வரம்
வரம்
துறவறம் தவமென்பீரோ..
இல்லறம் தவமென்பீரோ..
மானுடல் தவமென்பீரோ..
மயில்நடம் தவமென்பீரோ..
கோவிற்சிலை தவமென்பீரோ..
குயிலொலி தவமென்பீரோ..
மாதர் தவமென்பீரோ..
அந்திமாலை தவமென்பீரோ..
தவமென தனியொன்று வேண்டுமோ இவ்வாழ்வுதனில்..
வாழ்வே தவமாயின் கிடைக்கா வரமென ஒன்றுண்டோ இவ்வுலகில்...