STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Crime

4  

Vadamalaisamy Lokanathan

Crime

பயணம்

பயணம்

2 mins
291

ராஜா தன்னுடைய காரில் மிதமான வேகத்தில் அந்த நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டு இருந்தான்.பயணம் அவனுக்கு புதிது அல்ல. ஓவ்வொரு பயணத்தின் முடிவில் அவனுக்கு ஒரு அனுபவம் கிடைக்கும்.

அப்படி ஒரு பயணத்தின் போது

வழியில் இளைப்பாற ஒரு உணவு விடுதியில் காரை நிறுத்தினான.

அமர்ந்து தேனீர் அருந்தி விட்டு புறப்படும் போது அவன் காருக்கு அருகில் இனி ஒரு காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர்.

அந்த காரில் சக்கரத்தில் காற்று இறங்கி இருந்தது.அதை பார்த்து கொண்டு இருந்த இளைஞன்

 ராஜா விடம் ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டான்.என்ன என்று இவன் கேட்க,அடுத்த பத்தாவது கிலோமீட்டர் தொலைவில் ஒரு கல்லூரி இருக்கிறது அங்கு இறக்கி விடுங்கள்,அவளுக்கு வேலைக்கு நேர்காணல் இருக்கிறது.அவள் அதை முடிப்பதற்குள் நான் அஙu வந்து விடுவேன்.நீங்க அவளை இறக்கி விட்டா மட்டும் போதும்

என்றான்.

ராஜா அவளை இறக்கி விட்டு போய் விட்டான்.அவளை அத்தோடு மறந்து விட்டான்.

சில நாட்களுக்கு பிறகு தன்னுடைய அலுவலகம் அருகில் நடை பாதையில் சந்தித்தான்.

அப்போது அவள் வந்து தன்னை அறிமுக படுத்தி கொண்டு பேசினாள்.அவனும் ஒரு ஹை சொல்லி விட்டு நகர போனான்.

ஆனால் அவளோ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டாள்.என்ன என்று இவன் கேட்க,எனக்கு accounts தெரியும் அது சமமந்தமா ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டாள்.

உடனே அவனுடைய மேனஜரை கூப்பிட்டு ஒருத்தரை அனுப்புகிறேன்.முடிந்தால் உதவி

செய்து கொடுங்கள் என்று அவளை மேனஜரிடம் அனுப்பி வைத்தான்.

அவரும் அவளுடைய திறமைக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அவளும் தன்னுடைய திறமையை பயன் படுத்தி மேலே வந்தாள்.

அவளுடைய திறமை ராஜாவுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

அது திருமணத்தில் முடிந்தது.

சில வருடங்களுக்கு பிறகு அவளும் நிர்வாகத்தில் தலை இட ஆரம்பித்தாள்.அது அவனுக்கு பிடிக்கவில்லை.அதை காரணமாக வைத்து விவாக ரத்து கேட்டாள்.

வயிற்றில் வளரும் குழந்தைக்கு

சேர்த்து இழப்பீடு கேட்டாள்.

அவனும் தொல்லை விட்டால் சரி என்று விவாகரத்து கொடுத்து விட்டான்.இப்போது அந்த குழந்தை வளர்ந்து வாலிப வயதை எட்டும் போது,அந்த குழந்தை தான் சட்டபடி அவனுடைய வாரிசு,அவனுடைய சொததில் பாதி வாரிசுக்கு கொடுக்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தாள்.

அவனுக்கு முழு சொத்தையும் கொடுத்து விட முடியும்.

வேலை கேட்டு அதற்கு இவளுக்கு உதவ,தன்னை இவ்வளவு தூரம்

துன்புறுத்தி பார்ப்பது அவனுக்கு வேதனை ஆக இருந்தது.

அதற்கு முடிவு கட்ட நினைத்து அவளை சந்திக்க நேரில் வர சொல்லி இருந்தான்.

அதற்காக காரில் பயணம் செய்து கொண்டு இருந்தான்.முதன்முதலாக 

சந்திதத அதே இடத்திற்கு வர சொல்லி இருந்தான்.

இன்றைக்கு இந்த பிறச்னைக்கு முடிவு கட்ட நினைத்தான்.

இடுப்பில் சொருகி இருந்த கை துப்பாக்கியை தொட்டு பார்த்து கொண்டான்.

குறிப்பிட்ட நேரத்தில் அவளை சந்தித்து விட்டு அருகில் இருந்த காவல் நிலையம் சென்று துப்பாக்கியை கொடுத்து சரண்டர் ஆனான்.தற்காப்புக்கு ஒரு பெண்ணை சுட்டு விட்டேன் என்று கூறி சரண் அடைந்தான்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Crime