Vadamalaisamy Lokanathan

Crime Thriller

3.6  

Vadamalaisamy Lokanathan

Crime Thriller

போலீஸ் ஸ்டேஷன்

போலீஸ் ஸ்டேஷன்

4 mins
483



இன்ஸ்பெக்டர் சேகர் அப்போது தான் உள்ளே நுழைந்து,அங்கு காத்து இருக்கும் நபர்களை பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து கொண்டு,அன்றைக்கு செய்ய வேண்டிய நீதிமன்ற வழக்குகளை வரிசை படுத்தி பார்த்து கொண்டு இருந்தான்.

அப்போது அங்கு நுழைந்த பிரபல விளையாட்டு வீராங்கனை ஆராதனா ,இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்று உரத்த குரலில் கேட்டு கொண்டு இருந்தாள்.

அவள் குரலில் பதட்டம் ஆணவம்,எல்லாமே சேர்ந்திருந்தது.

உதவி ஆய்வாளர் குமரன் அவளை அமர சொல்லி விட்டு என்ன விவரம் என்று கேட்க,என்னுடைய மகளை நேற்று இரவு முதல் காணவில்லை என்று கூறி தேம்பி அழுதாள்.

என்ன வயது என்று கேட்க,பதினான்கு என்றாள்.சற்று விவரமாக சொல்லுங்கங்க என்று குமரன் கேட்க,எப்போதும் போல நடன வகுப்பிற்கு சென்றவள் திரும்பி வரவில்லை.வழக்கமாக ஏழு மணிக்குள் திரும்பி விடுவாள். சரி ராத்திரி பூரா என்ன செய்தீங்க என்று குமரன் கேட்க ,நான் வெளியூர் சென்று விட்டு இன்று காலை தான் வந்தேன் என்றாள்.வீட்டில் யாராவது வந்து தகவல் சொல்லி இருக்கலாமே என்று திரும்ப கேட்க,வீட்டில் வயதான என் தாயார் தான் இருந்தார்கள்.அவர் எனக்கு சொல்லி விட்டு ,நான் வரட்டும் என்று காத்து இருந்தார்கள்.தெரிந்த இடங்களில் விசாரித்து கொண்டு இருந்தோம் என்றாள் ஆராதனா.

ஆராதனா ஒரு காலத்தில் சிறந்த ஒட்ட பந்தயத்தில் சிறந்து விளங்கினார்.இப்போது வயது தாண்டி விட்ட காரணத்தால் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தாள்.கணவன் பிரிந்து போய் விட்டான்.தன்னுடைய ஒரே குழந்தை

ஆர்த்தி,மற்றும் அவளுடைய தாயார்

ஆகியோருடன் ஒரு தனி வீட்டில் வசித்து வந்தாள்.

ஆர்த்தி ஒன்பதாவது படித்து கொண்டு நடனம் கற்று வந்தாள்.நடன பள்ளி அடுத்த தெருவில் தான் இருந்தது.ஒரு ஐந்து நிமிடம் தான் பிடிக்கும் அங்கு போய் சேர,போய் சேர்ந்ததும் பாட்டிக்கும் அம்மாவிற்கும் கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விடுவாள்.


அன்றும் போய் சேர்ந்ததும் செய்தி அனுப்பி விட்டு பயிற்சி செய்ய தொடங்கி விட்டாள்.பயிற்சி முடிய இன்னும் பத்து நிமிடம் இருக்கும் போது கைபேசி ஒலிக்க பயிற்சியாளர் அனுமதியுடன் எடுத்து பேச,பாட்டி கீழே விழுந்து விட்டார்கள் ம யக்கமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள ஶ்ரீ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் நீ அங்கு வந்து விடு என்று யாரோ கூற,உடனே பயிற்சியை நிறுத்தி விட்டு அனுமதி வாங்கி கொண்டு வெளியில் வந்து பார்க்க,ஒரு ஆட்டோ சொல்லி வைத்தார் போல் காத்து இருக்க,அதில் ஏறி கொண்டு,ஶ்ரீ ஆஸ்பத்திரிக்கு போக சொன்னாள்.

சிறிது தூரம் சென்ற ஆட்டோ வேறு வழியில் பயணிக்க துவங்க,இவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய,அவர் யாருக்கோ போனில் பேச,அவர் வேறு ஆஸ்பத்திரியில் இருப்பதாக சொல்ல சொல்லி பதில் கூறினார்.


வேறு ஒரு ஆஸ்பத்திரி வாசலில் ஆட்டோ நிற்க,ஆர்த்தி இறங்கி ஓட,அங்கு காத்து இருந்த ஒருவர்,அவளுடைய அம்மாவிற்கு தெரிந்தவர்,அவளை வரவேற்று ஒரு அறைக்கு கூட்டி சென்றார்.அதற்கு பிறகு ஆர்த்தி யாரையும் தொடர்பு கொள்ள வில்லை.



ஆராதனா கூறிய விவரங்களை சேகரித்து குமரன் 

இன்ஸ்பெக்டர் சேகரிடம் விவரித்தார்.சேகரும் ஆரதனாவிடம் வந்து ஆர்த்தியின் புகைப்படம் போன் நம்பர் போன்ற விவரங்களை சேகரித்து கொண்டு அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.


ஆர்த்தியின் போனை தொடர்பு கொண்ட. போது மணி அடிக்கும் சத்தம் கேட்டது,யாரும் எடுத்து பேசவில்லை.

செல்போன் கம்பனியில் அதுனுடிய லொகேஷன் தேடிய போது அது ஆராதனா வீட்டை சுற்றி காண்பித்தது.இன்ஸ்பெக்டர் சேகரும் குமரனும் ஆராதனா வீட்டிற்கு சென்று சோதனை செய்து பார்த்த போது மணி அடிக்கும் சத்தம் கேட்டது,ஆனால் வீட்டிற்குள் போன் கிடைக்கவில்லை. வீட்டை சுற்றி பார்த்த போது செடிகளுக்குள் மறைந்து இருந்ததை கண்டு பிடித்து எடுத்தார்கள்.கூப்பிட்ட நம்பர்களை சரி பார்த்த போது இன்ஸ்பெக்டர் சேகர் அழைத்த நம்பர் மட்டுமே பதிவாகி இருந்தது.மற்ற நம்பர்கள் விவரம் அழிக்க பட்டு இருந்தது.அந்த போன் அங்கு எப்படி வந்து இருக்க முடியும் என்று யோசித்தார் இன்ஸ்பெக்டர் சேகர்.யாராவது பகைவர்கள் இருப்பார்களா என்று கேட்ட போது தன்னுடன் பிரிந்து போன கணவன் கோவிந்து அடிக்கடி பிரச்சினை செய்வார்,மகளை தன்னுடன் அனுப்பும் படி,அதை தவிர வேறு யாரும் இல்லை என்றாள்.

அவளுடைய நண்பர்கள் விவரம் கேட்ட போது,சக பயிற்சியாளர் மயில்சாமி மட்டும் தான் ஏதாவது உதவிக்கு வருவார் என்று கூறினாள்.

அவருடைய நம்பரையும் கேட்டு வாங்கி கொண்டார் சேகர்.பிறகு குமரனை அழைத்து கொண்டு ஸ்டேஷன் போனார்.அங்கு போய் கன்ட்ரோல் அறைக்கு இரண்டு போன் நம்பர் கொடுத்து இரண்டும் எந்த ஏரியாவில் கடந்த இரு தினங்கள் இருந்தது என்று கண்டு பிடிக்க சொன்னார்.ஒரு மணி நேரத்தில் அவர் கேட்ட விவரம் கிடைக்க குமரனை கூப்பிட்டு மயில்சாமி இருப்பிடம் சென்று அவரை அழைத்து வர சொன்னார்.

குமரனும் அழைத்து வர,சேகர் ஆரதனாவிற்கு போன் செய்து குழந்தை கிடைத்து விட்டாள் ஸ்டேசன் வாருங்கள் என்று சொன்னார்.


ஆராதனா அடித்து பிடித்து  காவல் நிலையம் வந்தாள் அதற்கு முன்பு.மயில்சாமி ஜீப்பில் ஏற்றி மயில்சாமி சொன்ன இடத்திற்கு போனார் குமரன்.அறை மணி நேரத்தில் ஆர்த்தியுடன் காவல் நிலையம் திரும்பினார்கள்.

இன்ஸ்பெக்டர் சேகர் கோவிந்த் நம்பருக்கு போன் செய்து காவல் நிலையம் வர சொன்னார்.


கோவிந்து வந்ததும் சார் என் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்.இதோ கோர்ட் உத்தரவு என்று நீட்டினார்.இன்ஸ்பெக்டர் சேகரும் தாராளமாக அழைத்து செல்லுங்கள்,அதற்கு தான் வர சொன்னேன்.இந்த அம்மாவிடம் இந்த குழந்தை இருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றார் சேகர்.

உடனே ஆராதனா சார் மரியாதையாக பேசுங்கள் குழந்தையை இவரிடம் அனுப்ப முடியாது இவருக்கு குழந்தை மீது அக்கறை கிடையாது என்றாள்.


உடனே சேகர்,நீங்க சொல்வது சரி தான்,குழந்தை வளர்ப்பில் அவருக்கு அனுபவம் கிடையாது,ஆனால் அவரால் அந்த குழந்தையின் உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லை.

ஆரதானாவிடம் உங்களையும் உங்கள் நண்பர் மயில்சாமி இருவரையும் கைது செய்கிறேன் என்று கூறி இருவரையும் ஜெயிலில் உள்ளே தள்ளினார்.


அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்த வழக்கை பற்றிய விவரங்களை கூறினார்.

ஆராதனா மயில்சாமி இருவரும் நீண்ட கால காதலர்கள்.வேறு வேறு வகுப்பை சேர்ந்தவர்கள்.இருவரும் மணம் முடிக்க வீட்டில் சம்மதிக்கவில்லை.திருமணத்திற்கு பிறகும் இன்று வரை ஆரதனா

மயில்சாமி கூட தவறான தொடர்பில் இருந்து வந்து உள்ளார்.கோவிந்த் பல முறை எச்சரித்தும் அவர்கள் பிரிவதாக இல்லை. ஆனால் அவர்கள் உறவை வளர்ந்த பெண் ஆர்திக்கு பிடிக்கவில்லை.அடிக்கடி தன் தந்தைக்கு போன் செய்து சொல்லி கொண்டு இருந்தாள்.மயில்சாமி ஆர்தனா வீட்டிற்க்கு வரும் போது ஆர்த்தி அவளுடைய அப்பாவிற்கு தகவல் அனுப்பி விடுவாள்.அவரும் வந்து சண்டை போட்டு செல்வார்.

மயில்சாமி திட்டம் போட்டு ஆர்தியை கடத்தி அவளை வடஇந்தியாவில் விபச்சாரம் செய்யும் கும்பலுக்கு விற்று விட முடிவு செய்தனர்.அதன் படி தான் ஆர்த்தியை நடன பள்ளியில் இருந்து மயில்சாமி ஆட்டோவில் வந்து கடத்தி சென்றார்.

அவள் சத்தம் போட ஆர்தனாவை ஆர்தியுடன் பேச வைத்து நம்ப வைத்து கடத்தி ஒரு அறையில் தங்க வைத்து இருந்தான்.

கோவிந்தன் மீது புகார் அளித்தால்

போலீஸ் வேறு எங்கும் தேட மாட்டார்கள் என்று நினைத்து அவர் மீது சந்தேகம் இருப்பதாக நாடகம் ஆடினார் ஆராதனா.

மயில்சாமி,ஆர்த்தி இருவர் போனும் நடன பள்ளியில் இருந்து ஒரே இடத்திற்கு நகர்ந்தது தெளிவாகி இருக்க,கடத்தியது மயில்சாமி என்று தெளிவாகி விட்டது.மயில்சாமி ஆராதனா போன் அழைப்புகள் அதை ஊர்ஜிதம் செய்ய,இருவரும் குற்றவாளிகள் என்று முடிவு செய்தோம்,மேலும் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.இருவரும் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார்கள்.வழக்கு நீதி மன்றம் வரும் போது தவறுக்குறிய தண்டனை கிடைக்கும் என்று சொல்லி பேட்டியை முடித்தார்.



Rate this content
Log in

Similar tamil story from Crime