கந்தசஷ்டி திருநாள்
கந்தசஷ்டி திருநாள்


அனைவருக்கும் வணக்கம்
இம்மாதம் வருகின்ற 25ம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கின்றது.
இவ்விரதம் 25ம் தேதி தொடங்கி வருகின்ற 30ம் தேதி முடிவடைகிறது.
இந்த கந்தசஷ்டி விரதம் தொடரந்து ஆறுநாட்கள் இருக்கவேண்டும்.
அப்படியென்ன இவ்விரதத்தின் மகிமை.
இருக்கிறது. வாருங்கள் சொல்கிறேன்.
அகிலத்தில் ஆதிக்கம் செலுத்திய அசுரர்களை அடியோடு சாயத்து இவ்வுலகத்தை காத்தருளிய கந்தரை நினைவுகூறும் வகையில் இவ்விழா சிறப்பாக ஆறுநாட்கள் நடைபெறுகிறது.
சரி. அதுமட்டும்தானா இல்லை. பொதுவாக இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஆறு நாட்களும் உணவு ஏதும் உண்ணாமல் உண்ணாவிரதம் ஏற்று ஏழாம் நாளான கந்த சஷ்டி விரதம் முடிந்த அன்று தங்களின் உணவை உட்கொள்வார்கள்.
முதலில் நமக்கு வரும் ஐயம் என்னவென்றால் எப்படி இந்த ஆறு நாட்கள் உண்ணாவிரதம் ஏற்றுக் கொள்ளமுடியும்.
உண்மையில் முடியும். அது உங்களின் மனதின் திடத்தையும் நீங்கள் அகற்றிவைக்கும் ஐயத்தைப் பொறுத்தே இது சாத்தியமாகும்.
சரி. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் ஆனால் நாங்கள் ஏன் இவ்வாறு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் எங்களுக்கு தான் மூன்று வேலையும் உணவு கிடைக்கிறதே பிறகு என்ன என்று கூட நீங்கள் கேட்கலாம்.
முதலில் நாம் உண்ணாவிரதத்துக்கும் பட்டினுக்கும் வேறுபாடு அறியவேண்டும்.
ஆம். உணவு உண்பதற்கு உங்களிடம் முழுமையாக இருந்தபோதும் அவ்வுணவை உண்ணாமல் மட்டும் இல்லை அவ்வுணவை எண்ணாமல் இருப்பதும் உண்ணாவிரதம்.
பட்டினி என்றால் எவரொருவர் பசியால் வாடி அவருக்கான உணவு கிடைகாகாமல் சங்கடத்தில் இருப்பவரோ அல்லது தனக்கான உணவை எண்ணி தன்னுடைய பசியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பட்டினியால் வாடுபவரையும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று அறியலாகாது.
அப்படியா! உண்மையிலா? ஆமாம். எவரொருவர் உண்ணாவிரதத்தின் போது தனக்கான உணவை தன்மனதால் எண்ணி தான் பட்டினியால் இருக்கிறோம் என்று வருந்தினாலும் நீங்கள் இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதில் உபயோகம் இல்லை.
ஏன்! சொல்கிறேன் கேளுங்கள்!
நம் உடலில் அனைவருக்கும் இறைவன் படைப்பில் மூன்று சக்திகள் இருக்கின்றன.
1. செரிமான சக்தி
2. இயக்க சக்தி
3. உயிர் சக்தி
செரிமான சக்தியென்பது நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைத்து அதில் உள்ள நம் உடலுக்கு தேவையான சத்துகளை வடிகட்டி தேவையற்றதை மலக்குடலுக்கு செலுத்திவிடும்
இச்சக்தியின்றி நம் உடலில் எவ்வுணவையும் ஏற்கவல்லதல்ல.
ஆனால் நாம் இச்சக்தியைத் நாள் முழுவதும் உபயோகப் படும்படி நம்முடைய சாப்பாடு முறைகள் உள்ளன.
நம்முடைய மூன்று வேளை சாப்பாடு எதுவுமே பசித்து புசிக்க வில்லை மாறாக நேரம் கடந்ததும் புசிக்க ஆரம்பிக்கின்றோம். நம
்முடைய செரிமான சக்திக்கு முழுநேர வேலையை நாட்கள் முழுவதும் மாதம் முழுவதும் ஏன் வருடம்முழுவதும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இயக்க சக்தி இவை யாது. நாம் நடப்பது வேலை பார்ப்பது மற்றும் நம்முடைய ஒவ்வொரு இயக்கமும் அசைவுக்கும் இச்சக்தியே தயவு புரிகின்றது. இச்சக்தியானது நம்முடைய உடலில் தேங்கியிருக்கும் ஊட்டச் சத்துகளை பயன்படுத்தி இவ்வியக்கத்தை செம்மனே செய்கின்றது.
இந்த மூன்று சக்திகளில் இந்த மூன்றாவது சக்தியான உயிர் சக்தியே சிறப்பு ஆம் ஏனெனில் இச்சக்தியானது நம்முடைய உயிரைக் காக்கவல்லது.
இச்சக்தி எவ்வாறு நமக்குள் பிரவேசிக்கும் சரி உங்களுக்கு சிறு உதாரணத்துடன் சொன்னால் புரியும்
உங்களுக்கு காய்ச்சல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலில் உங்கள் உடல் சோர்வடையும் உங்களுக்கு பசியிண்மையை உருவாக்கும் காரணம் என்ன
உங்கள் உடல் உணவை ஏற்குமாயின் அவ்வுடலின் செரிமான சக்திக்கு அதிகப்படியான ஊட்டச்சத்துகளை செலவு செய்ய வேண்டும். அதுபோலவே நீங்கள் சோர்வடையாமல் இருப்பின் உங்களின் இயக்கச் சக்திக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்துகளை செலவு செய்யும். இவ்விரண்டையும் தவிர்த்து தன் உடலில் என்ன நேர்ந்தது என்று அறிந்து அவ்வழியே அதை கண்டறிந்து அதனிடமிருந்து போராடி தன் உடலை மீட்டு மீண்டும் புத்துயிர் பெற வைப்பதே இந்த உயிர்சக்தியின் வேலையாகும்.
அப்பேற்பட்ட இந்த உயிர்சக்தியை இன்றளவும் நாம் உபயோகப் படுத்துவதில்லை காரணம் நாம் ஏதேனும் உடலில் குறையென்றால் மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை வழங்கிவிடுகிறோம். நம் உடலின் உயிர் சக்தியை உபயோகிக்க தடையாய் இருந்துவிடுகிறோம். இருப்பினும் நம் உயிர் சக்தி போராட்ட நோக்கத்துடன் நமக்கான நற்பணி செய்து கொணடுதான் இருக்கின்றன.
இவ்வாறு இருக்க இந்த கந்த சஷ்டி விரதமான ஆறுநாட்கள் நம்முடைய உடலின் கழிவுகளை நீக்கி உயிர் சக்தியை பிறப்பித்து உடலுருப்புகளுக்கு புத்துயிர் வழங்க இது ஏதுவாக இருக்கும்.
அது எப்படி சாத்தியம்.
நம்முடைய உடலில் நாம் இந்த ஆறுநாட்களும் செரிமான சக்தியை உபயோகிக்கப் போவதில்லை மேலும் நம்முடைய உடல் நம்முடைய உயிர் சக்தியை பயண்படுத்தி இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் காற்றில், நிலத்தில் மற்றும் சூரியனிடமிருந்து தன் உடலுக்கான சக்தியை உருவாக்கி தன் உடலைப் பேணிக்காக்கும் இப்படிப்பட்ட வேலையை செய்ய வல்லது நம்முடைய உயிர் சக்தியாகும். ஆக இந்த ஆறுநாட்கள் விரதத்தில் நம்முடைய கழிவென்னும் அசுரனை அழிக்க உயிர் சக்தியெனும் வேல் ஏந்தி சூரசம்ஹாரத்தால் வதைப்பதே இந்நிகழ்வாகும்.
இந்நிகழ்வில் நீங்களும் உங்கள் உடலில் வாழும் அசுரனை அழிக்க வேல் ஏந்தி முருகனை அழைத்து சூரசம்ஹாரம் செய்து உடலுருப்புகளுக்கு புத்துயிரும் மற்றும் புத்துணர்ச்சியும் தர தவறாது கந்த சஷ்டி விரதத்தில் கலந்து கொள்க
வெற்றிவேல் வீரவேல்
தொகுத்து எழுதியவர்
மணிமாறன் கதிரேசன்
பகழிக்கூத்தர் அறக்கட்டளை
சென்னை