Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

Nithi Anand

Tragedy


5.0  

Nithi Anand

Tragedy


இறுதி முத்தம்

இறுதி முத்தம்

4 mins 286 4 mins 286

அதிகாலை நேரம்,சூரியன் மெதுவாக உதிக்க தொடங்கியது... 

சாலையோர தேநீர் விடுதியில் ரேடியோ ஒலிக்க... 

இன்னும் நிறைய கதைக்கோனும் இந்த கானத்த கேட்டுட்டு வாங்க

இது சக்தி பண்பலை 103.4

அழகு குட்டி செல்லம் என்ற பாடல் ஒலிக்கிறது அப்போது இருவர் அந்த தேநீர் கடையிலிருந்து வெளியே வருகின்றனர்,

இராணுவ வீரன் போன்ற கட்டுக்கோப்பான உடற்கட்டு,நமது பக்கத்து வீட்டு பையன் போன்ற முகம் மற்றொருவர் முழுமதியை முகமென கொண்ட நமது ஊர் பெண். ஏதோ சாதித்ததை போன்ற மிகுந்த பெருமித உணர்வுடன் கைகளை கோர்த்து கொண்டு இருவரும் சாலையில் நடந்துவரும் அழகை பார்க்கும்போது அவர்கள் காதலர்களாக இருக்கக்கூடும். இருவரும் சாலையை கடந்து அந்தப் பக்கம் செல்கின்றனர் அங்கு ஒரு முதியவர் ஒரு மூட்டையை சைக்கிளில் வைக்க மிகவும் சிரமப்படுகிறார் இதை கவனித்த இவர்கள் தாத்தா இருங்க நாங்க உதவி பண்ணுறோம் .. 

நகருங்க, சைக்கிள் ஸ்டேண்ட் எடுத்து விட்டுட்டு அந்த பெண் சைக்கிளை பிடித்துக் கொள்ள அந்த இளைஞன் அந்த மூட்டையை சிரமமின்றி எடுத்து வைக்கிறான், தாத்தா ஒரு கயிற்றை கொடுக்க அந்த இளைஞன் நன்றாக கட்டுகிறான். மீதம் இருக்க நாலு மூட்டையும் நீங்க தான் கொண்டு போனுமா? 

இல்ல சாமி.எனக்கு இது ஒண்ணுதான்.. 

சைக்கிளை கொஞ்சம் முன் நகர்த்தி முதியவரிடம் கொடுக்கிறாள். 

நீங்க ரெண்டு பேரும்நல்லாருக்கனும்.. ரம்ப நன்றி கண்ணு 

தாத்தா கிளம்புகிறார்... 

தாத்தாவின் முடியாமையை கண்டு பரிதாபம் உற்றாலும் அவரது உழைப்பை கண்டு பெருமிதத்தோடு இருவரும் பூங்கா சாலையோரம் நடக்க ஆரம்பிக்கின்றனர். காலை நேர குளிர்காற்று மிதமாக வீச மரங்களில் இருந்த பூக்கள் அவர்கள் மீது விழுந்து வரவேற்க இருவரும் பூங்காக்குள் நுழைகின்றனர் மரங்கள் அசைவதை வரவேற்பாக எடுத்துக்கொள்வதா இல்லை உள்ளே வராதீர்கள் என்று சொல்வதாக நினைப்பதா...!!!

பூங்காக்குள் எங்கு நோக்கினும் மக்கள் அடர்ந்த மரங்கள், நன்கு வெட்டப்பட்ட புற்கள், மேடு பள்ளங்கள் நிறைந்த நில அமைப்பு ஆங்காங்கே சிறிய பொம்மைகள், சிறுவர் சிறுமியர் விளையாட ஊஞ்சல்கள் தொங்கவிடப்பட்டிருந்தது. 

ஒரு சிலர் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தனர் ஒரு சிலர் யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட, சிறுவர் சிறுமிகளுக்கு ஒருவர் தற்காப்பு பயிற்சியளித்து கொண்டு இருந்தாா் ஒருவர் தன் மகளிடம் பந்து உருட்டி விளையாட அதை அவரது நண்பர் படம்பிடித்துக் கொண்டு இருக்கிறார், இவர்கள் இருவரும் அமர இடம் தேடி

கண்டு பிடிக்கின்றனர் ஒரு உயர்ந்த ஆலமரம் அதனடியில் ஒரு அமரும் இருக்கை இவரும் அங்கே சென்று அமர்கின்றனர் அந்த பெண் அவன் தோல் மீது சாய்ந்து கொள்கிறாள் அவன் அவளது தலையை தடவியபடி அவளை பார்க்கிறான் அவளது கண்ணோரம் நீர்த்துளி இதை கவனித்த அவன் 

அவளின் கண்ணீரைத் துடைத்து கன்னங்களை பிடித்து கொண்டு அவளயே உற்று நோக்கி அழாதே என்று தலையசைத்து நான் இருக்கிறேன் என்கிறான் அவள் புன்னகைக்கிறாள் முத்தமிடுவது போல் மிக நெருக்கமாக சென்று மூக்கோடு மூக்கு உரச அவள் அவனை வெட்கத்தில் தள்ளிவிட்டு எழுந்து மரத்தின் அருகே ஓடுகிறாள் இவனும் அவள் பின்னாலே ஓடுகிறான் அவனிடம் அகப்படாமல் அங்குமிங்கும் அவள் ஓடி விளையாடுகிறாள், பட்டாம்பூச்சியை பார்த்த சிறு குழந்தையைபோல அவன் அவளை துரத்த அவள் அந்த பட்டாம்பூச்சி போல அகப்படாமல் பறந்து ஓரிடத்தில் நின்று மூச்சிறைக்கிறாள் இது தான் சமயமென அவளருகே செல்கிறான் அவளின் இதயம் வேகமாக துடிக்க அவன் அவளது இதழ்களை கைகளால் பற்ற தற்போதுதான் சுயநினைவு வந்தது போல் அவனை அவசரமாக தள்ளுகிறாள் அவன் கீழே விழுகிறான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டு அவர்கள் எதிரே கையில் ஒரு நாயுடன் நின்று கொண்டு இருந்த சிறுமி பலமாக அவர்களைப்பார்த்து சிரிக்கிறாள் இதை கவனித்த இவர்கள் திருடப்போன இடத்தில் மாட்டிக்கொண்ட திருடர்களைப்போல முழிக்கின்றனர் தற்போது தான் தாங்கள் பூங்காவில் இருக்கிற உணர்வு வர நாணத்தில் அவள் தலைகுனிய அவன் மேலே எழுந்து அவன் மீதான புழுதிகளை தட்டிவிட அப்போது திடீரென வானத்திலிருந்து ஒரு சப்தம் அவன் நிமிர்ந்து பார்க்கையில் அந்த சிறுமியின் கையிலிருந்த நாய் ரத்த வெள்ளத்தில் கீழே கிடக்கிறது அதிர்ச்சியில் அவன் வானத்தை நோக்கி பார்க்கிறான் நான்கைந்து ஹெலிகாப்டர்கள் மேல பறந்து கொண்டு இருக்க அதிலிருந்து குண்டுகள் மாரியென பொழிகிறது இவன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான். 

குண்டுகள் மனிதர்கள் மீது பட்டு ரத்தம் தரையில் விழுந்த நீர்த்துளிகளைப்போல தெறிக்கிறது எங்கு நோக்கினும் மரண ஓலம் அந்த சிறுமி பயத்தில் அழுதுகொண்டு நிற்கிறாள் அவனது காதலியை பார்க்கிறான் கண்ணீரோடு வேண்டாமென தலையசைக்கிறாள் உடனே அவன் அந்த சிறுமியை நோக்கி ஓடுகிறான் அதைக் கண்ட அதிவுற்ற அவள் நானும் உன்னோட வரேன் என்று அவன் பின்னால் ஓடி வருகிறாள் குண்டுகள் சிறுமியின் இரண்டு பக்கங்களிலும் போய்க்கொண்டு இருக்கிறது அதிர்ஷ்டவசமாக சிறுமி மீது படவில்லை பயத்தில் நடுநடுங்கிகொண்டிருக்கிறாள் ஆனால் அந்த இளைஞனை குண்டுகள் விட்டு வைக்கவில்லை முதல் குண்டு முதுகில் பாய்கிறது 

பாப்பா பயப்படாதே 

அங்கேயே நில்லு நான் வரேன்

பின்னால் வந்த காதலி மீது குண்டு பட அவள் நிலை தடுமாறி கீழே விழுந்து பள்ளத்தில் உருண்டு ஒரு புதருக்குள் மறைகிறாள் 

இரண்டாவது குண்டு அவனது காலில் பட தடுமாறுகிறான் அடுத்து சரமாரியாக அவன் மீது குண்டு பட்டு ரத்தம் காற்றில் பறக்கிறது புலி மானை தாவி பிடிப்பது போல அவன் தாவி அந்த சிறுமியின் மீது விழுகிறான் 

பூங்காவில் உள்ள அனைவரும் குண்டு மழைக்கு இரையாகி கொண்டிருந்தனர்.

அரைமணி நேரம் இடைவிடாது பெய்த குண்டு மழையில் தைமூர் எப்படி டெல்லியை தரைமட்டம் ஆக்கினானோ அவ்வாறு பூங்கா தரைமட்டமாகி செங்குருதியின் ஊற்றானது...

அரைமணி நேரத்திற்கு பிறகு குண்டு மழை நின்று ஹெலிகாப்டர்கள் வேறு திசையை நோக்கி பறந்தன. பூங்கா போர்களத்தைவிட கொடுமையாக காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் பிணங்கள், சிதறிய உடல்கள். 

புதரில் விழுந்த அந்த பெண் கண் விழிக்கிறாள் மெதுவாக எழுகிறாள் அவளால் அவளது வலது கையை நகர்த்த முடியவில்லை குண்டு பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வலிந்து கொண்டு இருந்தது, இடது கையை ஊன்றி மெல்ல மெல்ல எழுந்து நிற்கிறாள். 

பூங்கா முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது புகையை விலக்கியவாறு பூங்காவை பார்க்கிறாள் அவள் கண்ட காட்சி ஒரு கணம் அவள் மூச்சையே நிறுத்தியது தற்காப்பு பயிற்சி செய்து கொண்டு இருந்த சிறார்கள் சடலமாக கிடக்கின்றனர்

ஒரு சிலரின் கண்களில் குண்டு பாய்ந்து இருந்தது அவளுக்கு பட்ட காயத்தின் வலியை விட அவள் கண்ட காட்சிகள் மிகவும் வலியை தந்தது இப்படி ஈவு இரக்கமின்றி மக்கள் கொல்லப்பட்டுகிடந்தனா் அவள் தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டு முன்னோக்கி செல்கிறாள். 

ஜாலியன் வாலாபாக்கில் டயர் நடத்திய வெறியாட்டத்தில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர், சிரியாவில் நடந்த உள் நாட்டு போரில் அதிகம் பாதிப்படைந்தது சாதாரண மக்களே இவ்வாறான எண்ண அலைகள் வந்து போகமால் இல்லை. 

அவற்றை கடந்து மேலே வருகிறாள் எத்திசையிலும் உயிரற்ற உடல்கள், மரண ஓலம் அவளுக்கு பதற்றம் அதிகரித்து உடல் நடுங்குகிறது, நடுக்கத்தால் தடுமாறி கீழே கிடந்த பந்தின் மீது இடிக்கிறாள். அந்த பந்தின் அருகே இவள் பூங்காகுள் வரும் போது விளையாடி கொண்டிருந்த தந்தை மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கின்றனர் இதைப் பார்த்து பயந்து அழுகையுடன் கத்தி கொண்டே வேகமாக ஓடுகிறாள். அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்ற ஐயம் அதிகரிக்க நாலாபுறமும் அவனை தேடுகிறாள் மரத்தை கண்டறிந்து அதற்கு எதிர் திசையில் செல்கிறாள். தூரத்தில் யாரோ தவளை போன்று தரையில் கிடக்கிறார் அதைப் பார்த்ததும் அவனாக இருக்க கூடாது என்று சொல்லிக் கொண்டே முன்னோக்கி செல்கிறாள். 

முன்னோக்கி போக போக அவளது இதயத்துடிப்பு சீராக இல்லை வழக்கத்தை விட மிக வேகமாக துடிக்கிறது. அது அவன்தான் என மனது சொல்கிறது பெருக்கெடுத்த கண்ணீரோடு அமர்கிறாள் அவனது முதுகு சல்லடையாக குண்டுகளால் துளைக்கப்பட்டு அந்த துளைகளில் இரத்தம் வலிந்து கொண்டு இருந்தது சிறிது நேரத்திற்கு முன் தான் சாய்திருந்த தோல்பட்டையில் ரத்தம் கொட்டியது அவனை திருப்பி மடியில் வைத்து கொள்கிறாள் அது அவன்தான் இப்போது தான் அவளது கண்கள் நம்புகிறது கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறாள் அவனது உயிர் அவளுக்காக காத்திருந்தது போலும் கடைசி நிமிடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது அவளது கண்ணீரைத் துடைக்கிறான் சிறிய புன்னகையுடன் உதட்டில் கைவைத்து காட்டுகிறான் இறுதி முத்தத்தை எதிர்பார்த்து அழுதுகொண்டே அவன் தலையை தூக்கி மூக்கோடு மூக்கு உரசி அவனை முத்தமிட அவன் உயிர் பிரிகிறது அவள் கன்னத்தில் இருந்த அவனது கைகள் கீழே விழ அவள் கதறிதுடிக்கின்றாள் அவன் விழுந்த இடத்தில் இருந்து அவனால் காப்பாற்றப்பட்ட சிறுமி கண் விழிக்கிறாள்.. 

அக்கா...

அவள் அந்த சிறுமியை அணைத்து கொள்கிறாள்... 

ஆம்புலன்ஸ் சப்தம் ஒலிக்க.. 

எங்கோ உள்ள ஒரு டீ கடையின் ரேடியோவில் விடைகொடு எங்கள் நாடே என்ற பாடல் ஒலித்து கொண்டு இருக்கிறது. 


 


Rate this content
Log in

More tamil story from Nithi Anand

Similar tamil story from Tragedy