மழைநீர் உயிர்நீர்
மழைநீர் உயிர்நீர்


வணக்கம்
மணிமாறன் கதிரேசனின் அன்பு வணக்கங்கள்
இனிவரும் காலம் மழைக் காலம்
ஜுலை மாதத்தில் வந்த மழையில் நன்றாக மொட்டமாடியை கழுவியதோடு இல்லாமல் நம்முடைய பூமிக்கு அந்நீரை அனுப்பி வைப்பதில் மாபெரும் பங்குண்டு. பொதுவாக நாம் மழைநீரை பூமிக்கு அனுப்ப வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டதற்கு காரணம் இப்படிப்பட்ட நகரத்தில் குறைந்தது 3 அடியிலிருந்து 5 அடிவரை தாரிலோ அல்லது சிமெண்டிலோ சாலைகள் அமைத்து மழைநீர் வடிகால் அமைப்பை தடுத்து விடுகிறார்கள். இப்படியிருக்க இந்நீர் கழிவுநீர் கால்வாயில் கலந்து விடும் வழியைத்தவிர வேறு வழி தெரியாமல் போய்விடுகிறது.
ஆனால் கடந்த 15 வருடங்களாக நம்மிடையே பலருக்கும் இந்த வடிகால் முறையில் விழிப்புணர்வு ஏற்பட்டு நீரை பூமிக்கு செலுத்துவதில் ஐயமில்லை.
இங்கே நானும் மழைநீர் வடிகால் முறைப்படி நீரை பூமிக்குள் செலுத்தி வருகிறேன்.
சரி அது இருக்கட்டும் இந்த பதிவு எதற்காக, நான் கடந்த ஆறு வருடங்களாக 【2016】மழைநீரை அருந்தி வருகின்றேன். ஆமாம் எப்படி எனக்குள் இந்த ஒரு நோக்கம் தோன்றியது. என்னுடைய அம்மா அவர்களுடைய இளம் வயது வாழ்க்கை முறையை பற்றி சொல்லும் பொழுது மழைநீரை சேகரித்து அதனை அருந்தி வந்ததாக சொல்வார்கள். அவர்களிடம் சில அனுகுமுறைகளை கேட்டறிந்து நானும் சென்னையில் மழைநீர் அருந்துவதற்கு சில வழிமுறைகளை செய்து தொடர்ந்து அருந்தி வருகின்றேன்.
2016 ல் முதன் முதலாக 200 லிட்டர் அளவு மட்டும் சேகரித்து அருந்தும் பொழுது அந்நீர் முடிந்ததும் உடனடியாகவே வருண பகவான் மீண்டும் மழையைத் தந்து எனக்கு மழைநீர் அருந்தும் பாக்கியத்தை பெற்றவன் என்றே சொல்லலாம்.
இன்றும் மழைநீரை சிறதும் இடைவெளி இன்றி வருடம் முழுவதும் மழை பெய்தாலும் பொய்த்தாலும் மழைநீர் அருந்தும் பாக்கியம் பெற்றவன் என்ற பெருமிதத்தோடு இங்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மழை நீர் உயிர் நீர் என்று சொல்வார்கள்
உண்மைதான்
மழைநீரில் மட்டுமே உயிரோட்டமுள்ள நீராக இருக்கிறது ஆ
னால் நாம் நீரை RO என்னும் இயந்திரத்தில் செலுத்தி அதன் உயிரை பறித்து அதனுக்கு செயற்கையாக சில சுவைகளை சேர்த்து தரும் நீரை அருந்தி இன்றும் நாமும் உயிர் வாழ்ந்திருக்கிறோம்.
பொதுவாக காலையில் ஒரு செம்பு மழைநீர் அருந்தினேன் என்றால் எனக்கு அன்று மாலை வரை நீரின் அவசியம் இல்லாமல் போகும் அதுவரை தொண்டையும் நாக்கும் வரண்டு போய் பார்ததில்லை. ஆனால் இதுவே மழை நீரன்றி மற்ற நீரைக் குடிக்கும் பொழுது நாவும் வரண்டு ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை நீர் அருந்த வேண்டியக் கட்டாயம் இதுவே மினரல் நீராக இருக்கும் பச்சத்தில் நீரைக் குடிக்க குடிக்க வயிறு மட்டும் முட்டுமே தவிர நாவின் வரட்சி குறைந்த பாடு கிடையாது.
மழை நீரை ஒன்றுக்கு இரண்டு முறை வடிகட்டி அதனை வேறு ஒரு பாத்திரத்தில் பிடித்து குறைந்தது ஒரு மாதம் வைத்திருக்க அந்நீரின் அனைத்து தூசுகளும் அடியில் படிந்து நீர் வெள்ளிக் காசு போல அருந்த ஏதுவாகும்
மீண்டும் அந்நீரை மற்றொரு பாத்திரத்தில் மீண்டும் ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி அந்நீரை நீங்கள் தாராளமாக குடிக்கலாம்.
குறிப்பாக இந்நீரை சுடவைக்காமல் மேலும் அந்நீரை RO இயந்திரத்தில் செலுத்தாமல் நேரடியாக உட்கொள்ள நீரீன் உயிரோட்டம் சற்றும் குறையாமல் மிளிரும்.
மழைநீர் குறைந்தது இரண்டு வருடத்திற்கு உபயோகிக்கலாம்.
மறக்காமல் கவணிக்க வேண்டியவை:
சேகரித்த நீரை நீங்கள் வெயில் படாமல் அதாவது சூரிய ஒளி நேரடியாக விழாமல் பாதுகாக்க வேண்டும். வெயில் பட்டால் அந்நீரில் புழுக்கள் விரைவில் உருவாகி பிறகு அதனை குடிப்பதற்கு பயனற்று போகும்.
இவ்வாறு கடைப்பிடிக்க மழை நீர் குறைந்தது நீங்கள் ஒரு வருடம் உபயோகிக்க முடியும்.
ஒவ்வொரு மழைக் காலங்களிலும் நீங்கள் செய்ய வேண்டியது மழைநீரை சேகரியுங்கள் மழைநீராம் உயிர் நீரை அருந்துங்கள்
மழைக் காலம் நம் மழைநீர் காலம்
மழைநீர் சேமிப்போம் மகிழ்ச்சியாய் வாழ்வோம்
மணிமாறன் கதிரேசன்