தீபாவளியின் மறுபக்கம்
தீபாவளியின் மறுபக்கம்
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. "அய்யா 500 ரூபா முன்பணமா கேட்டிருந்தேன் தீபாவளிக்கு வீட்ல புள்ள காத்துற்றுப்பா" என்று தயங்கிக் கொண்டே முதலாளியிடம் கேட்டான். "இதோட எத்தனையோ முறை உனக்கு முன்பணம் குடுத்தாச்சு முருகேசா.. எதோ நல்ல நாள் அப்டிங்றதால தான் இன்னைக்கு நான் தரேன்.. இனிமேல் முன்பணம் அது இதுனு என் முன்னாடி வந்து நின்ன அவ்ளோதான் என்று கறாராக கடிந்து கொண்டே 500 ரூபாயைத் தந்துவிட்டு கிளம்பினார் அவன் முதலாளி.
தனது கையில் உள்ள 240 ரூபாய்க்கு தகுந்த ஒரு ஆடையை தன் ஆசை மகளுக்கு வாங்கி எடுத்துக் கொண்டு, மீதி இருப்பதை வைத்துக் கொண்டு இந்த தீபாவளியை முடித்து விட வேண்டும் என்பதுதான் பெரிய மனக் கணக்காக நினைத்தான். சிறிது பலகாரங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தான். மீனாவும் தன் தந்தை வரும் வரை வீட்டு வாசலில் திண்ணையில் காத்திருந்தாள்.
பக்கத்து வீட்டு பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தாள். பல ஆசைகள் மனதில். தந்தையின் கையில் புது பையைப் பார்த்தவள் வேகமாக ஓடி கட்டி அணைத்து முத்தமிட்டாள் தந்தையை. புத்தாடையைப் பார்த்தவுடன் தனக்கான தீபாவளி வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள்.. தனது பக்கத்து வீட்டு தோழி பரிமளாவிடம் தனது புத்தாடையை காண்பித்தாள்.
இந்த மகிழ்ச்சிக்காக எத்தனை முறை வேணடுமானாலும் கூட முதலாளியிடம் திட்டு வாங்கிக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. மனைவியோ எதுக்குங்க இப்போ எனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்திங்க என்று திட்டிக் கொண்டே அந்த புடவையின் விலையைப் பார்த்தாள். 100 ரூபாய் என போட்டிருந்தது. இந்த 100 ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்கிருக்களாம்லங்க என்றாள். நல்ல நாள் அதுவுமா இந்த ரேசன் புடவைக்கு பதிலா நல்ல புடவையை கட்டுமா என்றான். நீங்க புதுத் துணி போடாம நா மட்டும் எப்டிங்க என்றாள்.
நா புது மாப்ள பாரு புது துணி போட.. எனக்கு என்னடி நான்லா அழுக்கு லுங்கிலயே அழகா தெரிவேண்டி என்று வேடிக்கைப் பேச்சுடன் அன்று முழுதும் உழைத்து களைத்ததில் தூங்கி விட்டான். இப்படியான தீபாவளியை நோக்கியும் பல குடும்பங்கள் வாழகின்றனர்.
அனைவரது குடும்பத்திலும் மன நிறைவுடன் கொண்டாடும் பண்டிகையே நல்ல மகிழ்ச்சியான பண்டிகை.... அனைவரதுு குடும்பத்திலும் இந்த மனநிறைவை கொண்டு செல்லும்்் நாளாக இந்த தீப ஒளி திருநாள்் அமையட்டும்.
