சீதாராம்
சீதாராம்
இந்தியாவின் பழம்பெரும் இதிகாசமான இராமாயணத்தின் தலைமை கதாபாத்திரங்கள் தான்
ஸ்ரீ ராமர் மற்றும் சீதாப்பிராட்டி.
ராமரை போன்ற கணவன் வேண்டும் என்று அனைத்து பெண்களின் எண்ணமாக இருக்கும்.
வால்மிகி, கம்பர், துளசி தாசன் போன்றோர் எழுதிய காவியத்தை மாற்றி அமைக்க எண்ணம் எல்லாம் இல்லை.
இது என்னுடைய ராம் மற்றும் சீதையின் கதை...
இராவணனிடமிருந்து சீதையை ராமன் மீட்டெடுத்தார். அங்கிருந்த அனைவரும் சீதையை அக்னியில் இறங்கி பரிசுத்தமானவள் என்று நிரூபிக்கமாறு கூறினர். கலங்கிய விழிகளுடன் ராமரை நோக்கினாள். ஸ்ரீ ராமரும் அதனையே ஆமோதித்தார்.
அக்னி வளர்க்கப்பட்டது. அதில் பிரவேசித்து தான் பரிசுத்தமானவள் என்று நிரூபித்தாள். ஸ்ரீ ராமரும் அக்னி பிரவேசதிற்கு தயாரானார். அனைவரும் அவர் செய்ய போகும் செயல் தேவையற்றது என்று கூறிய பொழுது தானும் மனைவியை சில காலம் பிரிந்து இருந்ததால் நானும் அவளுக்கு என்னை நிரூபிக்க வேண்டிய சூழலில் உள்ளதாக கூறி அதனை அனைவரும் முன்னிலும் அக்னி பிரவேசம் மேற்கொண்டார்.
இச்செய்தி அனைத்து இடங்களிலும் பரவியது. அயோத்தியில் மக்கள் யாரும் இச்சம்பவத்தை ஏற்றுகொள்வதாக இல்லை.
ஸ்ரீ ராமரும் தன் மக்களுக்கு எடுத்து கூறினார். ஆனால் சிலரின் வாயை மட்டுமே பூட்ட முடிந்தது.
சீதை கர்ப்பமுற்றிருக்கும் செய்தி அறிந்து அவளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு அயோத்தியில் அனைவரும் ஒன்று திரண்டு அரண்மனையை முற்றுகை இட்டனர்.
அவர்களை அடக்க யாராலும் முடியவில்லை. நடப்பவற்றை அறிந்த சீதை நாட்டை விட்டு வெளியேற தயாரானாள். ஸ்ரீ ராமரும் அவளுடன் வெளியேற போவதாக அறிவித்தார்.
மக்களிடயே சலசலப்பை உண்டாக்கியது. ஸ்ரீ ராமர் தன் முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
தன் மக்களிடம், அன்று கைகேயி மாதா என்னை தான் 14 வருட வனவாசத்திற்கு அனுப்பிவைத்தாள். ஆனால் என்றும் எனக்கு துணையாக இருப்பேன் என்று என்னுடன் வனவாசம் வந்தவள் சீதை. இன்று அவளுக்கு ஒன்று என்று என்னும்போது என்னால் அவளை தனியாக விட முடியாது என்று அனைவர் முன்னிலையிலும் கூறினார்.
குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் சமமே. அவரவர்களுக்கென்று தனி தனி விதிமுறைகள் எல்லாம் இல்லை. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் அவளுக்கு துணையாக என்றும் நான் உடன் இருப்பேன் என்று கூறி ராஜ்ஜியத்தை பரதனிடம் ஒப்படைத்து விட்டு கானகம் புறப்பட்டார்.
லவகுசன் பிறப்பிற்கு பின் சிறிது காலம் கானகத்தில் தங்கிய பின்னரே நாடு திரும்பினர். அயோத்தி மக்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறினை உணர்ந்து நாடு திரும்பிய
ஸ்ரீ ராமசந்திர பிரபுவையும் சீதாப்பிராட்டியாரையும் அவர்களின் அன்பு புதல்வர்களான லவகுசனையும் வரவேற்றனர்.
