STORYMIRROR

B KARTHEKA

Drama Tragedy

4.5  

B KARTHEKA

Drama Tragedy

தாயின் பாசம்

தாயின் பாசம்

2 mins
258


ரீமா , மேக் இருவரும் காட்டிற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் தன் அம்மா நிலாவுடன் வசித்து வந்தனர். அவர்களுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அதனால் பிரிந்து வாழந்து வந்தனர்.நிலா அந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்தாள். அவர்களுடன் செல்ல பிராணியான டேனி என்ற நாய் இருந்தது. 


ஒரு விடுமுறை நாளில் ரீமா மேக் மற்றும் டேனி மீன் பிடிக்க காட்டிற்குள் இருக்கும் ஏரிக்கு சென்றனர். அந்த ஏரி மிக விசித்திரமாக இருந்தது. ஏரி வறண்டு இருந்தது. ஏரியின் நடுவில் ஒரு பட்டை மரம் .அதை சுற்றி சகதிகள் . டேனி அந்த மரத்தை பார்த்து குரைத்து விட்டு மரத்தை நோக்கி ஓடியது. சகதியில் விழுந்த டேனி யை மேக் காப்பாற்றினான். மேக் இன் ட்ரெஸ்ஸில் சகதி பட்டு விட்டது. 

ரீமா : ரெம்ப வித்தியாசமான ஏரி .

டேனி குரைத்து கொன்டே இருந்தது. 

மேக் : நிறுத்து டேனி போதும் வா போலாம். 

வீட்டில் அம்மா 


அம்மா : ரீமா எங்க போய்ட்டு வரீங்க ? டிரஸ் லாம் சகதியா இருக்கு. 

 ரீமா : டேனி தான் அந்த சகதி ல மாட்டிக்கிட்டான் . அவனை வெளிய இழுக்கும் போது சகதியாயிடுச்சு .


அன்று இரவு டேனி வீட்டை விட்டு ஓடிவிட்டான் . பின்னாலே மேக் ஓடினான் . கல் தடுக்கி விழுந்தான் மேக். 

 மேக்: அம்மா ! டேனி காட்டுக்குள்ள போய்ட்டான் .

அம்மா : காலைல வந்துருவேன். பயப்படாத ! வா தூங்கலாம். 


காலையில் மேக் , ரீமா இருவரும் ஸ்கூல் க்கு சென்றனர். அன்று இரவு , அவங்க வீட்டு வாசலில் சத்தம். மேக் கதவை திறந்து ஓடினான். வெளியில் டேனி வித்தியாசமாக இருந்தது. மேக்கை பார்த்ததும் கடித்து குதறியது. நிலா கல்லை எடுத்து அடித்து டேனியை கொன்றாள் .


மேக்கை ஹாஸ்பிடல்க்கு கொண்டு சென்றனர். ரீமா அழுதுட்டே இருந்தாள் . நிலா அவளை சமாதானம் செய்தாள். மேக்கை ICU வில் இருந்தான். திடீரென ICU வில் மணி ஒலிக்க டாக்டர்கள் விரைந்தனர். மேக் கிற்கு வலிப்பு வந்து இருந்தது. கொஞ்ச நேரம் கழிச்சு

நார்மலா இருந்தான். அவனை பரிசோச்சித்த  டாக்டர் 


டாக்டர் : உங்க பையன் உடம்புல வைட்டமின்ஸ் இல்ல. 


நிலா : நான் சாப்பாடு கொடுக்குறேன் டாக்டர்.


நிலா: மேக் இந்த சாப்பாடை சாப்பிடு கண்ணா 

மேக் : வேணாம் மா .எனக்கு இது பிடிக்கலை.

நிலா : இரு ஜூஸ் எடுத்துட்டு வரேன்.

  

அம்மா சென்றவுடன் மேக் கையில் ஏறி கொண்டு இருந்த இரத்த பாக்கெட்யை எடுத்து அப்டியே குடித்தான். அவன் அம்மா இதை பார்த்து திகைத்து நின்றாள். அவன் குடித்து முடித்த பிறகு இது எதையும் அறியாத டாக்டர் வந்தார். 


டாக்டர்: நான் இப்ப உன்ன செக் பண்ண போரேன்.

மேக் : ஓகே டாக்டர் 

டாக்டர்: ஹே பாய் இப்ப உன் உடம்புல வைட்டமின்ஸ் இருக்கு. நல்ல சாப்பாடு. 


நிலாவுக்கு புரிந்து விட்டது. மேக் இரத்த காட்டேரியாக மாறிவிட்டான் .மேக்கை டிஸ்சார்ஜ் செய்த பிறகு தினமும் நிலா அவள் வேலை செய்யும் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு பாக்கெட் இரத்தம் கொண்டு வருவாள் .நாட்கள் செல்ல செல்ல அவனக்கு அது பற்றவில்லை. உடனே அவள் தன் கையை கீறி 

இரத்தத்தை பாட்டிலில் பிடித்து கொடுப்பாள் . இதனால் நிலா பலவீனமானாள். இந்த விஷயம் ரீமாக்கு தெரியாது. 


ஒரு நாள் நிலா ஹாஸ்பிடல்க்கு சென்று விட்டாள். ரீமாவும் மேக்கும் விளையாடிட்டு இருந்தனர். மேக் கு பசி வந்து விட்டது. மேக் உறுமினான். 


ரீமா: என்னடா சத்தம் போடற .

மேக் : பசிக்குது. 

ரீமா : இரு ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரேன் .

மேக் : இல்ல உன்ன சாப்பிடப்போறன் . 

 மேக் ரீமாவை கடிக்க பாய்ந்தான். நிலா வந்துவிட்டாள் . அவனை தடுத்தாள் . எவ்வளவு தடுத்தும் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் அங்கு இருந்த கத்தியை எடுத்து மகனை மகளுக்காக கொன்றாள் நிலா. 


தாயின் பாசம் அளப்பரியது. தன் மகனுக்காக தன் உயிரையும் மாய்க்க துணிந்த தாய் தன் மகளுக்கு காக மகனை கொன்றாள் .


முற்றும்..... 


Rate this content
Log in

Similar tamil story from Drama