Punitha V Karuppaiya

Abstract Drama Inspirational

4  

Punitha V Karuppaiya

Abstract Drama Inspirational

பேதமை வேண்டாம்!

பேதமை வேண்டாம்!

2 mins
505


   சுமார் முப்பது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு இது. மதுரை மாவட்டம் கீரனூர் ஜில்லாவில் வசித்து வந்த தம்பதியினர் முத்துசாமி, காந்திமதி. திருமணம் ஆகி மூன்று வருடத்திற்கு பிறகே மூத்த மகள் செல்வி பிறந்தாள். அப்பப்பா அந்த மூன்று வருடத்திற்குள் இருவரும் வாங்காத வசைப் பேச்சுகளை இல்லை. சிறிதளவு கூட முற்போக்கு சிந்தனையே இல்லாத பல மனிதர்கள் வாழ்ந்த காலம் அது என்றே கூறலாம்.  குழந்தைகளுக்காக வேண்டியிருந்த நாட்களில் ஒரு தேவதையாக உதித்தவள் செல்வி. ஒரு வழியாக ஊராரின் வசைப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்க, அதுத்தடுத்த வருடங்களில் கலைநிலா, அம்சவேனி என்ற இரண்டு குழந்தைகளை ஈன்று எடுத்தார் காந்திமதி. சொல்லவா வேண்டும் ஊர் மக்களுக்கு. "ஏன்பா முத்துசாமி, மூனும் பொட்ட புள்ளையா பெத்துக்கிட்டயே! கடைசி காலத்துல கஞ்சி ஊத்துறதுக்கு ஒரு ஆம்பள புள்ளைய கூட உன் பொண்டாட்டி பெத்து போட முடியலையா? எங்க இருந்துதான் இப்படி ஒரு பொண்டாட்டிய கட்டிட்டு வந்தியோ?" என்று பக்கத்து வீட்டு அமிர்தம்மாள் சொடுக்குவாள். எனக்கு பொறந்த மூணும் என்னோட குலதெய்வங்க... அவங்கள நா ராணி மாறி வளப்பேன், நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் என முகத்தில் அடித்தால் போல சொல்லிவிட்டு வருவார் முத்துசாமி. 


   முத்துசாமி வீட்டின் அருகே கந்தன், பரிமளா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். பல கோவில்களில் பல வேண்டுதல்கள் வைத்து, இரட்டை ஆண் குழந்தைகள் ராமன், இலக்சுமணன் பெற்றுக்கொண்டனர். அடுத்த குழந்தை பெண்ணாக பெற்று விடுவோமோ என்ற பயத்திலேயே போதும் என்று திட்டமிட்டு கொண்டனர். ஆண் குழந்தையை பெற்றுக்கொண்ட பெருமையில், காந்திமதி அம்மாவை பரிமளா அம்மா பேசாத குத்தல் பேச்சுக்களே இல்லை. 



   ஆயிரம் பேர் இது போல அவதூறாக பேசினாலும், பெண் பிள்ளைகளை தனக்கு கிடைத்த வைரங்களாக நினைத்து, தனது அன்பான அக்கறையுடன், பாசமுள்ள கண்டிப்பினால் பல இன்னைல்களைக் கடந்து மூவரையும் வைரங்களாய் மின்னச் செய்தார். ஆம் செல்வியை மின்னணு பொறியியலாளர் ஆகவும், கலைநிலாவை வங்கி மேலாளர் ஆகவும், அம்சவேணியை கிராம நிர்வாக அலுவலர் ஆகவும் உயர்த்திய மாமனிதர் தான் முத்துசாமி! 



   ஆனால் கந்தன், பரிமளா தம்பதியினர் ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெருமிதத்தில், அவர்களை அதிக அளவு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து விட்டனர். ஒரு சொம்பு தண்ணீரைக் கூட அவர்களால் தானே எடுத்துக் குடிக்காமல் வேலைக்கார பெண்ணைக் கேட்பார்கள். இப்படி பொறுப்பில்லாத சோம்பேறியாக திரிந்த இருவரும், பல சூதாட்டங்களில் தனது சொத்தை இழந்து வறுமையில் வாடினர். ஒரு முறை, வறுமையின் கொடுமை தாங்காமல் அனைவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். வேலைக்குச் சென்ற இடத்தில் பொருளைத் திருடி சிறைக்குச் சென்று விட்டனர் இராமனும் இலக்சுமணனும். பல வேதனைகளுக்குப் பிறகே, இந்த தம்பதியினர், நம்மைப் பார்த்துக்கொள்ள ஆண் பெண் பிள்ளை வேறுபாடு என்ற ஒன்று தேவையே இல்லை.. எந்த பிள்ளையாக இருந்தாலும், நாம் நம் பிள்ளைகளை ஒழுக்கமாகவும், நல்ல கல்வி அறிவுடனும் வளர்த்தாலே போதும். நமக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் சேர்ந்தே இருக்கும் என்பதை உணர்ந்தனர்.



   ஆண் பிள்ளையாக இருந்தாலும் பெண் பிள்ளையாக இருந்தாலும் கல்வியையும் ஒழுக்கத்தையும் சமமாக பங்கிட்டு வழங்குவோம். எந்த ஒரு பாலினமும் மற்றொரு பாலினத்தை குறைத்து மதிப்பிட வேண்டாமே! மனிதனாக பிறந்த அனைவருமே சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, வீட்டுத் தேவைக்காக பணம் சம்பாதிப்பது மற்றும் நாடாள்வது போன்ற அனைத்திலும் சம கடமை இருக்கிறது. இதில் ஆண் பெண் என்ற பேதமை எதற்கு? இருவருக்கும் பசி எடுக்கிறது என்றால், இருவருக்குமே சாப்பிடத் தெரியும் என்றால், இருவருக்குமே சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?



   இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு சாதி மத பிரிவினை அல்ல. ஆண் பெண் என்ற பாலிணத்திற்குள் அனைவரது பொறுப்புக்களையும் சுதந்திரத்தையும் ஒளித்து வைத்துள்ளது இந்த சமூகம். முதலில் குடும்பத்துக்குள் உள்ள மூடத்தனத்தைக் கொளுத்தி விட்டு, சற்று வெளியில் வந்து பார்ப்போம்.



   எந்த வீட்டில் தான் சாப்பிட்ட தட்டை தானே எடுத்து சுத்தம் செய்ய ஆண் மற்றும் பெண் குழந்தை இருவருக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது, அங்குதான் நல்ல சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract