிலநேரங்களில் இவர் இருவரிடையே வாக்குவாதங்களாகவும் இருக்கும், சிலசமயம் அவை சண்டையில் முடியும். வழக்கம்போல ஆரம்பித்த பேச்சு வார்த்தை இன்று அவள் வந்தது கூட நினைவில்லாமல் சண்டைக்கு வழிவகுத்தது. இப்படியே தொடர்ந்த சண்டையை காதில் வாங்கியும் வாங்காமலும் இருந்த யாழினிக்கு அவளால் பொருத்தக் கொள்ள முடியாதவளாய் இருவரின் முன் வந்து நின்றாள்.


அம்மா, அப்பா நான் விடுதியில் தங்கிய ஒவ்வொரு நாளும் எனக்கு மட்டும்தான் நரகம் என நினைத்தேன் ஆனால் நான் இல்லாமல் இருக்கும் உங்களுக்கும் இங்கே நரகம் சூழ்ந்துள்ளது என்பதை இன்றே அறிவேன். விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு என்னை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென கற்றுக் கொடுத்துள்ளது. ஆகவே நான் என்னுடைய வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை இந்த வீட்டில் தங்க அனுமதியளியுங்கள் என்று அவள் தந்தையிடம் மன்றாடினாள்.


அம்மாவிற்கும், உங்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகளை நான் கொடுக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது என்று கூறினாள். இதைக்கேட்ட அவளது அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காட வாயிலிருந்து பேச்சு வந்தும் வராதுமாய் அடுத்த வருடத்தில் இருந்து நீ நம்வீட்டிலேயே தங்கி படி என்றும் விடுதியில் தங்க வேண்டாம் என்றும் கூறிய அந்த நொடி அவளது அம்மாவிற்கு சொர்க்கத்திற்கே சென்றதாய் ஒரு உணர்வு. அவளது அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்கள் யாழினியின் துயரத்தைத் துடைத்தது.


அவள் அம்மா மீண்டும் அவளது அப்பாவிடம் விடுதியில் தங்குவது என்பது தவறில்லை இருப்பினும் குழந்தைகள் நம்மிடம் வளர்வதே பள்ளிக்காலம் மட்டும்தான் அக்காலத்திலும் நாம் விடுதிக்கு அனுப்பிவிட்டால் நம் குழந்தைகள் நம்மிடம் வளரும் பாக்கியத்தை இழுந்து விடுகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் இக்காலங்களில் மடடுமே பெற்றோரின் அரவனைப்பில் வளர்கிறார்கள், இந்த அரவனைப்பு மிக முக்கியம் இக்காலங்களில் விடுதியில் தங்குவது அவ்வளவு நல்லதில்லை.


அம்மாவின் அன்பிற்கு ஈடாக எதுவும் உண்டோ இவ்வுலகில். ஆகவே நம் குழந்தை நம்மிடம் வளரட்டும். வளர்ந்த பிறகு அவர்களே நம்மை விட்டு விலகுவார்கள். நாம் அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவோம் மாறாக விடுதியில் போட்டு அவர்களின் கனவையும் அடைத்து வைத்து அவர்களின் எண்ணத்தை சிதைக்க வேண்டாம்.


விடுதி குழந்தைகளுக்கு விருப்பமல்ல

விடுதி குழந்தைகளுக்கு சுகமல்ல

விடுதி குழந்தைகளுக்கு ஏற்றதல்ல

குழந்தைகள் வளரட்டும் பெற்றோரிடம், பெற்றோரின் அன்பும், அரவனைப்பும் குழந்தைகளுக்கு தேவை அவை விடுதியில் கிடைப்பதில்லை கிடைத்தாலும் பெற்றோருக்கு ஈடாவதில்லை.
Rate this content
Log in

Similar tamil story from Drama