வரமாக வந்த கடவுள்
வரமாக வந்த கடவுள்
வரமாக வந்த கடவுள்
இருக்கும்போது கற்றுக் கொடுத்தேன் என்பதை விட, ,இறந்தபிறகு அதிகமாய் கற்றுக்கொடுக்கும் ஜீவன் தான் அப்பா,
அவர் அருமை இருக்கும்போது நமக்கு தெரியாது, அவர் போன பிறகு அதிகமாய் அவருடைய இழப்பை நாம் உணர்ந்து கண்ணீர் விடுவோம்,
என்றும் ஒரே இதயம் அப்பா,,
தான் அனுபவித்த கஷ்டங்களை தனது பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்று நினைக்கின்ற ஒரே இதயம் அப்பா,,
தான் பார்க்காத உலகத்தை,
தன் பிள்ளை பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் தான்அப்பா,,
அப்பா,, நம் கண்களுக்கு தெரியாத கடவுள்,
அப்பாதான் தனக்காக துடிக்காத இதயம்,
தனக்காக ஓடாத கால்கள் ,
தனக்காக உழைக்காத கைகள்
தனக்காக சேமிக்காத பணம்
களைப்பை அறியா கதிரவன்,
இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்,
கடவுளின் மறுபிறப்பு,
தெய்வங்களை தோற்கடிக்கும்,
அப்பாவின் அன்பு ,
அவர் கடவுள் கொடுத்த வரம் அல்ல,
வரமாக வந்த கடவுள் அவர்தான் இந்த உலகில் நமக்கு..
