யாருக்கு யார் வில்லன்?
யாருக்கு யார் வில்லன்?
பயத்தைப் பார்த்து பயப்படும் ஒரே ஆள் நான்தானா?
என்னைக் கண்டு அது பயந்தோட
அதைக் கண்டு நான் பயந்தோட
எனக்கு பயந்து அது பறக்க
அதைக் கண்டு நான் பாய
யாருக்கு பயம்? எனக்கா? அதற்கா?
யாருக்கு யார் வில்லன்?
அற்பப் பூச்சியை காலடியில் நசுக்கும் வீர மனிதகுலம்
அலறுவதா அதைப் பார்த்து?
கரப்பான்பூச்சியைக் கண்டால் எனக்கு பயம்
கரிய சிறகுகள் நயவஞ்சகரின் இருண்ட மனதைக் காட்டிக் கொடுக்கிறனவா?
கோணிநடக்கும் கால்கள் கயவர்களின்
கோணல் புத்தியை பிரதிபலிக்கின்றனவா?
என் அனுமதியின்றி என்மேல் ஊர்ந்து படரும்
காமுகனை அடையாளம் காட்டுகின்றனவா?
எனக்குப் பாடம் கற்றுத் தரும் இனம்
என்னை ஓட ஓட விரட்டுவதேன்