வல்லன் (Vallan)

Classics

4  

வல்லன் (Vallan)

Classics

வேலுநாச்சி 5

வேலுநாச்சி 5

2 mins
627


முந்தைய அத்தியாத்துக்கான இணைப்பு


https://storymirror.com/read/story/tamil/2qqyf1ox/veelunaacci/detail


அத்தியாயம் 7 நாட்டுக்கு நற்செய்தி


சில ஆண்டுகளுக்குள்ளாகவே தெற்கத்திய சீமையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக அண்ணன் தம்பி இருவரும் உயர்ந்தனர். மன்னரின் அந்தரங்க பாதுகாப்பாளராகவும் படைத் தளபதிகளாகவும் பதவி உயர்வு பெற்று பேரும் புகழும் எய்தி பெரியதொரு அடையாளமாக திகழ்ந்தனர்.


பிள்ளை இல்லா வீடு வெறிச்சோடி இருக்கிறது... என பலர் காதுபட பேசுவதை வேலுநாச்சியாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பார்க்காத வைத்தியம் இல்லை குடிக்காத கஷாயம் இல்லை... காலையிலே வெயிலுக்கு முன்னமே எழுந்து வேப்பிலைய அரைத்து விளக்கெண்ணையில் கலந்து படி படியா குடித்தும் ஒரு பயனும் இல்லை, என மனம் உடைந்து தேவியே சரண் என்று ராஜேஸ்வரியின் பாதத்தில் அமர்ந்தார். நீண்ட நேரம் அமர்ந்த வேலுநாச்சியாருக்கு திடீரென தலை சுற்றி வயிற்றைப் பிரட்டி ஒரு மாதிரியா செய்துவிட்டது. பித்தம் அதிகமாக இருக்கும் என விட்டுவிட்டார் அரசி. அடுத்த நாள் ஒரு படி மேலே சென்று மயங்கியே விழுந்துவிட்டார். 


எல்லாருக்கும் என்ன செய்வது ஏது செய்வது என்றே நிலை புரியாமல் தவித்து துவண்டு போயினர். அந்த நேரம் பெரிய மருதுவும் சின்ன மருதுவும் வர நல்லதாய் போயிற்று, தாய் போல் அன்பு செலுத்திய அரசி பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதைக் கண்டால் எந்த பிள்ளைக்குத்தான் பதறாது? உடனே வைத்தியரை அழைத்து வந்தனர். முத்துவடுகநாதருக்கும் செய்தி சென்றது. சற்று நேரத்தில் அந்தப்புரமே கலேபரம் ஆனது. வைத்தியர் வந்து நாடி பிடித்து பார்த்ததும் அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, மன்னரைப் பார்த்து," தேவரே நம் சிவகங்கை ராச்சியத்துக்கு வாரிசு உதித்துவிட்டது பட்ட பாடெல்லாம் நீங்கி விடிவு பிறக்கப் போகிறது" என உணர்ச்சிவசப்பட்டு உள்ளன்போடு கூறினார்.


இதனைக் கேட்ட தேவரின் நிலை என்ன சொல்லியா தெரிய வேண்டும். இருக்காதா பின்னே, எத்தனை வருட ஏக்கம் தவம் எல்லாம் இன்று நினைவாக மலரப் போகிறது. ஊரெல்லாம் நற்செய்தியை முரசு கொட்டி அறிவிக்க கட்டளை பிறந்தது. நாடே விழாக்கோலம் பூண்டது. நீண்ட நாளுக்குப் பின் ராச்சியம் சார்ந்த ஒரு நற்செய்தி இன்றே மக்களுக்கு எட்டியுள்ளது. 


மயக்கத்தில் இருந்த வேலுநாச்சியாரின் அருகிலேயே அமர்ந்திருந்தார் தேவர். நாச்சியார் கண்களைத் திறந்து அவர் முகத்தைக் கண்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக ஆனந்தத்தில் வழியத் தொடங்கியது. நாச்சியாருக்கு ஏதும் புரியவில்லை என்ன ஆயிற்று‌ ஏன் அழுகிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்னவென்று சொல்லுங்கள் என பதற, மருது சகோதரர்கள், "தாயே தாங்கள் கருவுற்றிருக்கிறீர்கள்" என கூறியவுடன் பார்க்க வேண்டுமே நாச்சியாரை வாய் மகிழ்வில் சிரிக்கிறது கண்களில் கண்ணீர் இத்தனை நாள் தூற்றிய தூற்றல்களை கழுவும் விதமாக வழிகின்றது. 


அன்று வழிந்த கண்ணீர்களின் தடத்தை இன்று வழியும் கண்ணீர் துடைக்கினது, போட்ட பழிகளை அழிக்கிறது, மலடி பட்டத்தை எறிந்துவிட்டது தாய்மைப் பொறுப்பை தூக்கி சுமக்க வைக்கிறது. பெரும் துன்பத்தை நீக்கி இன்ப வாழ்வுக்கான வாயில் கதவு இருவருக்கும் இனிதே திறந்து வரவேற்கிறது.


Rate this content
Log in

Similar tamil story from Classics