Pragadeesh Murugan

Comedy Others

4  

Pragadeesh Murugan

Comedy Others

சிக்குனானா சேகரு...

சிக்குனானா சேகரு...

3 mins
298


டேய் .. மதிய சாப்பாடு ஹாட் பாக்ஸ்ல வச்சுருக்கேன் எடுத்து வச்சு சாப்டுக்கோ நாங்க ரெண்டுபேரும் நைட் எட்டு மணிக்கெல்லாம் வந்துருவோம் நான் வந்து டின்னர் செஞ்சுதறேன். வெளில எங்கேயும் போனா கதவை லாக் பண்ணிட்டு போடா என்று மனோவிடம் சொல்லிவிட்டு உடல்நல குறைவால் இருந்த தனது உறவினரை பார்க்க கிளம்பினர் ரவியும், மோகனாவும்....


அன்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தான் மனோ..... வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனோவிற்கு எந்த நிகழ்ச்சியின் மீதும் பெரிதாக பற்றில்லாமல் தொலைக்காட்சியை அனைத்துவிட்டு தன் அலைபேசியை கையிலெடுத்தான்..... போலீஸ் கெடுபிடி காரணமாக நீண்ட நாட்களாக அந்த மாதிரியான படங்கள் பார்க்காமல் இருந்த மனோவிற்கு ... வீட்டில் தனிமையில் இருக்க அந்த படங்கள் பார்க்க வேண்டும் என்ற தோன்றல் வர அவனது அலைபேசியில் அவனது ஆஸ்த்தான இணையப்பக்கத்தை திறந்தான்....



லட்சகணக்கான வீடீயோக்களின் மத்தியில் ஐந்து நிமிட தேடலுக்கு பின் முதல் வீடியோவை ஓடச்செய்து ஆர்வமாக பார்க்க தொடங்கினான்..... அவன் பார்க்க தொடங்கிய முப்பதாவது நொடியிலேயே அவனது நண்பனிடம் இருந்து வந்தது அழைப்பு , கடுப்புடன் அழைப்பை நிராகரித்து மீண்டும் வீடியோவில் மூழ்கியவனுக்கு அடுத்த ஒரு நிமிடத்தில் வந்தது அடுத்த அழைப்பு ... திரையில் புதிய எண்களை காண்பிக்க அந்த அழைப்பையும் நிராகரித்து வீடியோவை தொடர்ந்தான்...... சிறிதுநேரம் வீடியோ ஓட படமும் முக்கிய கட்டத்தை எட்ட ஆர்வமாக பார்க்க தொடங்கியவனுக்கு சோதனையாக வந்தது அடுத்த அழைப்பு.....



இம்முறை அழைத்தது அவனது அத்தை அதனால் அழைப்பை நிராகரிக்காமல் தானாக அணையும் வரை காத்து இருந்தான் ஒருவழியாக அழைப்பு முடிந்தது என்று தொடர்ந்தவனுக்கு மீண்டும் அவனது அத்தையிடம் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வர வேறுவழியின்றி அழைப்பை ஏற்றான்..... அத்தை அவனது தந்தையை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை என கூற மனோ அவளிடத்தில் விவரத்தை கூறினான்.... பின் வழக்கமான நலவிசாரிப்புகளை தொடர்ந்தால் அத்தை... படிப்பு குடும்பவிவகாரம் என பேச்சு நீண்டுகொண்டே போக அத்தையிடம் பேசிக்கொண்டே எழுந்து திரும்பியவனுக்கு முன் சிலை போல் நின்றார் அவன் தந்தை ரவி ..... தீடிரென அவரை கண்டவுடன் சற்று பயந்தேபோனான் மனோ..... ரவி அழைப்பில் யார் என சைகையில் வினாவ ... பின் அலைபேசி கைமாறியது....



மனோ மோகனாவிடம் சென்று ஏன் உடனே வந்துவிட்டீர்கள் என கேட்டான்..... அவர் ரொம்ப மோசமா இருக்காராம் டாக்டர் தாங்காதுனு சொல்லிட்டாராம் அதுனால நீங்கி இன்னைக்கு வர வேணாம் நாங்களே தகவல் சொல்றோம்னு சொல்லிட்டாங்கடா அதான் வந்துட்டோம் என்று கூற...... இதனை கேட்டுக்கொண்டு இருந்த மனோவிற்கு தனது அலைபேசியில் தான் பார்த்த வீடியோ நினைவுக்கு வர அவனை பதற்றம் தொற்றிக்கொண்டது. அப்பா பார்க்கும் முன் எப்படியாவது அலைபேசியை வாங்கி விடவேண்டும் என்று நாய்குட்டி போல அவரை பின்தொடர்ந்தான்.... இருந்தும் அவனது தந்தை தற்போது பேச்சை முடிப்பதாக தெரியவில்லை.... 



இதனிடையே மோகனா அவனை அழைத்து கடைக்கு சென்று பால் வாங்கிவர சொல்ல அவன் பீதியானான்....கையில் பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்கு செல்லாமல் தந்தையின் பின்னே சுற்றிக்கொண்டு இருக்க இதை பார்த்த மோகனா டேய் தலைவலிக்குதுடா சீக்கிரம் வாங்கிட்டு வாடா காபி குடிக்கணும்னு சொல்ல வீட்டை விட்டு வெளியரே அடிமேல் அடிவைத்து நடக்க தொடங்கினான் அவனது கவனம் முழுவதும் தந்தையின் கைகளில் இருந்த அலைபேசியிலும் அவரது வார்த்தைகளிலுமே இருந்தது பேச்சை முடித்துவிடமாட்டாரா என ஏங்கியவன் பேச்சை முடிக்க கூடாது என வேண்டிக்கொண்டே வீட்டை விட்டு நீங்கினான்..... என்னாச்சு இவனுக்கு என குழப்பத்துடன் இவனது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தாள் மோகனா.....



வீட்டை விட்டு நீங்கியவன் இடியின் இடையே தோன்றும் மின்னல் போல கடையை நோக்கி விரைந்தான்.. கடையில் இருந்த கூட்டத்திற்கு இடையே தனது முழுத்திறமையையும் காட்டி ஒரு பால் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கிவிரைந்தான்.... வீட்டிற்கு வந்தவன் அப்பா கண்களை மூடி நாற்காலியில் அமர்ந்த்திருந்ததை பார்த்து அதிர்ந்தான்.... மெல்ல உள்ளே வந்தவனுக்கு அடுக்கடியில் அம்மாவின் பேச்சு சத்தம் கேட்க அங்கு செல்ல அடுத்த அதிர்ச்சி அலைபேசி தற்போது அம்மாவின் கைகளில் , ஆம் அப்பாவை கூட சமாளித்துவிடலாம் அம்மாவை சமாளிப்பது மிக கடினம்.... வேறுவழியின்றி என்றும் இல்லாத திருநாளாக அடுக்கடியில் அம்மாவிற்கு எடுபிடியாக மாறினான்..... ஏற்கனவே பயத்தின் உச்சத்தில் இருந்தவனுக்கு அடுத்த வில்லனாக வந்தான் சிலிண்டர் போடுபவன்.....



அம்மா ...சிலிண்டர் வந்துருக்கு என வீட்டின் வாசலில் வந்து நிற்க ஒருவழியாக பேச்சை முடிப்பாள் அலைபேசியை வாங்கிவிடலாம் என காத்திருந்த மனோவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது ஆம் பேச்சை நிறுத்திய பாடில்லை ..... தனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளிலும் தனது அத்தையை மனதிற்குள் வசைபாடிக்கொண்டிருந்த மனோவை அழைத்தார் ரவி.... அம்மாவை பார்த்துக்கொண்டே அப்பாவிடம் சென்ற மனோவிடம் , சிலிண்டர் போட்டவருக்கு பணம் கொடுக்க வேண்டும் இவரிடம் சில்லறை இல்லையாம் கடைக்கு சென்று சில்லறை மாற்றி கொடுத்துவிடு என்று கூறினார் ரவி.. அப்பாவிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சிலிண்டர் போட்ட ஆளை முறைத்த படியே அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினான் மனோ ......



சில்லறை எளிதில் கிடைக்கவில்லை நீண்டதேடுதலுக்கு பின் சில்லறை மாற்றி கொடுத்துவிட்டு வீட்டிற்கு விரைந்தான் மனோ....



வீட்டினுள் நுழைந்தவன் மயான அமைதி நிலவியது ... கூடத்தில் இருந்த தந்தையை காணவில்லை..... மெல்ல அடுக்கடைக்கு சென்றான் அங்கு அம்மாவையும் காணவில்லை.... வீட்டின் அமைதியின் மூலம் அலைபேசி பேச்சு முவுற்றது என்பதை உணர்ந்தான்.... அவனை அறியாமல் அவன் கண்களில் நீர் தேங்கியது.... அடுக்கடையில் இருந்து கூடத்திற்கு வந்தவன் முன் கண்களில் கோபம்கொபள்ளிக்க நின்றிருந்தாள் மோகனா பீறிட்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு நின்ற மனோவை பார்த்து கோபமாக பேச தொடங்கினாள் மோகனா .........



ஏன்டா போனுக்கு சார்ஜ் கூட போட்டு வைக்கமாட்ட முக்கியமான விஷயம் பேசும்போது தான் உன் போன் ஸ்விச் ஆப் ஆகும் ..... இப்ப தான் சார்ஜ்ல போட்ருக்கேன் சார்ஜ் ஏறுனதும் அத்தைக்கு போன் போட்டு குடு.......



இதைக்கேட்டு பெருமூச்சு விட்டான் மனோ , அவனையும் அறியாது கண்களில் தேங்கியிருந்த நீர் வழிய தொடங்கியது......



Rate this content
Log in

Similar tamil story from Comedy