கந்தசஷ்டி விரதம்
கந்தசஷ்டி விரதம்


கந்த சஷ்டி திருநாளில் முதல்நாள் இன்று
விரதம் ஏற்பவர்கள் இன்றிலிருந்து தொடங்க வேண்டும்
வெகுவாக பலர் ஆறுநாட்களும் சாப்பிடாமல் விரதமிருப்பது உண்மையே இருப்பினும் சிலர் ஆறுநாட்களும் சாப்பிடாமல் இருக்க முடியாத நிலையில் தாங்கள் கீழ்கண்டவாறு இருக்கலாம்
1. பழங்கள் அருந்தியோ அல்லது பழச்சாறுகள் மட்டும் அருந்தியோ இருக்கலாம்.
2. காலையில் மட்டும் உணவு உண்டு மற்ற இருவேளையும் உணவு உண்ணாமல் இருப்பது.
முடிந்தவரை இருந்து பாருங்கள்
உங்களால் முடியாத போது உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
இந்த ஆறுநாட்களும் விரதமிருப்பவர்கள் கவனத்திற்கு
1. முதல்நாள் ஒரு மிளகு என்ற எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு மிளகை அதிகரிக்க வேண்டும் அதாவது ஆறாவது நாளில் ஆறு மிளகு காலையில் சாப்பிடவேண்டும்.
2. என்னைப்போல் சிலர் தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டவர்கள அத்தேநீரில் பால் கலக்காம
ல் சாப்பிடுவது நல்லது மேலும் நண்மை பயக்கும்.
3. பொதுவாக விரதமிருக்கம் நாட்களில் பால், வெண்ணெய் மற்றும் நெய் போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அது நம் உடலின் கழிவை வெளியேற்ற உகந்ததல்ல.
4. ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டியை பாராயணம் செய்து முருகனுக்கு திணை மாவும் சக்கரையும் படைத்து அத்திணை மாவை தங்களுக்கும் சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். திணைமாவு இல்லையெனில் சக்கரையைக் கூட பயன்படுத்தலாம். இது உங்களுடைய சோர்வை நீக்கும்.
5. இந்நாட்களில் உணவை மட்டும் தவிர்க்காமல், தின்பண்டங்களையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். சிலர் பாதாம் , பிஸ்தா என ஏதெனும் எடுத்துக் கொண்டாலும் அதுவும் நீங்கள் உணவு எடுத்துக் கொண்டதற்கு சமமாக இருக்கும். ஆகவே இவற்றையும் தவிரத்து விடுங்கள்.
விடுவோம் விடுப்பு செரிமான சக்திக்கு
உதவிடுவோம் உயிர் சக்திக்கு உத்தரவிடுவோம் உயிர்ப்புக்கு.
வாழ்க வளமுடன்
மணிமாறன் கதிரேசன்