Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

CA Manimaran Kathiresan

Drama


4.0  

CA Manimaran Kathiresan

Drama


விதியோடு விளையாடு

விதியோடு விளையாடு

3 mins 526 3 mins 526

மாலை ஒரு 4 மணியளவில் மலரின் அம்மா தன் வீட்டு வாசலின் படியில் நின்றுகொண்டு அவளுடைய பக்கத்து வீட்டு நண்பர்களிடம் அவர்களது குழந்தைகள் எடுத்த மதிப்பெண் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். ஆமாம் அன்றுதான் 11ம் வகுப்பு தேர்வானவர்களின் தேர்ச்சிப் பட்டியல் வெளியிடு. பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மலரின் வீட்டிற்குப் பின் இருக்கும் கிணற்றில் ஒரு பேரிரைச்சல் கேட்டது. கேட்ட மறுநொடியில் மலரின் அம்மா தன்நிலை மறந்து என்னவென்று புரியாது கிணற்றை நோக்கி புறப்படுகிறாள்.


அவளுக்குள் ஏற்பட்ட பயம் அளவில்லாதது. ஏனென்றால் மலர் 11ம் வகுப்பில் தேர்வாகவில்லை. மலரின் அம்மா அவளை அவமரியாதை படுத்திவிட்டாள். மலரை மற்றவர்களை உவமைப் படுத்தி அவளின் மனதை காயப்படுத்தி விட்டாள். அந்த சிறிய மனது எப்படி இவ்வளவு துயரத்தை தாங்குமென அந்த 30 நொடிகளில் பல்வேறு காரணங்களால் ஓடிக்கொண்டிருக்கின்றன. மலரின் அம்மாவை அவள் மனதாலே சமதானப்படுத்த முடியவில்லை.


அனைத்துக்கும் காரணகர்தத்தாவாக குற்ற உணர்ச்சியுடன் தோன்றி நின்றாள் அவள் மனதில். என்ன ஆனதோ ஏது ஆனதோ என்ற பயத்திலேயே கிணற்றை அடைந்தால் அங்கு மலர் இல்லை. கிணற்றின் உள்ளே நீரலைகள் வந்து வந்து மோதின அதனைப் பார்த்த மலரின் அம்மா தன்நிலை அறியாது கத்தி தீர்த்தாள் கிணற்றின் அருகே அழுது புரண்டு கூப்பாடிட்டாள்.


இதைக்கண்டு என்னாயிற்றோ ஏதாயிற்றோ என பக்கத்தில் குடியிருப்போர் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்தோரும் வீட்டிற்குள் விரைந்தனர். என்ன ஆயிற்று என கேட்க அவளும் நடந்ததை அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். மக்களும் அவள் மகளை காப்பாற்ற முற்படும் போது அவள் வீட்டின் கழிவறையிலிருந்து பதறிக்கொண்டு வெளியே வந்தாள் மலர் என்ன நடந்ததென்று அறியாமல்.


மலரோ அம்மாவை நோக்கி என்னாயிற்று அம்மா என்று கேட்க பக்கத்தில் உள்ளவர்களும் தெருவிலிருந்து வந்தவர்களும் மலரின் அம்மாவை சிலர் முறைத்தும் சிலர் நிம்மதியடைந்தும் இன்னும் சிலர் முனுமுனுத்தும் சென்றனர். இன்னும் மலருக்கு விளங்கவில்லை என்ன நடந்தது என்று. மலரின் அம்மா அவளிடம் என்ன நடந்தது என்பதைக் கூற அவளோ மிகப்பெரிய சிரிப்பொலியுடன் தன் தாயை பார்த்தாள்.


அந்த சிரிப்பை அடக்க முடிந்தும் முடியாதவளுமாய் அவள் அம்மாவின் வழியும் கண்ணீரைத் துடைத்தவாறு நான் ஒருபோதும் அந்த தவறை பண்ணமாட்டேன் என்று உறுதிக் கொடுத்தாள்.


மலர் அம்மாவிற்கு ஒரே ஆச்சர்யம், எப்படி இது சாத்தியம் அதுவும் மலரிடமிருந்து. இதுவரை அழுது புலம்பி வீட்டிற்குள் வீண்பழி சுமத்தியும் வீண்விவாதம் செய்தவளிடம் மனதளவில் தளர்ச்சி அடைந்து பலவாறு பெற்றோரிடம் பேசியதைக்கண்டு பயந்த மலரின் அம்மாவுக்கு இப்போது பேசும் வார்த்தைகள் அவளிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் உணர்த்தியது. எப்படி இது நடந்தது என வினவ, மலர் தான் ஆசிரியரை சந்தித்தாகவும் அவர்கொடுத்த ஊக்குவிப்புதான் என்னை மாற்றியதென கூறினால்.


மலரின் அம்மா பொறுமையிழந்தவளாய் என்ன சொன்னார் என்று வினவ மலர் சொல்லத் தயாரானாள். நண்பர்களோடு தேர்ச்சிப் பட்டியல் பார்க்கச் சென்றவளுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆம் இந்தமுறை அவள் தேர்வாகவில்லை. அவளின் கண்களிருந்து மாலை மாலையாக கண்ணீர் ஊற்றெடுத்தது. அவளுக்கு அவளின் முகத்தைக்கூட பார்க்க பிடிக்கவில்லை. அவளுக்கு அவளிடம் எந்த கேள்விகளும் இல்லை மாறாக குறைகளே சூழந்து கொணடிருந்தது.


அவளுடைய நண்பர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்று 12ம் வகுப்பு செல்கிறார்கள் ஆனால் இவளோ தேர்வில் தோல்வி. இந்த தோல்வியை தாங்காதவளாய் பள்ளியிலிருந்து வேகமாக வெளியேற அவளது நண்பர்கள் தடுத்தும் நிற்காதவளாய் செல்கிறாள். வழியில் அவளது ஆசிரியர் அவளைக் கூப்பிட்டு என்னவாயிற்று என்று கேட்க அவரிடம் எதுவும் சொல்ல இயலாத நிலையில் வெட்கி தலைகுனிந்து நின்றாள். இந்த நிலையை கண்ட ஆசிரியருக்கு புரிந்தது.


அவளை அங்கிருந்து கூட்டிச்சென்று தனது வகுப்பறைக்கு கூட்டிவந்து அவளிடம் தனக்கு நடந்ததை சொல்லத் துவங்கினார். மலர் நானும் உன்னைப்போல் பத்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தேன். எனக்கும் உன்னைப் போல் பல எண்ணங்கள் மேலோங்கியது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் சரியான முடிவாக தெரியவில்லை. தற்கொலை பண்ண முடிவெடுத்தபோது எப்படி தற்கொலை செய்வதென யோசனேயில் எல்லா தற்கொலைக்குமே ஒருவகையில் துணிச்சல் தேவைப்பட்டது.


தற்கொலை செய்துகொள்வதற்கே நமக்கு துணிச்சல் தேவைப்படும் போது வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் துணிச்சல் தேவையென புரிந்து கொண்டேன். அதே துணிச்சலுடன் என் விதியோடு விளையாடினேன். ஆமாம் நாம் விதியோடு விளையாடியே ஆகவேண்டும். விதியோடு விளையாடினால் தான் யார் வெற்றி பெற்றவர்கள் என்பது புலப்புடும்.


விதியோடு விளையாடி தோல்வியுற்றதற்காக விளையாட்டிலேயே பங்கு பெறாமல் போவது நல்லதல்ல. எத்தனைமுறை இந்த விதி நம்மை வென்று விடமுடியும் நாம் திடத்துடன் இருந்தால் இந்த விதியும் நம் வெற்றிக்காக பணி மேற்கொள்ளும். அந்த திடத்துடன் இருந்த எனக்கு உன்முன் இதே பள்ளிக்கு சிறந்த ஆசிரியராக இருக்கிறேன். இதுவரை நான் நான் உருவாக்கிய மாணவர்கள் ஆயிரம் ஆயிரம் இருந்தும் உன்னைப்போல் தளர்வு கொண்ட மாணவர்களை ஊக்குவிப்பது என் தலையாய கடமை. தளர்நதுவிடாதே.


விதியோடு விளையாடு, போராடி விளையாடு, வெற்றியை கொண்டாடு என என் மனதில் மூழ்கி இருந்த அறியாமை என்னும் மிகப்பெரிய கல்லை கண்டுபிடுத்திவிட்டார்.

சரி நானும் என்நிலை அறிந்தவாறு என் அறியாமை என்னும் கல்லை கொலைசெய்யும் நோக்கில் பெரிய கல்லை எடுத்து கிணற்றில் போட்டேன்.


இதோ என் அறியாமை இறந்துவிட்டது. நான் தன்நிலை அறிந்தவளாய் எனக்கூற மலரின் அம்மா அவளை கட்டியனணத்தப் படியே அவளின் ஆசிரியருக்கு மனதிற்குள் வாழ்த்தைத் தெரிவித்தாள்.

விதியோடு விளையாடு, போராடி விளையாடு, வெல்லும்வரை போராடு, வென்றதை கொண்டாடுRate this content
Log in

More tamil story from CA Manimaran Kathiresan

Similar tamil story from Drama